11 thoughts on “காடு

 1. நன்றி சார்.

  இன்னும் சிலவும் பிறவும்: 🙂

  ”அவர்கள் எரித்தார்கள்
  காடுகளை.
  எனக்கு
  நாகாஸ்திரம் கிடைத்தது.”

  ”காட்டுத்தீக்காகவும்
  காத்திருக்கின்றன
  சில விதைகள்’

  குறிப்பு:ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகின்றது. அது சூழலியலில் ஒரு அங்கமாக இருக்கின்றது. சில விதைகள் காட்டுத்தீயின் மூலமே வெடித்துச்சிதறிப்பரவி பின் முளைப்பதாக சூழல் இயைபாக்கமடைந்திருக்கிறது. சாம்பல் உரமாகிறது.
  ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் காட்டுத்தீயோடு ஒத்திசைந்தார்கள்.
  காட்டுத்தீயை உருவாக்குவது அவர்களது வாழ்வின் ஒரு உத்தியாக இருந்திருக்கிறது( 40000 வருடங்கள்)
  இன்றைக்கு காட்டுத்தீ இழப்பை ஏற்படுத்துகிற பேரிடராக இருக்கிறது.

  1. காட்டுத் தீ காட்டை மட்டுமே அழிக்கும் போது ஒரு பிரச்சனையும் வரவில்லை. ஆனால் இன்றைக்கு அங்கே வீடுகள் வந்துவிட்டபடியால் அவை பேரிடராக ஆகிவிட்டன.

   யானைகள் இருக்கும் காட்டு நிலத்தை விளைநிலமாக்கிவிட்டு, ‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்’ என்று யானைகளையும் மற்றவிலங்குகளையும் இயற்கையையுமே கூட குற்றவாளி ஆக்குவது தான் இன்றைய அறம்.

 2. அவை பின்னூட்டத்துக்கானவை; பதிவுக்கானவையல்லன 🙂 உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி.
  காட்டுத்தீ பற்றி( ஒரு கவிதை ஆங்கிலத்தில் எழுதும்படியாகத்தோன்றியிருந்தது. .அந்த நேரம் உங்கள் இந்தக்கவிதையும் வந்திருக்கிறது. உந்துதல்தான் எனக்கு.:)
  தொடர்ந்து எழுதுங்கள்

  1. ஆங்கிலக் கவிதையை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே? (பதிவாகவோ பின்னூட்டமாகவோ)…

   மேற்கண்ட ‘கவிதை’யை வெந்து தணிந்தது காடு என்பதைத் தொடர்ந்து வாசிக்கலாம். காடு நம் அகமாகவும் தழல் நம் உணர்ச்சிகளாகவும் இருந்தால்?

 3. கவிதை தன்நிலையிலேயே நீங்கள் சொன்னவற்றையெல்லாம் பிரதிபலிக்கிறது. 🙂 விளக்கம் தேவைப்படவில்லையே.

  ஆனால் காடு எரிந்து சாம்பல் மீதமிருக்கிறது.(காடு எரிந்து சாம்பல் எஞ்சியிருக்கிறது என்பது மனக்கற்பனையின் ஓட்டத்தில் ஒரு இடறலை ஏற்படுத்தவும் செய்தது.), சூடு இல்லை என்கிறபோது புயலுக்குப்பின் அமைதி. அதாவது காற்று வீசவில்லை. அழிவின் அமைதி எங்கும்படர்ந்து கிடக்கிறது என்பதாகிறது.

  புயல்- இரைச்சல் (காற்று)
  புயலுக்குப்பின் -( காற்று வீசுவது நின்று) அமைதி

  காட்டுத்தீ -வெம்மை
  தீக்குப்பின்; -குளிர்மை

  சிரிப்போ துக்கமோ கோபமோ வெறுப்போ அற்ற நிலை.
  காடு” சாம்பலாகி’ விட்டதால் அகம் அழிந்து விட்டதாக சொல்ல முடியுமா. உணர்ச்சிக்கொந்தளிப்பால் எரியுண்டுபோன அகம் உணர்ச்சியற்றுபோய்விட்டது என்று சொல்லுகிறது என்றாகிறது.(emotional straight jacket)

  அக்கினிக்குஞ்சு பற்றவைத்த தீ மிண்டும்பற்றவைக்க முடியாத சாம்பலாய் முடிவடைந்து விடுகிறது.

  இப்படி கவிதை ஒரு விரக்தி நிலையைச்சொல்வது போலத்தோன்றியது.
  அதனால்தான் நேர்மறையான .கவிதைகளால் பதில் தந்தேன்.

  உணர்வுகளின் கொந்தளிப்பால் எரியுண்டுபோகிறபோது அகத்துக்கு சுயத்தின் இன்னொருபக்கத்தின் தரிசனம் சாத்தியாமாகிறது.
  ”அழுத்தப்படுகிற போதுதான் கரி வைரமாகிறது” “ நடக்கத்தெரியாதவன் ஓடப்பழகுகிறான்”
  “வாழ்வியல் துன்பங்களினால் அலைக்கடுகிறவர்கள்தான் வாழ்வின் தத்துவச்சாவியினைக்கண்டெடுக்கிறார்கள்’

  ..; அவமதிப்பால் வெந்து தணிந்த அகக்காட்டில் வைராக்கிய விதைகள் முளைவிடக்கூடும்.

  1. அதுவும் உண்மைதான்.

   உங்கள் ‘கனவு’ வாசித்தேன். நேரடியான ஒரு அச்சத்தை விவரிக்கிறது.

   ௦௦௦௦௦௦௦௦௦

   ”காட்டுத்தீக்காகவும்
   காத்திருக்கின்றன
   சில விதைகள்’

   என்பது பிரமாதமாக இருக்கிறது.

   ௦௦௦௦௦௦௦௦௦

   இதுபோன்ற கவிதைகளை வாசிப்பதில் ப்ளஸ் மைனஸ் இரண்டும் நாம் நம் கற்பனை மற்றும் அனுபவங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது என்பதுதான்.

   ஒரு மாதிரியான வெறுமை மனநிலையில் இதை எழுதினேன் என்பது உண்மைதான். ஆனால், இது கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த கடும் வாக்குவாதம் ஒன்று முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் எழுதியது. முடிவில், எது நடக்க வேண்டும் என்று நினைத்து சண்டை போட்டேனோ அது நடக்குமா நடக்காதா என்ற அக்கறையும்கூட இல்லாமல் போய் விட்டது – ஆனால், இதற்கு ஒரு முக்கியமான காரணம், நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதுதான். அந்த கட்டம் வந்திருக்கவில்லை என்றால் கோபம் தீர்ந்திருக்காது என்று தோன்றுகிறது.

   எல்லாம் இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா கேஸ்தான் – சுயம் சார்ந்த சின்னச் சின்ன ஆசைகள், சின்னச் சின்ன வெற்றிகள், சின்னச் சின்ன ஏமாற்றங்கள், அத்தனைக்கும் முன் பிரம்ம பிரயத்தனங்கள் 🙂

   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s