நிசப்தம்

இவ்வாண்டு சுஜாதா விருது பெற்ற வா. மணிகண்டன் அவர்களின் நிசப்தம் தளத்தைப் பார்த்தேன். தினமும் ஒன்று என்று எவ்வளவு விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறார், ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. பெரிய பெரிய சிந்தனையாளர்களே டிவிட்டர் ஃபேஸ்புக் என்று ரிட்வீட்டுகள், லைக்குகள் மற்றும்  ஒற்றை வரி அக்கப்போர்களில் சங்கமமாகிவிட்ட நிலையில் பின்னூட்டப் பெட்டிகூட இல்லாமல் கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருக்கும் வா மணிகண்டனின் தளம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தேர்வுக் குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

நமக்கும் இந்த மாதிரி தினமும் எதையாவது சுவையாக எழுத வேண்டும் என்று ஆசைதான் – ஆனால் சுவாரசியமான விஷயங்கள் எதுவும் நடப்பதில்லை, அறச்சீற்றம் அபத்தமாக இல்லாதபோது ஆபத்தாக இருக்கிறது. அவதானிப்புகள் என்று பார்த்தால் டிவிட்டர் ஒன் லைனர்களுடன் ஒப்பிட்டால் நாம் சராசரிக்கும் கொஞ்சம் கீழே என்பதுதான் கசப்பான உண்மை.

7 thoughts on “நிசப்தம்

 1. நீங்களும் படிக்கறீங்களா? நான் ஒரு நாலு மாசமா ரெகுலர் ரீடர். இப்படி அன்றாட விஷங்கள எழுதறவங்கள்ள நான் படிக்கறதுல இவர்தான் பெஸ்ட்னு சொல்லலாம். ஒவ்வொரு பதிவுலயும் சுவாரஸ்யமா வித்தியாசமா அசத்துறார்.

  1. ஏங்க, நாங்களும் பதிவர்தானே? எங்களுக்கும் போறாமையெல்லாம் உண்டுதானே?

   அவர்தான் பெஸ்ட்டுன்னா, அவர்தான், “ஒவ்வொரு பதிவுலயும் சுவாரஸ்யமா வித்தியாசமா அசத்துறார்.” அப்படின்னா அதை அவர் ப்ளாக்ல போய் சொல்லுங்க…

   ஒவ்வொரு நாளும் இன்னிக்கு என்னடா எழுதறதுன்னு மேலயும் கீழயும் பாத்துக்கிட்டு இருக்கற என்கிட்டே ஏன் அதைச் சொல்றீங்க?

   வலிக்குது ஸார் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s