ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசித்துப் பார்த்தேன். குழப்பமான சமயங்களில் இப்படி எல்லாம் நின்று நிதானித்து யோசித்துப் பார்க்கும்போதுதான் இங்கு வர வேண்டிய தேவை ஏற்படுகிறது – அதாவது இதை விட்டால் வேறு எங்கும் செல்ல முடியவில்லை. மற்ற இடங்களில் கண்ணாடி அறைக்குள் இருக்கிற உணர்வு இருந்தால் இங்கே சந்தடி மிகுந்த ஒரு பூங்காவின் பாதையோரத்தில் புதர் மண்டிய ஒரு இடத்திலிருக்கும் பெஞ்சில் நெருங்கிய நண்பர்கள் சிலரோடு பேசுவது போன்ற உணர்வு.

OoO

அண்மைய சில நாட்களாக, இணையத் தொடர்பை வெட்டிவிட்டால் நான் யார் என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். தெருவில் ஏதோ ஒரு வேலையாகப் போய்க் கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவன். இதுதானே உண்மை? ஆனால் இதை மீறி நம்மை நாமே உயர்வாக நினைத்துக் கொள்வதும், சக பதிவர்களை அணி சேர்த்துக் கொண்டு ஏதோ சாதிக்கப் போவதான பிரமையை உருவாக்கிக் கொள்வதும் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு அர்த்தம் கொடுக்கிறது. அந்த அர்த்தமும் நம் மெய்நிகர் உலக ஜீவிதத்துக்கு மட்டுமே பொருந்துகிறது. மற்றபடி இணையத்தில் சாமானியர்களான நம் வெற்றியும் தோல்வியும் நாம் எந்த அணியில் இருக்கிறோம் என்ன ஏது என்பதையொட்டி அமையக்கூடிய பிரமை. நம்மை அணி சேர்க்கும் பேராளுமை என்று ஒருவர் இல்லை என்றால் நம் நிலைமை பரிதாபம்தான் – ஆனால் அப்போதும்கூட நம்மில் எவரோ ஒருத்தரை பேராளுமையாக உருவாக்கிக் கொண்டு சமாளித்து விடுவோம் என்று நினைக்கிறேன். சில சமயம் இப்போதே அப்படித்தானோ என்றும் தோன்றுகிறது.

7 thoughts on “மறுபடியும்

  1. இதைத் தான் தலைவர் Woody Allen, “What if nothing exists and we’re all in somebody’s dream?” என்று சொல்லியிருக்கிறார்.
    நீங்கள் இதை இன்னும் நீளமாக எழுதியிருந்தால், அற்புதமான கட்டுரை வந்திருக்கும்.

  2. தொடர்ந்து எழுதுங்கள் சார். சின்னக்கதைகளாய்த்தோன்றும்போது இங்கு பதிவிடலாம் என்று எனக்கும் … மறுபடியும் கொஞ்ச நாளாய் … 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s