நினைவுகள்

..

நேற்று உடல்நிலை சரியில்லாததால் உப்பு நாரத்தாங்காயைக் கடித்துக் கொண்டே புழுங்கலரிசி கஞ்சிதான் நாளெல்லாம் சாப்பிட்டேன். வாய் கசப்போடு சேரும்போது இது ஒரு அரிய சுவையாக இருக்கிறது.

சுகாவின் தாயார் சன்னதியை முன் அட்டை முதல் பின் அட்டை வரை முழுதாகப் படித்தேன். வழக்கமாக விழுந்து விழுந்து அல்லது புரண்டு புரண்டு சிரிப்பார்கள். நான் உட்கார்ந்து உட்கார்ந்து சிரித்தேன். படுத்த நிலையில் படிக்கும்போது அவ்வப்போது சிரித்ததால் ஏற்பட்ட வயிற்று வலியை சமாளிக்கவே இந்த ஏற்பாடு. புத்தகம் நோய்மை சார்ந்த கவலைகளை மறக்கச் செய்தது என்றாலும் அந்த மாதிரி சிரித்துவிட்டு அப்புறம் இருமினால்கூட சீன் போடுகிறானோ என்று சந்தேகமாகப் பார்க்கிறார்கள். ஒரு நோயாளிக்குக் கிடைக்க வேண்டிய கவலை கலந்த கவனிப்பை இதனால் இழந்தேன்.

என்னோடு பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படித்த நண்பர்கள் ஒரு சந்திப்பை அதே பள்ளியில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.  என்னால் போக முடியவில்லை. சந்திப்பின் க்ரூப் போட்டோ அனுப்பியிருந்தார்கள். சண்டையும் சமாதானமும் என்ற கதைக்குக் காரணமாக இருந்த நண்பர்  வசிஷ்டர் மாதிரியான ஒரு சாமியார் வேஷத்தில் தன் முழு நீள தாடிக்கு  வெள்ளையடித்துக் கொண்டு, காலில் விழுந்து கும்பிடத் தோன்றுமளவுக்கான gravitasஉடன் இருந்தார். மரியாதை கொஞ்சம் ஓவராகப் போய் அவரை ஆசிரியர்களோடு ஆசிரியராக முன் வரிசையில் அமர்த்தியிருந்தார்கள். காலத்தின் கோலம்.

அண்மையில் சந்தித்திருந்த சக பதிவர் வீரா மற்றும் மேலும் ஒரு நண்பர் தவிர எவரையும் அடையாளம் தெரியவில்லை. இதையெல்லாம் ஒரு இருபது வருஷம் முன்னமேயே செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்போது எல்லாரும் அன்னியர்களாக இருக்கிறார்கள், பள்ளி நாட்கள் சம்பந்தப்பட்ட நினைவுகளே மறந்துவிட்டன, இருக்கும் கொஞ்ச நஞ்ச நினைவுகளும் யாருக்கோ நடந்த மாதிரி இருக்கிறது.

இன்னும் என்னெல்லாம் சுவாரசியமான சம்பவங்கள் நடக்குமோ, பார்க்கலாம்.

2 thoughts on “நினைவுகள்

  1. ஒரு அக்மார்க் ஆசான் வாசகரான நீங்கள் இத்தனை சரித்திர முக்கியத்துவப் பதிவை நாலே பத்தியில் நிறைவு செய்தது என்ன நியாயம்?

    anyway, விரைவில் உடல்நலம் தேறிவந்து இந்தப் பதிவின் மிச்சத்தையும் நிறைவு செய்வீராக.

    teke care

    1. 🙂

      சந்தேகம் கேட்டு கடிதம் எழுதுபவர்கள் குறைந்தது ஐநூறு சொற்கள் எழுத வேண்டும் அப்படின்னு கண்டிஷனா சொல்லியிருப்பாரோ? அவ்வளவு தெளிவா கேள்வி கேட்கிறார்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s