வளரும் அறிவுசீவிக்கு ஒரு அறிவுரை

தீவிர அறிவுசீவிகளெல்லாம் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு, மிச்சமீதி இருக்கிற நேரத்தில் ஜாலியாக டைம் பாஸ் பண்ணுகிறார்கள். இங்கே வெட்டியாக புத்தகங்களைப் பேசுவதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை – அதிலும் அந்தரங்கம் கிந்தரங்கம் என்று தடாலடி வார்த்தைகள்! என்ன ஆச்சு பைராகிக்கு?

இருந்தாலும் மனசு கேட்கிறதில்லை – ஒரு புத்தகம் பிடித்துப் போய்விட்டால் நாலு எழுத்தைக் கிறுக்காமல் இருக்க முடிகிறதா? இதோ இப்போது அஞா போன்ற இளம் வாசகர் இருக்கிறார். சுஜாதாவின் எழுத்தைதான் படிக்கிறார் – அவர் ஏன் எழுத வேண்டும்?

இத்தனைக்கும் நான் ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசிய சா. கந்தசாமியின் ‘வேலையற்றவன்’ குறுநாவல் தொகுப்பை மும்முறை முயற்சித்துத் தோற்றவர். சுஜாதாவைப் பற்றி இப்படி எழுதுகிறார். என்ன சொல்ல?

அஞா, உங்களுக்கு இதுதான் என் அறிவுரை: படிமம் குறியீடு என்று பெரிய பெரிய வார்த்தைகளுக்கு இடம் தருகிற புத்தகங்களைப் பேசி தங்கள் இலக்கிய வாசிப்பை உயர்த்திக் கொள்பவர்கள் கனமான, காத்திரமான எழுத்தைச் சுமந்தபடித் தேங்கி நின்றுவிடுகிறார்கள் – அவர்களுக்கு சுஜாதா போன்ற ஒரு முன்னோடியின் சுறுசுறுப்பான நடை வசப்படுவதேயில்லை (அஞா, ஒரு எச்சரிக்கை : நான் எப்போது உங்களிடம் அறிவுரை கேட்டேன் என்று பின்னூட்டம் போட்டால் அது கறாராக மட்டறுக்கப்படும், என்ன, ஓகேவா?).

கதை, சிந்தனை, நோபல் பரிசு என்று எல்லாவற்றையும்விட சுகமான வாசிப்பே முக்கியம். ஆம்.

ஆதலினால் காதல் செய்வீர்.
– அஞா

ஒரு ரூம், சில ரூம் மேட்ஸ், அவர்களின் அசாதாரணக் காதல்கள் என நகரும் ஒரு ஜாலி கதை. நகைச்சுவை ததும்பும் நடையில் சுஜாதா அசத்தியிருக்கின்றார்.

ஜோமோ, கிட்டா, அரிஸ், மாமா நால்வரும் ரூம்மேட் நண்பர்கள். கதாநாயகன் ‘ஜோமோ’, மாடலான அபிலஷாவை மௌனமாக காதலிக்க ஆரம்பிக்கின்றான். ஜோமோவின் காதல் இருவீட்டார் சம்மதத்தோடு கல்யாணம் நோக்கி டேக் ஆப் ஆகும் சமயத்தில், மணப்பெண் ஆள்மாறாட்டம், போதைப்பொருள் கடத்தல் என ஜோமோவின் சந்தோஷத்தில் இடி விழுகின்றது. அதேசமயம் கணிதப் பேராசிரியரான, நண்பர்களிடம் ‘அரிஸ்டாட்டில்’ எனப் பெயர்பெற்ற அரிஸ், கீழ்வீட்டுப் பெண்ணுக்கு கணிதமும் ஜென் தத்துவமும் சொல்லிக் கொடுக்கப் போய், அந்தப் பெண் அரிஸை காதலிக்கத் துவங்குகிறாள். இன்னொரு ட்ராக்கில், பெங்களூரில் ஒரு சந்தித்த போலிஸ்காரியை (கஸ்தூரி) காதலிக்கும் கிட்டாவும், கராத்தே பயிற்சிக்கு இவர்கள் ரூமில் வந்து தங்கும் கஸ்தூரியும் அவளின் தமிழ், கன்னடம் கலந்த பாஷை சங்கடமும் என கலாட்டா. சரியாக, இதேசமயம் இவர்கள் ரூமுக்கு வரும் ‘மாமா’வின் மனைவியும் தமிழ் பேராசிரியையுமான நீலா என இன்னொரு ட்ராக். நான்கு ட்ராக்குகளும் ஒன்றாக ஆரம்பித்து, சேர்ந்து, பிரிந்து, குழம்பி, ஒருவழியாகத் தெளிந்து, கடைசியில் சுபம் என முடியும்வரை எழுத்துநடையில் கலக்கியிருக்கிறார் சுஜாதா.

கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் நகைச்சுவை ஏகத்துக்கும் விரவிக்கிடக்கிறது. குறிப்பாக தமிழ் கலந்த கன்னடத்தில் பேசிக்கொண்டிருக்கும் கஸ்தூரிக்கும், குறுந்தொகை, சிலப்பதிகாரத்திலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசும் பேராசிரியை நீலாவுக்கும் நடக்கும் துரதிஷ்டவசமான அறிமுக உரையாடல் டாப். நீலாவின் செந்தமிழ் காமெடிகளும் சூப்பர். ..:)

கதையின் தலைப்புக்கு ஏற்ப கதை முழுதும் காதல்கள். போலிஸ், மாடல், பேராசிரியை என சமூகத்தில் கல்யாணத்திற்கென்று அதிகம் விரும்பப்படாத பெண்களை கதாநாயகிகள் ஆக்கியிருப்பதும், ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் கஸ்தூரி தீர்த்து வைக்கும் விதங்களும் சுவாரஸ்யம்.

மொத்தத்தில், கவித்துவமான தலைப்பில் ஒரு ஜாலி என்டர்டையினர், from Sujatha.

Advertisements

6 thoughts on “வளரும் அறிவுசீவிக்கு ஒரு அறிவுரை

 1. //சுஜாதாவின் எழுத்தைதான் படிக்கிறார் – அவர் ஏன் எழுத வேண்டும்?//

  இந்தக் கேள்வியை என்னோட நண்பர்கள்கூட கேட்டிருக்காங்க… உண்மைல நான் எழுதறதுக்கு காரணங்கள்: 1. எழுத்துத் தமிழ் மறக்காம இருக்கறதுக்கு. 2. ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு ஒரு ப்ராக்டீசா இருக்கறதுக்கு. 3. ஒரு புத்தகம் படிச்சு முடிச்ச உடனே தோண்ற உணர்வுகளை அப்படியே பிடிச்சு வச்சு, கொஞ்ச காலத்துக்கு அப்புறமா மீட்டுப் பார்க்கறதுக்கு. 4. படிக்கறதுக்கு அட்லீஸ்ட் ஒருத்தராவது இருக்கறதால…

  //இத்தனைக்கும் நான் ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசிய சா. கந்தசாமியின் ‘வேலையற்றவன்’ குறுநாவல் தொகுப்பை மும்முறை முயற்சித்துத் தோற்றவர்.//

  ஆகா… நான் ஒருமுறைதான் படிக்க ட்ரை பண்ணேன்.. சுஜாதா, ஆடம்ஸ் மாதிரி ஒரு துள்ளல் நடை, க்ரிப் இல்லாததோட, நான் சொன்ன மாதிரி, நேரம் இல்லாத காரணத்தால ரெண்டு நாளைக்கு ஒருமுறை படிக்கும்போது அவரோட ப்ளாஷ்பேக் – நிகழ்காலம் ரெண்டையும் மாறி மாறி சொல்ற எழுத்துநடைல இருந்து மெயின் கதையை சரியா பிடிக்க முடியாம போய்ட்டுது.. எல்லாத்துக்கும் மேல, இப்படியான கதை படிச்ச முன் அனுபவம் இல்லாததும் ஒரு காரணம்.

  //அஞா, உங்களுக்கு இதுதான் என் அறிவுரை: படிமம் குறியீடு என்று பெரிய பெரிய வார்த்தைகளுக்கு இடம் தருகிற புத்தகங்களைப் பேசி தங்கள் இலக்கிய வாசிப்பை உயர்த்திக் கொள்பவர்கள் கனமான, காத்திரமான எழுத்தைச் சுமந்தபடித் தேங்கி நின்றுவிடுகிறார்கள் – அவர்களுக்கு சுஜாதா போன்ற ஒரு முன்னோடியின் சுறுசுறுப்பான நடை வசப்படுவதேயில்லை. கதை, சிந்தனை, நோபல் பரிசு என்று எல்லாவற்றையும்விட சுகமான வாசிப்பே முக்கியம். ஆம்.//

  மிகச்சரியான நேரத்துல பயனுள்ள அறிவுரை.. சில நேரங்கள்ல, சுஜாதாவோட எழுத்துல டெப்த் இல்லையோன்னு யோசிச்சிருக்கேன். ஆனா, அவரோட புத்தகங்கள் படிச்சப்புறம் கிடைக்கற மன நிறைவு, உற்சாகமா ஒரு (குறு)விமர்சனம் எழுத வைக்கற மன நிறைவு, நான் ட்ரை பண்ண மற்ற எழுத்தாளர்களோட பல புத்தகங்கள்ல கிடைக்கறதில்லை.

  1. உங்க கருத்துகளை நேர்மையா பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிங்க, உங்களை மாதிரியான வாசகர்கள்தான் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் சந்தோசம் தராங்க.. சுஜாதாவின் பரிபூர்ண ஆச்கிகள் உங்களுக்கு இருக்கும்னு நம்பறேன்.

   ஆமா, நாங்க எல்லாம் என்ன எழுதி கிழிச்சுட்டோம்னு நீங்க ப்ளாக் ஆரம்பிக்க ப்ராக்டீஸ்லாம் பண்றீங்க? உங்களுக்கே இதெல்லாம் ஓவரா இல்ல?

   1. 🙂 நன்றி..

    என்னோட சிற்றறிவுக்கு எட்டின வரைல ப்ளாக் ஆரம்பிச்சா கொஞ்சம் பெருசா, அடிக்கடி எழுதணும். ஹிட்ஸ், கமென்ட் எல்லாம் ரகசியமா எண்ணிட்டு இருக்கணும்.. இதுக்கெல்லாம் முன்னோட்டமா, கூகிள் ப்ளஸ்ல விரும்பின நேரத்துல விரும்பின தலைப்பு பத்தி கொஞ்சம் எழுதி பார்க்கலாமேன்னுட்டுதான்…

    1. ஒரு திட்டத்தோடதான் இருக்கீங்க போல! ஆனா, “ஹிட்ஸ், கமென்ட் எல்லாம் ரகசியமா எண்ணிட்டு இருக்கணும்.” னு அவசியமில்லைங்க. வர்ட்பிரஸ்ல நம்ம இஷ்டத்துக்கு ஹிட் கவுண்ட்டை மாத்திக்கலாம், கமெண்டு பத்தி சொல்லவே வேணாம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s