சண்டையும் சமாதானமும்

“அவனே கூப்பிடட்டும்” என்று மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் ஜெகன். அவன் முன் ஒரு தட்டில் வாழைக்காய் பஜ்ஜியும் வெங்காய சாம்பாரும் இருந்தது. இன்னொரு தட்டில் அதே போன்ற இன்னொரு வாழைக்காய் பஜ்ஜிக்கு அருகில் கெட்டிச் சட்டினி இருந்தது. இரண்டும் அடுத்தடுத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஜெகன் சிரித்தது அதற்காகவல்ல.

புரிந்து கொள்ள முடியாத உண்மைகளையும் தத்துவ மெய்ம்மைகளையும் மாயங்களையும் கட்டற்ற கற்பனைகளையும் நினைவுகளையும் திட்டங்களையும் எதிர்பார்ப்புகளையும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட அனுபவங்களையும், ஏன், பிறர் மனக் காட்சிகளையும் இன்னும் நாம் நினைத்தே பார்க்க முடியாத எல்லாவற்றையும் உணர்த்தக்கூடியவை கனவுகள் என்று சொன்னார் யூங். தலை வரை மண்ணுக்குள் புதைந்தவனின் சிகை மட்டுமே நம் அகவுலகம் என்பதை ஜெகன் ஏற்றுக் கொள்வான், ஆனால், புதைந்தவன் தனியன் அல்ல, அவன் மானுடன், உலகில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், வாழப்போகிறவர்களின் கூட்டு நனவிலி என்று சொன்னால், என்ன செய்வது என்று தெரியாமல் அவன் திகைத்து நிற்கக் கூடும், அதற்காக யூங் அவ்வாறு சொல்லியிருக்க இடமுண்டு என்பதை அவன் மறுக்க மாட்டான்.

இரண்டு நாட்கள் முன்னர்தான் அவனுக்கு ஒரு கனவு வந்திருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு அவன் ஒரு கவிதையும் எழுதினான். அந்தக் கனவின் காரணிகளாக அவன் எது எதையோ யோசித்து, ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கண்டிருந்தான். ஆனால் அன்று மாலை நடந்த நிகழ்வுகள் அவனது எண்ணங்களைக் கலைத்துப் போட்டன.

ஜெகனோடு பள்ளி படித்த மாணவர்கள் ஒரு இணைய குழுமம் துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு வந்த செய்தி. உடனே குழுமத்துக்குப் போய் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தவன் குமரேசனின் பெயரைப் பார்த்ததும் மேற்கொண்டு வாசிக்க இயலாமல் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெகனின் விரல்கள் நிதானமாகத் தட்டச்சத் துவங்கின:

“உண்மையிலேயே புலி குமரேசன் இங்க இருக்காருங்களா?

அவருகிட்டயும் பார்த்தி கிட்டயும் ஏழாவதிலேயோ எட்டாவதிலேயோ சண்டை போட்டது, அப்புறம் பேசவேயில்ல.

அவங்க ரெண்டு பேரும் இங்க இருக்காங்கன்னா சொல்லுங்க, நான் இப்பவே வாக் அவுட் பண்ணிடறேன் 🙂

என்ன கொழுப்பு இருந்தா ஸ்கூல் விட்டு ஒண்ணா வீட்டுக்குத் திரும்பிப் போற வழியில என்னோட பேனாவை அடிச்சுப் பிடுங்கி எச்சி துப்பி தலையைச் சுத்தி தூக்கி வீசிருப்பாங்க? அன்னிக்கு வீட்டில என்ன அடி வாங்கினேன் தெரியுமா!”

நாற்பது வருடங்களை அவன் மூன்றே நொடிகளில் கடந்திருந்தான்.

 

10 thoughts on “சண்டையும் சமாதானமும்

 1. குமரேசன் பேனாவைப்பிடுங்கித் துப்பியது ஜெகனுடைய மனதில் ஒரு ஆறா வடுவை உருவாக்கிவிட்டிருக்கிறதோ.
  நாற்பது வருடங்களை மூன்று நொடிகளில் கடந்ததென்பதை விட அந்த சம்பவ சில மணித்துளிகளில் நாற்பது வருடங்கள் வாழச்செய்துவிட்டிருக்கிறதா

  உண்மையில் வாழ்வில் சில மணித்துளிகள் ஆறாவடுவாய் வாழ்வையே மாற்றியமைத்துவிடுகின்றன. அதில் சிறைப்பட்டதாய் ஆளுமை அமைந்து விடுவதும் உண்டு.

  நாற்பது வருடங்களாய்க்கடக்க முடியாத சில நொடிகள் அவை இல்லையா 🙂

  * எனது பின்னூட்டங்கள் தாமதமாவதை இட்டு மன்னியுங்கள்.தற்போது நேர நெருக்கடி மிக அதிகம்.நாட்களில் தாமதமானாலும் பொறுத்தருள்க.

  1. பின்னூட்டங்கள் தாமதமாவது பிரச்சினையில்லை 🙂 மன்னிப்பு பொருத்தருள்க எல்லாம் ஓவர் 🙂

   செய்தி வருவதற்கு முன் கனவில்தான் உணர்த்தல் நிகழ்ந்தது என்பதாலும், கனவில் ஜெகன்தான் குற்றவாளி என்பதாலும், கனவிலிருந்து விழிக்கும்போது ஜெகனுக்கு குழப்பம் இருந்தாலும் அவனுக்கு தன் நியாயங்கள் குறித்த தெளிவு இல்லாததாலும் கூட்டு நனவிலி ஜெகனைக் கடுமையாகக் குற்றம் சாட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

   🙂

   1. ஜெகனின் கூட்டு நனவிலி மனத்தில் நானும் ஒரு அங்கத்துவன் என்ற முறையில் இன்ஷெப்ஷன் படத்தில் நோலன் சிருஷ்டித்திருப்பதுப்போல .. (அப்படி நோலன் சிருஷ்டிப்பதற்கு அவர் மட்டும் காரணமல்ல கூட்டு நனவிலி மனமும் காரணம் )வெற்றிடங்களை ஜெகன் இட்டு நிரப்புகிறான் ருஷ்டித்துத்தந்தாஎன்று நினைக்கிறேன். : )

    ஒரு நாவலைப்படிக்கும்போது சொற்கள் விவரிக்கும் காட்சியையும் விவாரிக்காத காட்சியையும் தன் அனுபவகங்களினால் மனம் நிரப்புகிறது.அப்படி இடம் தந்து எழுதப்படுகிற எதுவுமே உயிர்ப்புள்லதகிவிடுகிறது.அனுபவ நினைவாகவும் தங்கி விடுகிறது.
    திரைப்படங்கள் காட்சியை சிருஷ்டித்துத்தந்தாலும் மனம் நிரப்புவதில் தான் அதன் உயிர்ப்பு நிகழ்கிறது.

    ஆக ஜெகன் இங்கு சொல்லியதை விட சொல்லாதவற்றைத்தானே என் மனம் பரவி நிரப்பும். 🙂

    1. உண்மைதான்… வாசக இடைவெளி என்பதைவிட விமர்சக வெளிச்சம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமோ? விமரிசனத்துக்கு இடமில்லை என்று சொல்லும்போது திரை விழுந்துவிடுகிறது, இல்லையா?

  1. ஏன், ஆகக்கூடாதா? நாளைக்கு அவருக்கு எண்பது வயசு ஆகலாம், நாளா நாளைக்கு எட்டு வயசு ஆகலாம் – நமக்கு இல்லாத சுதந்திரம் அவருக்கு உண்டே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s