கடைசி சாமுராய்

..

தற்போதைக்கு பதிவுகள் தொடர்கின்றன.

சும்மா இருக்க முடியாமல் The Last Samurai என்ற படம் பார்த்தேன்.  ஜப்பானிய ராணுவம்  நவீனமாக்கப்படுகிறது. பழைய சாமுராய்கள் அதை எதிர்க்கிறார்கள். ராணுவப் பயிற்சி கொடுக்கப்போன ஹீரோ சாமுராய்களின் பக்கம் தாவி விடுகிறார். ஆனால் வேலும் அம்பும் துப்பாகிகளுக்கு எதிரில் நிற்க முடிவதில்லை. இதே மாதிரிதான் Seven Years in Tibet என்ற படமும். புராதான போர் முறைகளைப் பயிலும் திபெத்தியர்களை சீன ராணுவம் துப்பாக்கிகளோடு வந்து தோற்கடித்து விடுகிறது. சாமுராய் படத்தில் வரும் ஹீரோ மாதிரி இந்த படத்தில் வரும் ஹீரோவும் திபெத்தியர்களுக்கு போர் உத்திகளைப் பயிற்றுவிக்கிறார். சாமுராய்களும் திபெத்தியர்க்ளும் தோற்றுப் போனாலும் நம் ஹீரோக்கள் தோற்றுப் போவதில்லை. படத்தின் துவக்கத்தில் ஏதோ ஒரு தோல்வியால் துவண்டு போனவர்களாக இருக்கும் இவர்கள் முடிவில் மன அமைதி பெறுகிறார்கள்.

ஏன் இப்படி என்ன ஏதென்று நிறைய எழுதலாம். மரபு சார்ந்த லட்சியவாதிகளாக இருக்கும் சாமுராய்களும் திபெத்தியர்களும் நவீன வாழ்க்கை முறையை அறியாத குழந்தைகளாகவும் இருக்கிறார்கள். இதுவே அவர்களது தோல்விக்குக் காரணமாகிறது, ஹீரோக்கள் தந்தையாகவும் ஆசானாகவும் ஆகிறார்கள்.

இரண்டு படங்களும் அருமையாக இருந்தன. நமக்கு எழும் ஆட்சேபங்களையும் மீறி நம்மைக் கதைக்குள் இழுத்துக் கொள்கின்றன.

மன்னராட்சியில் உள்ள ஒரு வசதி, மன்னன் மனம் ஏதோ ஒரு காரணத்தால் மாறக்கூடும். அநீதிகள் சரி செய்யப்படக்கூடும். ஆனால் ஜனநாயக அமைப்பில் அது மாதிரியான சாத்தியம் எதுவும் இல்லை. ஒரு பக்கம் கொலை கருவிகளை அறிமுகப்படுத்தியவர்களே மறு பக்கம் அதற்கான மருந்தையும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.  அதிகாரத்துக்கும் அறத்துக்கும் இடையான தொடர்பு  முழுமையாக அறுபட்டு விடவில்லை. ஒரு மாதிரி கொஞ்சம் out of phaseல் அறம் அதிகாரத்தைத் தொடர்கிறது – அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டபின், அறம் ரத்தத்தைக் கழுவி சுத்தம் செய்து கொடுக்கிறது.

அந்த காலத்து திபெத், ஜப்பான் என்றில்லை, இன்றைக்கும் இந்த கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கட்டுரை படித்தேன், – Africlimate | How the UK’s energy security panic affects the Sahel

இதைப் பற்றியெல்லாம் யாராவது எழுத வேண்டும் 🙂

 

Advertisements

4 thoughts on “கடைசி சாமுராய்

 1. எப்படி உடல் நலம் ?

  எந்தத்திரைப்படத்தைப்பார்க்கக்கூடாது என்று உங்கள் குடும்பம், சுற்றம், நினைத்து உங்கள் கண்களில் படாமல் ஒளித்துவந்ததோ அந்தத் திரைப்படத்தையே நீங்கள் பார்த்துவிட்டீர்கள்.
  விதி வலிமையானது.அந்தச்சோதிடன் கூறியது போலவே உங்கள் சிந்தனையோட்டமும் தொடங்கிவிட்டது!.

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தார்த்தன் என்கிற சிறுவனுக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது

  போதிதர்மருக்கு நிகழ்ந்தது நிகழாமலிருக்க இங்கு ஒன்றைப்பதிவுசெய்ய விரும்புகிறேன். நட்பாஸ் ஒரு தமிழர்..கோவையிலிருந்து ஜப்பான் சென்றார்.ஜப்பானியர்களுக்கும் பின்னர் சீனர்களுக்கும் ஙே யைக்க்கற்றுகொடுத்தவர் அவர்தான்.
  எதிர்கலத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கை அகழ்பவர்கள் இந்தக்குறிப்பைக்கண்டு கொள்வார்கள்

  மன்னிக்கவேண்டும் சார். நோய்வாய்ப்பட்டிருக்கும்போது சீரியசாக சிந்திக்கவேண்டாமே. அதற்காகத்தான்..

  அத்தனைக்கும் ஆசைப்படு , கதவைத்திற காற்று வரட்டும்( அத்தனைக்கும் ஆசைப்பட்டா கடன்காரந்தானே வருவான்), ரிலாக்ஸ் பிளீஸ்(ஜெயிலில்?)
  போன்ற ஆன்மீக நூல்களைப்படிக்கலாமே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s