சிறுகதை அறிமுகம்

படிக்காதவர்கள் படித்துவிடுங்கள் – நண்பர் ரா. கிரிதரன் சொல்வனத்தில், நந்தாதேவி என்ற சிறுகதை எழுதியிருக்கிறார், நன்றாக இருக்கிறது.

ஒரு சாகசக் கதைக்கு மெத்தன துவக்கம், தீவிர இலக்கியப் படைப்புக்கு ஒட்ட நறுக்கிய முடிவு. இரண்டுக்கும் இடைப்பட்ட துணிகர முயற்சி.

ராணுவத்தில் இருக்கும் காரணத்தால் யாரும் சுயமாய் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவதில்லை. ஆனால் ராணுவ வீரன் தன் உயர் அதிகாரிக்குக் கீழ்படிந்தாக வேண்டும். அவனது சுதந்திரம் எங்கே துவங்குகிறது என்பது ஒரு தீவிரமான கேள்வி.  ஒரு ராணுவ வீரன் தன்னை ஆணைகளை நிறைவேற்றும் எந்திரமாக பாவித்து நிறைவடையாமல் தன் சுயபுத்தியைப் பயன்படுத்துவான் என்ற நம்பிக்கையில்தான் எந்த ஒரு தேசத்தின் பாதுகாப்பும் இருக்கிறது. ஆணைகளை நிறைவேற்றும் எந்திரமாக அவன் மாறும்போது அநீதிகளின் கருவியாகிறான்.

இந்த மாதிரியெல்லாம் பெரிதுபடுத்தாமல் கீழ்படிதலின் தேவைகளையும் எல்லைகளையும் பேசும் சுவாரசியமான கதை நந்தாதேவி. ஒரு தடவை படித்துப் பாருங்கள் –

அப்போதுதான் அது நடந்தது.

காலடியில் உணரும் பனி வழுக்குவதுபோலிருக்கிறதே என நினைத்த நேரத்தில் பெரும் பாளம் போல நாங்கள் நின்றிருந்த இடம் உள் வாங்கியது.

பனியும் நீரும் கலந்து சேறு நிரம்பியிருந்த குடுவைப் பள்ளத்தில் இருவரும் விழுந்தோம். ஒருவர் மீது ஒருவர் விழாததால் அடியில்லை. பத்தடி ஆழம் இருக்கும். மிகக் குறைவான வெளிச்சம். திடீரென விழுந்ததால் ஒரு நொடி எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. க்ளோரோஃபார்மை முகத்தில் வைத்து அழுத்தியது போல கனமான திரவ வாடையில் மூச்சு விட சிரமமாயிருந்தது. ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும்போது உறைந்த பனி மூக்கில் அடைப்பது போலிருந்தது.

`அம்மா..ஐயோ .டானே, டானே`, எனக் கத்தினேன். என் இடுப்பில் சுற்றியிருந்த கயிறு என்னை ரெண்டாகப் பிளந்துவிடுவது போல இறுகியது. வலி மிகக் கடுமையாக இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தாலும் ஜென்ரலின் கழுத்து மட்டும் நீருக்கு மேலிருந்தது. எனது காலுக்குக் கீழே தட்டுப்பட்ட கற்களை உதைத்து மேலெழும்பப் பார்த்தேன். பூட்ஸுகள் கற்களிடையே மாட்டிக்கொண்டிருந்தன. அவற்றை விலக்கி என் கால்களை விடுவித்துக்கொண்டேன். நல்லவேளை அதிக ஆழமில்லை. இடுப்புவரை நீர்மட்டம் உயர்ந்த பகுதிக்கு வந்ததும் ஜென்ரலைக் கைகொடுத்து இழுத்தேன். பனியும் நீரும் அடர்த்தியாக இருந்தன. டானே என்னை மேலிழுக்கப்பார்த்தான்.

`பொறு..பொறு`, எனக் கத்தினேன். என் இடுப்பு பிளக்கப்போவது போல பயங்கர வலி. பனிக் கோடாறியால் கயிறை அறுத்தேன். மேலிருந்து பார்த்த டானேவுக்கு பயங்கர குழப்பம். இணைப்புக்கயிறை பாறைசுவரில் இறுக அடித்துவிட்டு ஒரு கையால் அதைப் பிடித்தபடி ஜென்ரலுக்கு அருகே சென்றேன்..

திடீரென குளிர்ந்த நீரில் நனைந்ததில் அவர் முழு உணர்வோடு கண்ணைத் திறந்து பார்த்திருந்தார். கீழிருந்து மிருகம் உயிரோடு சாப்பிடுவது போல அவரது முகத்தில் கடுமையான வலி தெரிந்தது.

`வராதே..நீ போயிடு`,  எனக் கத்தினார்.

One thought on “சிறுகதை அறிமுகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s