நடுவுல ஒரு பத்தியைக் காணோம்!

..

ஆம்னிபஸ் தளத்தின்இன்றைய பதிவின் நடுவில் ஒரு பத்தி காணாமல் போய்விட்டது. அதை சரி செய்யத்தான் இந்தப் பதிவு.

தமிழில் அதிகம் அறியப்படாத நவீன ஆங்கில எழுத்தாளர்களை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் அஜய். பிரதி ஞாயிறன்று உங்கள் ஆம்னிபஸ்ஸில் மட்டும் வெளியாகும் இத்தொடரில் இதுவரை ஜார்ஜ் ஸான்டர்ஸ் மற்றும் டெபோரா ஐசன்பர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழின் ஆகச்சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றான வலசையின் அண்மைய பதிப்பில் அஜய் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. வலசைக்கு ஆம்னிபஸ் தன் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

என்று எழுதியிருந்தேன்.

அண்மைய காலத்திய செயல்பாட்டில் எனக்கு மிகவும் நிறைவளித்த விஷயம் அஜய் நவீன ஆங்கில இலக்கியம் குறித்து எழுதியிருப்பதை ஆம்னிபஸ் தளத்துக்குப் பெற்றுத் தந்து அதில் பதிவிடுவதுதான். அது ஏன் என்பது காணாமல் போன இந்தப் பத்தியைப் படித்தால் புரியும்.

ஜார்ஜ் ஸான்டர்ஸ் என்ற எழுத்தாளரை அஜய் ஆம்னிபஸ் தளத்தில் அறிமுகப்படுத்திய பின்னரே The Browser என்ற தளம் அவரை “வாழும் அமெரிக்க எழுத்தாளர்களில் ஆகச்சிறந்தவர்” என்று அழைத்திருப்பதையும், The New York Times என்ற தளம் “இந்த ஆண்டு நீ வாசிக்கக்கூடிய ஆகச்சிறந்த புத்தகம் ஜார்ஜ் ஸான்டர்ஸால் எழுதப்பட்டிருக்கிறது,” என்று பாராட்டியிருப்பதையும் நண்பர்கள் கவனிக்க வேண்டும். குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் இந்தச் சேவையில் இன்று The Falling Man என்ற அற்புதமான நாவலை எழுதிய டான் டிலிலோவை அவரது முதல் நாவலைக் கொண்டு அறிமுகம் செய்கிறார் அஜய்.

வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்.

Advertisements

2 thoughts on “நடுவுல ஒரு பத்தியைக் காணோம்!

 1. பொங்கல் வாழ்த்துக்கள் சார்.

  உங்கள் இலக்கியப்பணி மேன்மேலும் பொங்கட்டும்.
  life of pi திரைப்படம் பார்த்தேன்.அதன் மூல நாவல் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா?
  திரைப்படத்தில் வசந்தமாளிகை போஸ்டரும் வருகிறது. 🙂

  1. வாயெல்லாம் நானாக நான் செய்யும் இலக்கிய பணியெல்லாம் சில பேர் சத்தமில்லாமல் செய்யும் சேவையோடு ஒன்றுமே இல்லை ஸார்….(தன்னைப் பெயர் சொல்லிப் புகழக்கூடாது என்று அஜய் சொல்லிவிட்டார். வாசகனின் பார்வையில் புத்தகம்தான் இருக்கணுமாம்)

   நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் பற்றி தமிழில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்…

   தங்களுக்கு மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s