வாஸவேச்வரம்

பதிவர் வாழ்க்கையில் ஒரு எழுத்துகூட வீணாகப் போகக் கூடாது என்பது ஒரு முக்கியமான விஷயம். ஆம்னிபஸ் தளத்தில் ஒன்று எழுதினால் அதைப் பற்றி இங்கே கொஞ்சம் எழுதி லிங்க் தந்தால் எழுதியதற்கு விளம்பரம் கொடுத்த மாதிரியும் ஆச்சு, ஒரு பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு.

“எங்கே நீ வராமே போயுடுவயோன்னு பயந்துண்டே வந்தேன்,” என்று சொல்லியபடி அவர் ஆனந்தாவின் கூம்பிய உதடுகளைத் தன் பற்களால் பற்றிக் கொண்டார். அந்தப் பெண் முரண் செய்து அவரை விலக்கினாள். பிறகு, “ஏது, இன்னிக்கு ஏதேனுமுண்டோ இல்லையோ?” என்று கேட்டவாறு அவர் கொண்டுவந்த பையைத் துளாவினாள். முதலில் நாணயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சேர்த்து தன் புடவைத் தலைப்பில் உருண்டையாக முடிந்து கொண்டாள். பிறகு சுண்டல் பொட்டணத்தை அவிழ்த்து, கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு மென்றாள். நடுநடுவே சாஸ்திரிகள் அவளை அணுகும்போதெல்லாம் பொய்க் கோபத்துடன் விலகிப் போனாள். வேறு வழியில்லாமல், அவள் சுண்டலை சுவைத்துத் தின்னும்வரையில், சாஸ்திரிகள் காக்க வேண்டியதாயிற்று. அவளும், “உங்களுக்கே – அவசரம்” என்று கொஞ்சலாகக் கடிந்து கொண்டே, சுண்டல் முழுவதையும் சாப்பிட்டுத் தீர்த்தாள். பிறகு சாஸ்திரிகள் பக்கமாகத் திரும்பி களுக்கென்று சிரித்தாள். இதற்குள் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சற்று அப்பால் நகர்ந்து போயிருந்தார்.

“கோபமா?”

அவர் பதில் பேசவில்லை.

ஆனந்தா சிரித்துக் கொண்டே அவர் கழுத்தைத் தன் மென்கரத்தாற் சுற்றி வளைத்து பக்கத்தில் இழுத்துக் கொண்டாள். சாஸ்திரிகள் நெற்றியில் நரம்புகள் புடைத்து நின்றன. ரத்தம் தலைக்கேறியது. ஆசாபங்கத்தினால் வெறி கொண்ட அவரும் சட்டென்று திரும்பி அவளை ஆத்திரத்துடன் அணைத்துக் கொண்டார்.

வாஸவேச்வரம், கிருத்திகா, பக்கம் 39-40

வாஸவன் இந்திரன். வாஸவேச்வரம் இந்திர ஊர். அந்த ஊரில் எல்லாரும் இந்திரன்கள்தான். “வாஸவேச்வரத்திலே, ஆம்புள்ளேள் எல்லாம் கம்பீரமா, எடுப்பா, பாக்க நன்னா இருப்பா. சுறுசுறுப்பா, கடுபடியா காரியங்களே சாதிச்சுக்கவும் செய்வா…” என்கிறார் திருநாகனூர் சம்பு சாஸ்திரி (பக்கம் 17). இந்திரன் எதில் வீக் என்று நமக்கெல்லாம் தெரியும். பொதுவாக இந்தக் கதையை காமம், பெண்ணியம் என்றெல்லாம் வாசித்தாலும் ஒரு மாதிரியான ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸஸ்தனமான சமகால காவியம் ஒன்றை நமுட்டுச் சிரிப்புடன் எழுதியிருக்கிறார் கிருத்திகா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இது போன்ற இன்னும் பல குழப்பங்கள் ஆம்னிபஸ் புத்தக அறிமுகத்தில், வாசித்து இன்புறுவீர்!.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s