டார்ச்சர் பண்றாங்க மைலார்ட்

என்ன காரணம் என்று தெரியவில்லை, இன்றைக்கு காரணமே இல்லாமல் உடம்பெல்லாம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. எனவே கவிதை எழதி பேயோட்ட வேண்டியதாகிவிட்டது, வாசக நண்பர்கள் மன்னிக்கவும்.

முனை திரும்பியதும் எந்தப் புலியோ பூதமோ
நம்மைத் தாக்கிக் கொண்டுபோகப் போவதில்லை
என்றாலும் மௌனத்தின் நிழலில் அதிர்கிறது
உடலே செவிகளாய்
தன் அச்சங்கள் ஓங்கியொலிக்கக் கேட்கிறது

கொம்புகளும் கூரிய பற்களுமாய் அச்சுறுத்தல்கள்
சோம்பல் முறித்து வெறிக்கப் பார்க்கும்போது
யாராவது எதுவாவது சொல்லித் தொலையுங்களேன்டா
பாவிகளா என்று உரக்கக் கூவுகிறது மனம்

ஆனால் எழும்ப மறுக்கிறது
நாக்கு.

6 thoughts on “டார்ச்சர் பண்றாங்க மைலார்ட்

  1. நிஜமாவே சூப்பரா இருக்கு, 99%சதவிகிதம் எனக்கு கவிதையே புரியாது, இது கிட்டத்தட்ட உரைநடை மாதிரி இருந்தாலும், மனித மனத்தின் பயங்களையும், மற்றவர்களின் பார்வையின் படி மனித மனம் நடக்க வேண்டிய சூழ்நிலையும், அருமையா இருக்கு

  2. பயவுணர்ச்சியை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. கவிதையின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது வரியை இலேசாக சீரமைத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துகள். நன்றி.

    • இத்தனை பேர் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா எழுதியிருப்பேன்😦

      ஊக்குவிப்புக்கு நன்றி தலைவா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s