மூன்றாவது அறை.

ஜனா என்னை வரவேற்றார். அவர் மனைவி வீட்டிலிருக்கவில்லை.

”அறை மேலேதான் இருக்கிறது”. என்றார்

வாரியர் சாலையிலுள்ல் நவீன மோஸ்தர்வீடு அது.கீழ்தளத்தில் மின் அடுப்பு ,டிஷ்  வோஷர் .ஆளுர குளிரூட்டி என்று சமையலறை ; ஒரு பெரிய தட்டை ரீவியுடன் கூடிய உயர்ந்த ரக சோபக்களோடு கூடிய ஹோல்; விருந்தினர்களுக்கன பாத்ரூம் டொய்லட்.சுவர்களில் ஜனாவும் மனைவியும் நின்ற இருந்த பெரிய படங்கள் தொங்கின. மனைவியும் அவரும் அன்னியோனியமான அரவணைப்போடும் சிரிப்போடும் நின்றுகொண்டிருந்தார்கள். வீடு மிக நேர்த்தியாக அலங்கரிகப்பட்டுச்சுத்தமாக இருந்தது.

மேல்தளத்தில்தான் எல்லா அறைகளும்  இருந்தன. அகலமான மாடிபடிகளில் ஏறியவுடன்  சாய்வு நாற்காலி புத்தகங்கள் சோபாக்களுடன் கூடிய கீழ்தளத்தை பிரதிசெய்தாற்போல ஒரு ஹோல்.அங்கும் சுவரில் அவர்களுடை பெரிய படம்.. நீளமாய் கதவுகளின் உயரத்துக்கு இருந்த ஜன்னல்கள் திறந்திருந்தன.காற்றில் முடிச்சு ல் விலகியிருந்த ஜன்னல் துணி  ஏற்றப்பட்ட கொடியைப்போல படபடத்து வீசிக்கொண்டிருந்தது. ஹோலில் விரித்துவைத்திருந்த புத்தகமொன்றின் பக்கங்கள் அலைக்கழிந்தபடி கிடந்தன

ஹோலுக்கு அப்பால் மூன்று அறைகள் இருந்தன. கதவுகள் உயர்ந்த சீலிங்குக்குப்பொருத்தமாக உயரமாக வேலைபாடுகளோடு இருந்தன.

அவர் ஹாலைக்கடந்து இரண்டாவது அறையின் கதவைத்திறந்தார். விசாலமான அறை.கதவுக்கு னேரெதிரே அகன்ற அறையின் ஜன்னல்.இடப்புறத்தில் ஒரு கட்டில். வலப்பக்கத்தில் சிறுமேஜை. நாற்காலி. சுவரோடு சேர்ந்த அலுமாரி.

“ஏதாவது தளபாடம் கொண்டுவரப்போகிறீர்களா?”

“இல்லையில்லை  அனால் நான்குபெட்டி நிறைய புத்தகங்கள் . ஒரு புக்‌ஷெல்ஃப் வாங்கிப்போடுவோமா என்று ஒரு யோசனை”

அவர் சிரித்தபடி என்  தோளில் தட்டினார்.

“ ஏன்  உமக்கு அறைதருவதற்குச் சம்மதித்தேன் தெரியுமா”

…….

”அவன் ஒரு புத்தகப்புழு .வேலைக்குப்போவான். வந்தால் வாசித்துக்கொண்டேயிருப்பான்.ஒரு சிக்கலும் தரமாட்டான் என்றுதான் உம்மைப்பற்றி உம் சினேகிதர் சொன்னது”

நான் சிரித்தேன்.

”நான் அதில் தீவிரவாதி”

”அப்படியா இதையும் பார்த்துவிட்டுச்சொல்லும்” ஒரு சிரிப்போடு சொல்லியபடி எட்டி முதலாவது அறையின் கதவைத்திறந்தார்.

எனக்கு ஒதுக்கப்பட்டதை விட விசாலமான அறை ;நடுவே கட்டில்;ஆனால் எங்கும் புத்தகங்கள். கட்டிலில் , பல புத்தகங்கள் ந்மிர்ந்தும் கவிழ்ந்தும் பரவிக்கிடந்தன. மேசை நிறைந்திருந்தது.சுவரில் அடுக்குகளாய் உயர்ந்து கூரையைத்தொட்டிருந்தன புத்தகங்கள்.

“எனக்கு வாசிப்பு ஒரு வெறி.புத்தகங்கள் உயிர்.வாசித்தபடியே தூங்கிப்போவேன் விடியவிடிய வசிப்பேன் சில நேரம் தூங்குவது கூட இல்லை.” என்றார் அவர்.

“நீங்கள் அதி தீவிரவாதி” என்றேன் வியப்புடன்.

புத்தகங்கள் வாசிப்பு இலக்கியம் என்று தொட்டவுடன்இறுக்கம் தளர்ந்து,இயல்பாய் மாறி நீண்டநேரம் ஓடிய பேச்சு நான்புதன்கிழமை குடியேறுவதாய்த்தீர்மானித்ததோடு நிறைவடைந்தது.

‘மூன்றாவது அறையையும் வாடகைக்கு கொடுக்க இருக்கிறீர்களா?”

என்று புறம்படும்போது கேட்டேன்.

“இல்லை  இல்லை அதில்தானே இந்திரா இருக்கிறாள்” என்றார் அவர்.இந்திரா அவர் மனைவி.

புதன்கிழமை நான் போகவில்லை

வில்லியம் தெருவில்  ஒரு சிறிய அறை கிடைத்திருக்கிறது.

Advertisements

3 thoughts on “மூன்றாவது அறை.

 1. வாசிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது, முடிவும் நன்றாக இருக்கிறது. புத்தகங்கள் நிறைந்த அறைக்கு ஒரு அமானுடத்தன்மையைக் கொடுத்தது சிறப்பு.

  வாசிப்பு, நினைவுகள், கற்பனை என்று தொடர்புபடுத்திப் பார்க்கிறது மனம் – ஆனால் பிறரது கற்பனைகளைக் கற்பனைகளாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும்கூட, அவற்றுக்கு மெய்ம்மை தர நம்மை ஒப்புக்கொடுக்கவிடாமல் அச்சம்தான் தடுத்துக் காப்பாற்றுகிறது.

  நன்றி.

  1. நன்றி சார்.
   இந்த இரண்டு நாள் தொழில் விடுமுறை.வாராவாரம் எழுதுவதாக (நேரம் கிடைக்கும்ப்போது ).
   ஒரு பயிற்சிக்காகத்தான் இந்தமுயற்சி.கதைகள் தரத்தில் எப்படியும் இருக்கலாம்.
   commitment(நேரக்கட்டுப்பாடு,தரம்) இல்லாமல் எழுதுவது தான் ரிலாக்ஸாக இருக்கிறது.
   அதேபோல விமர்சனம் கட்டாயமில்லை.காரணம் ஒரு பதிவைப்படித்து உடனே அபிப்ப்ராயம் சொல்லி உரையாடக்கூடிய அளவுக்கு எனக்கும் நேரம் சரியில்லை. காரணம் இரவு வேலை பகலில் தூக்கம்.
   இன்னொன்று அபிப்பிராயம் சொல்வது கதை சொல்லவதைவிடக்கஷ்டம் .காரணம் அபிப்பிராயத்தை எதிர்கொள்ளும் முனையில் உணர்வுள்ள நபர் இருக்கிறார்.ஒரு அபிப்பிராயம் ஒரு வினாக்களை எழுப்பும்.அந்தவினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியது விமர்சகனின் கடமை.அது ஒரு விவாதமாக நீளும். அபிப்பிராயம் சொல்லிவிட்டு பதில் சொல்லாமல் விடுவது ஒரு குற்ற உணர்வைத்தருகிரது..நேரமின்மை ஒரு துரதிர்ஷ்டம்.
   உங்கள் குழும வீடுகளைக்கடந்து செல்லும்போது பிய்த்து உதறப்பட்ட சிறுகதைகளின் எச்சங்கள் சிதறிக்கிடப்பதைக்காணலாமோ. அலசி கும்மி துவைத்த சிறுகதைகள் கொடிகளில் தொங்கவிடப்பட்டு வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்குமோ 🙂

   எழுத ஆரம்பித்தது வெறு முடிந்த கதை வேறு.
   அதனால் இந்தப்பின்புலத்தில் இன்னும் இரண்டுகதைகள் . நீங்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் 🙂
   அத்தோடு பெரும் இலக்கியவாதிப்பாவனையில் நான் பேசிக்கொள்வதையும் சேர்த்து

   1. 🙂

    அதுவெல்லாம் பரவாயில்லை. அந்த மாதிரியான எதிர்ப்பார்ப்பு எனக்கு இல்லை – எப்போது வசதிப்படுகிறதோ அப்போது எழுதுங்கள், வேண்டுமானால் பின்னூட்டப்பெட்டியை மூடிவிடுகிறேன்.

    எந்தக் கட்டாயமும் நிர்ப்பந்தமும் இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், எதுவுமே கட்டாயமில்லை.

    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s