நண்பர்களுக்கு நன்றி

இன்று நம் ப்ளாக் நாற்பத்தாயிரமாவது ஹிட்டைத் தொட்டிருக்கிறது. நன்றி கலந்த வாழ்த்துகள்.

நாம் பத்தாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதியவையும் இருபதாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதியவையும், முப்பதாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதியவையும் அனைத்தும் இன்றும் பொருந்தும்.

40000

40000 plus

40000 reader

௧. சாய் இங்கு பின்னூட்டம் போடுவதில்லை என்பது மட்டுமில்லை, பதிவுகளை வாசிப்பதுமில்லை. நேர விரயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் சாய்!

௨. கிரி – ஆம்னிபஸ்ஸில் ரொம்ப பிஸியாகி விட்டார். டிவிட்டரிலும் நாளுக்கு நாள் ஆதரவு கூடிவரும் நிலையில் நம்மைக் கண்டுகொள்வார் என்று எதிர்பார்ப்பதற்கில்லைதான்.

௩. அஞா- ரீடரை இழுத்து மூடுவதாக கூகுள் முடிவெடுத்தது குறித்த கடும் அதிருப்தியில் கூகுள் ப்ளஸ்ஸை விட்டு வெளியேறி விட்டேன். தொடர்பில் இல்லை.

௩.. வரசித்தன்- என்னத்தச் சொல்ல! இவரும் பிஸியாயிட்டார்.

௪.. ஜெயமோகன்- தாக்கியோ ஆதரித்தோ பதிவு எழுதத் தவறியதன் விளைவு குருபார்வை நம் மீது விழவில்லை. ஹிட் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி.

௫. பல புது எழுத்தாளர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

OoO

30,000 ஹிட்டிலிருந்து 40,000 ஹிட்டைத் தொட ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளும், எழுபது பதிவுகளும் தேவைப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் அப்பாவி வாசகர்கள் ஒரு பத்து பேர் நம்முடன் தங்களையும் வாசகர்களாக இணைத்துக் கொண்டிருக்கின்றனர். நண்பர்களுக்கு நன்றி.

நாற்பதாயிரமாவது ஹிட்டைத் தொட்டு விட்டதால் வழக்கம் போல் புதிய பெயர், புதிய உருவம் என்று தன்னைப் புதுப்பித்துக் கொண்டு சொல் புதிது செயல் புதிது என்று உங்களை மகிழ்விக்கப் வருகிறது ஒழுங்கறு.

இன்னும் சற்று நேரத்தில் மாற்றங்கள் நிகழும். வாழ்த்துகள்.

16 thoughts on “நண்பர்களுக்கு நன்றி

 1. //கிரி – ஆம்னிபஸ்ஸில் ரொம்ப பிஸியாகி விட்டார். டிவிட்டரிலும் நாளுக்கு நாள் ஆதரவு கூடிவரும் நிலையில் நம்மைக் கண்டுகொள்வார் என்று எதிர்பார்ப்பதற்கில்லைதான்.//

  I am not in twitter as well ji. existing there, thats it. not busy there. and ஆதரவெல்லாம் இல்லை. எதிர்ப்புதான் ஜாஸ்தி நாம வாயைத் திறந்தா. அதான் ஜஸ்ட் விலகி இருக்கேன்.

  1. அடடா!

   சமூக ஊடகங்கள் என்று விஷயம் தெரியாதவர்கள்தான் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழகுவதைவிட இது பிரச்சினையாக அல்லவா இருக்கிறது…

   என்னத்தச் சொல்ல!

 2. வாழ்த்துக்கள் சார். ப்ளாக் பேரை கொஞ்சம் சின்னதா வச்சிருக்கலாம். புதுசா வர்றவங்க ஏதோ இணையப் போராளியோட வெப்சைட் போலிருக்குன்னு பயந்துடப் போறாங்க.. பரவாயில்லை, ஐம்பதாயிரமாவது ஹிட்ஸ்ல மாத்திக்கலாம். 🙂

  // ரீடரை இழுத்து மூடுவதாக கூகுள் முடிவெடுத்தது குறித்த கடும் அதிருப்தியில் கூகுள் ப்ளஸ்ஸை விட்டு வெளியேறி விட்டேன்.//

  அவ்வளவு கடுப்பாயிட்டீங்களா? எனக்கு என்ன பண்றதுன்னு இன்னும் தெரியல. Alternative services கூட ட்ரை பண்ணாம இன்னும் ரீடரை தொடர்ந்து யூஸ் பண்ணிட்டிருக்கேன். மரணப் படுக்கைல கடைசி வரைக்கும் கையைப் பிடிச்சிட்டு இருக்கலாம்னு உத்தேசம். 😦

  1. இனிமேலாவது நம்மையும் ஒரு இணையப் போராளியா மதிச்சு நாலு பேர் பயப்படுவாங்களா? கேக்கவே சந்தோஷமா இருக்குங்க.

   நானும் ரீடர்லதான் இருக்கேன். “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறே?” என்கிற மாதிரி அப்பப்ப, ஜூலை ஒண்ணாம் தேதிக்கு அப்புறம் இருக்காது, வேணுங்கறதை எல்லாம் எடுத்து வச்சுக்கோன்னு நோட்டீஸ் ஒட்டறான் பாத்திங்களா? இவனுங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாது போல… இத்தனைக்கும் கூகுளைப் புகழ்ந்து என்னெல்லாம் எழுதியிருக்கேன்!

   பரவாயில்லை, நானும் மரணப்படுக்கை வரை விடறதா இல்லை. அதுக்கப்புறம் ஃபீட்லிதான் கதின்னு நினைக்கறேன். கடவுள் இருக்கார், பாத்துப்போம்.

   நன்றி ஸார்!

   1. //அப்பப்ப, ஜூலை ஒண்ணாம் தேதிக்கு அப்புறம் இருக்காது, வேணுங்கறதை எல்லாம் எடுத்து வச்சுக்கோன்னு நோட்டீஸ் ஒட்டறான் பாத்திங்களா?//

    எடுக்கறது சரி, எங்க சார் வைக்கறது? அஞ்சு வருஷமா குருவி சேர்க்கறமாதிரி ஸ்டார் பண்ணியிருக்கோம். 2009 ல நான் அக்கவுன்ட் புதுசா மாத்தும்போது மூணு நாள் வேலை வெட்டியில்லாம உக்காந்து எல்லா ஸ்டாரையும் ஷேர் பண்ணி, திரும்ப ஸ்டார் பண்ணேன். இப்போ?!

    எல்லாம் பிஸினஸ் தானே சார். எழுதனும்னு ஆரம்பிச்சா என்னோட கதை, கூகுளோட அரசியல்னு பக்கம் பக்கமா எழுதலாம். மூட் வரல.

    //இத்தனைக்கும் கூகுளைப் புகழ்ந்து என்னெல்லாம் எழுதியிருக்கேன்!//
    சேம் பிளட். இப்படி கழுத்தறுத்துட்டாங்களே..

    //ஃபீட்லிதான் கதின்னு நினைக்கறேன்//

    பீட்லில web based service இல்லன்னு நெனைக்கறேன். நான் நெட் அதிகமா யூஸ் பண்றது வீட்டு, லைப்ரரி கம்ப்யூட்டர்ல தான்.

    //கடவுள் இருக்கார்// 🙂

    1. இருப்பதிலேயே feedlyதான் பரவாயில்லையாக இருக்கிறது. வேறு எதிலும் தேட முடியாது. மற்றபடி bloglines, the old reader இரண்டும் கூகுள் ரீடர் மாதிரியே இருக்கின்றன. ஆனால் சென்றதினி வாராது கண்டீர் என்று மனதைத் தேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

     கடவுள் இருக்கார் என்பதற்கு இன்பச் சிரிப்பான் போட்டதற்கு நன்றிகள்… 🙂

 3. வா(ழ்)த்துக்கள் சார்.

  எங்கள் பெயரைத்தவறாமல் குறிப்பிடுகிறீர்கள் சரி, மைக்ரோசொஃப்டோ அல்லது ஆப்பிளோ இந்தத்தளததை வாங்கக்கோரும்போது எங்களுக்கும் பங்கு தருவீங்களா? 🙂

 4. கூகுளத்தானே இப்ப கடவுள் என்கிறோம் ”இப்ப ….. அந்தக்கடவுளே ”என்று மூக்கில் சளியடைத்த குரலால் பேச…

  மரணப்படுக்கையிலும் மரக்காது அனஸ்தடிஸ்ட்டே என்று ப்ரொஸ்டேட்டுக்காகவேண்டி இடுப்புக்குக்கீழே மரத்துப்போகும்படிக்கும் ஊசிபோட்ட அனஸ்தெடிக்க்ட்டுக்கு வைரமுத்து சொன்ன வசனமல்லவா அது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s