சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு பத்து கட்டளைகள்

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் அரசியலில் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய அபிமானம் கிடையாது. ஏன், என்ன என்று விவரம் கேட்கப்போனால், “அவர் ஒரு மாதிரியா கிறுக்குத்தனமா ஏதேதோ சொல்வார் ஸார், அதெல்லாம் வேலைக்காகாது,” என்று நான் சொல்லக்கூடும். ஆனால் சுதந்திர சிந்தனையாளராக அவர் நம்பிக்கைக்குரியவர்.

ஒரு கல்வியாளராக அவர் அளித்த பத்து கட்டளைகளை இந்த தளத்தில் வாசித்தேன். ந்யூ யார்க் டைம்ஸ் என்ற இதழில் அந்த காலத்தில் அவர் எழுதிய ஒரு பத்தியில் இருந்து பொறுக்கிப் போட்டிருக்கிறார்கள். பத்தியின் தலைப்பு :

The Best Answer to Fanaticism–Liberalism; Its calm search for truth, viewed as dangerous in many places, remains the hope of humanity.

தமிழைவிட ஆங்கிலத்தில்தான் இது பொட்டில் அடிக்கிற மாதிரி இருக்கிறது.

ஆனால் அதற்காக அத்தனையையும் ஆங்கிலத்தில் காப்பி பேஸ்ட் செய்தால் நன்றாக இருக்குமா? எனவே ஒழுங்கறு நண்பர்களுக்காக மட்டும், தீந்தமிழில், சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான ரஸ்ஸலில் பத்து கட்டளைகள்! –

1. எதைப் பற்றியும் முழுக்க முழுக்க தீர்மானமான முடிவுக்கு வந்துவிடாதே.

2. ஒரு காரியத்தை சாதிப்பதற்காக உண்மையை மறைப்பதில் பிரயோசனமில்லை, எப்படியும் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

3. சிந்தனையை முடக்க முயற்சிக்காதே, ஏனெனில் நீ அதில் ஜெயிப்பது உறுதி.

4. உன் கணவனானாலும் சரி குழந்தைகளானாலும் சரி, உன்னை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, விவாதத்தால்தான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வெற்றி ஒரு மாயை, அது பொய்யானது.

5. மற்றவர்களின் அதிகாரத்தை மதித்து எதுவும் செய்யாதே – அதற்கு மாறான ஒன்றைச் செய்யச் சொல்லி அதிகாரம் செய்யும் ஆட்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

6. தீயவை என்று நீ நினைக்கும் கருத்துகளை ஒடுக்க அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, அதைச் செய்தால் கருத்துகள் உன்னை ஒடுக்கிவிடும்.

7. உன் கருத்துகள் கிறுக்குத்தனமானவையாக இருந்தாலும் பயப்படாதே, இன்று ஏற்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்தில் கிறுக்குத்தனமாக இருந்தவைதான்.

8. அமைதியாக ஒத்துப் போவதைவிட அறிவார்ந்த வாக்குவாதங்களில் சந்தோஷப்படு, வேண்டிய அளவுக்கு நீ அறிவை மதித்தால் முன்னதைவிட பின்னதில் இன்னும் ஆழமான புரிதல் இருக்கிறது என்று உனக்கே தெரியும்.

9. உண்மை உனக்கு வசதியாக இல்லாதபோதும்கூட, சின்னச் சின்ன விஷயங்களிலும் உண்மையாக இரு, நீ மறைக்கப் பார்க்கும் உண்மைகள் உனக்கு ரொம்பவும் தொல்லை தரும்.

10. முட்டாள்களுக்கான சொர்க்கத்தில் சந்தோஷமாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே, ஒரு முட்டாள்தான் அதை சந்தோஷம் என்று நினைத்துக் கொள்வான்.

அதிகாரத்தில் இருப்பவர்கள், அதை எதிர்ப்பவர்கள், சிந்தனையாளர்கள், கருத்து கந்தசாமிகள், குபீர் புரட்சியாளர்கள், ஏன், பெண்கள் (குறிப்பாக நாலாவது பாயிண்ட்) ஆண்கள் குழந்தைகள் என்று அத்தனை பேரும் இதைப் பின்பற்றினால் இந்த உலகம் ரொம்ப சந்தோஷமான இடமாக இருக்கும்.

Advertisements

13 thoughts on “சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு பத்து கட்டளைகள்

 1. எழுத்து வாசிப்பு என்பவை நலமாக இல்லையே தவிர வாழ்க்கை விதி என்கிற காட்டாற்றில் சுழித்துச்சுழித்து ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அது ஒரு கோடைப்பொழுதில் வரண்டு ஆற்றுமணற்பருக்கைகளினுள் புதைந்தும்போகலாம்.
  ஆனாலும் எப்போதும் கடல் தனக்காய் காத்துக்கொண்டிருக்கிறதென்ற என்றதான நினைப்பு அழிவதில்லைத்தான் காட்டாற்று விதியில் கலப்பவர்களுக்கு
  🙂

  நீங்கள் நலமா

  1. 🙂

   எல்லாம் ஒரே கதைதான் – சொற்கள் வெறுமையை நிறைக்கின்றன, கனவுகள் மீண்டும் மீண்டும் தோற்றுத் தொடர்கின்றன – எப்போது கலையும் என்பதல்ல, எப்போது ஓயும் என்பதுதான் கேள்வி 🙂

 2. பகல் கலைந்து இரவு வருகிறது.பகல் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில்தானே இரவுத்தூக்கம் வருகிறது.
  ஓயாது மறைந்தும் பின் தோன்றியும் நம்பிக்கையை வாழவைக்கிண்ற சூரியன் போலக்கனவுகளும் எழத்தானே செய்யும்.

  ஆனால் ஆதி மனிதன் “முதல் இரவில்” நம்மிக்கையற்றூப்போய் மிகப்பயந்துபோயிருப்பான் இல்லையா? 🙂

  1. நல்ல நேரம் பார்த்தீர்கள் ஸார், நம்பிக்கையைபற்றி பேச! 🙂

   விடியுமோ விடியாதோ விடியலுக்கான ஆசையும்கூட வலி போல் ஒரு விலகலைத் தரும் பொழுது இது…

   பழைய நம்பிக்கைகளை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது, இனி நிமிஷக் கதை எழுத வேண்டியதுதான் 🙂

 3. உங்கள் தம்ளரா அதுவும்!

  கற்றுக்கொண்ட அறிவை சரடுகளாக்கி எதிர்ப்படுமெதனிலும் வலை பின்னி , சிக்குவனவெல்லாவற்றையும் வறண்ட தத்துவார்த்தச்சாறாக்கி உறிஞ்சிக்கொள்ளுகிற மனிதச்சிலந்தித்தனம்? ..?

 4. அட என்ன அந்தப்பகத்தின் தொடர்புச்சுட்டியை எடிட்டி விட்டீர்கள்?

  அந்தக்கதை மனிதச்சிலந்தித்தனத்துக்கும் எந்தவியக்கியானமும் இல்லாத எளிய அன்பையும் காட்டுகிறது.
  நாயகன் ஞானம் நிகழ்காலத்தை தன் நூல் அறிவுக்குள் கொண்டுபோய் அலசிக்கொண்டேயிருக்கிறான்.
  நிகழ்காலத்துக்கான இயல்பூக்கத்தை, இயல்பான எதிர்வினையை அவன் இழந்துவிட்டிருக்கிறான்.

  சிலந்தி தன்வலையைப்பின்னிக்கொண்டேயிருக்கிறது. அது அதனது இயல்பு.
  அந்தப்பெண் பூனையின் நிலைக்காய் அழுதுகொண்டேயிருக்கிறாள்.

  நல்லவேளை …ஞானத்தின் அறிவின் வலைக்குள் சிக்கிய மனத்துக்கு “மனிதர்களுக்க்கும் விலங்குகளுக்குமான உறவு பற்றி பூந்தே சொன்னது ஞாபகத்துக்கு வரவில்லை.

  அந்தக்கதை இந்த முரணைச்சொல்வதாக எனக்குத்தோன்றியது

 5. ஆனால் எம்மில் ஒரு சிலர் உள் நோக்கிய பார்வையக்கொண்டிருக்கிறோம்.
  நினைவோட்டத்தை நிகழ் உலகிற்கு திருப்புவதென்பது இங்கு பெரும் பிரயத்தனமாயிருக்கிறது.
  எண்ணம் சூழலிலிருந்து உள் நோக்கி பாய்ந்துவிடுகிறது.

  ஞானம் இப்படிப்பட்ட இயல்புடையவனாகவும் இருக்கச்சந்தர்ப்பமிருக்கிறது. அவன் கொஞ்சம் மனமுடைந்தும் இருக்கவேண்டும். மனமுடைந்து இருக்கிற போது வாழ்வின் இருண்ட பக்கங்களிலிருந்தான சிந்தனைகள் வடிக்கப்படும்.
  அழுகொண்டிருக்கிர மனிதர்கள் கண்களில் படுவார்கள். இலைகளின் உதிர்வு பார்வைக்கு புலப்படும்.தெருவொரத்தின் அனாதரவான நாய்க்குட்டியின் பரிதவிப்பை உணர்வது போலத்தோன்றும்.

  ஞானம் ஒரு கொண்டாட்ட நிலையிலிருந்திருந்தால் சிலந்தி யை கண்டேயிருந்திருக்கமாட்டான்.
  மனம் பதிவு செய்திருக்காது.

  1. உண்மைதான் ஸார். மனநிலைக்கு ஏற்ப நம் எண்ணங்கள் மட்டுமல்ல, நம் நம்பிக்கைகளும் மாறுகின்றன, நாம் எதைப் பார்க்கிறோம், எப்படி பார்க்கிறோம் என்பதும் மாறிவிடுகிறது.

   கதை என்று எதையாவது எழுதிவிட்டு அதைப் பற்றி விளக்கம் கொடுப்பது கொடுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂

   இருந்தாலும் அப்படி செய்யும்போது நாம் எதை முயற்சித்தோம் எந்த அளவுக்குத் தோற்றோம் என்பது தெரியலாம். பொதுவாகச் சொன்னால், அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் எனும்போது அது எப்படியாவது வெளிப்பட்டுவிடும், எவ்வளவும் வெளிப்படும் என்று பொருளாகிறது, அதையே அறிவுக்குச் சொல்லும்போது, அது உண்மைதான் என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் தொல்லையாகி விடுகிறது. மனத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம், தவறான நினைப்புகள் வருகின்றன, இந்த மாதிரி என்னென்னவோ. அதே போல் அன்பு வெளிப்பட ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது, அறிவுக்குதான் என்னென்னவோ.

   🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s