மத்தியவயதுக்காரனின் காதல்

நண்பர் ரா. கிரிதரனின் முதல் கவிதையை அதன் ஆவன மதிப்புக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

வழக்கம் போல கூகுள் ப்ளஸ்ஸில் திருடப்பட்டது.

கனத்தத் திரை விலகி
இடம் பெயர்கிறது
விழிக்கத் தவித்த
ஓர் துல்லியமான காதல்

ஆட்டம் முடிந்ததென
கூடுக்குள் ஒடுங்க மறுத்த மனம்
இடைவிடாது பெய்தும்
ஈரமாகாத தளம்.

உள்ளிருந்தது தெரியாத
பிரிவறியா நிகழ்தலின்
முதல் இருப்புணர்வு
தொட்டால் கானல்
துளிர்த்தால் விருட்சம்

எஞ்சியுள்ள இரைப்பைப்
பதனப்படுத்தி அடைகாத்து
காட்டுத்தீயாக்கும் திண்மை
அவன் வசப்பட்டது எப்படி.

பதுங்கும் வனவிலங்கு அல்ல –
தொலைதூரச் சுனாமி

ஆழக்கடல் தரையில்
மண்மேகத்திடை
நத்தையின் விழிப்பு.

8 thoughts on “மத்தியவயதுக்காரனின் காதல்

    1. அரங்கேற்றம் ஆனாதானே சார் டான்ஸ் ஆடினதா கணக்கு?

     நண்பர் தன் தளத்திலும் கவிதை எழுதவில்லை, கூகுளில் பாத்தேன், இணையத்தில் வேறெங்கும் எழுதலை. அதனால, முதல் கவிதை அப்படின்னு போர்டு போட்டு இங்கே கொண்டு வந்துட்டேன். நாளையும் பின்னையும் நண்பர் பெரிய கவிஞரா பேசப்படும்போது, “நட்பாஸ் நடாத்திய ஒழுங்கறு இணையதளத்தின் வழியாக அன்னாரின் முதல் கவிதை பெருவாரியான வாசகர்களிடம் அறிமுகம் பெற்றது” அப்படின்னு வரலாற்றில் நாமலும் இடம் பெறலாம், இல்லையா ஸார்?

     உங்களோட முதல் கவிதைகூட இங்கதானே வந்தது? இருபெரும் கவிப்பேராளுமைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமையை எனக்கு நீங்க ரெண்டு பெரும் தந்திருக்கிங்க, நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s