அந்த இரண்டு பேருக்கு நன்றி

..

விஷயம் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் இந்த அரை மணி நேரத்தில் இருவருக்கு நன்றி சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.  என் மீது பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இருவருமே பெயர் குறிப்பிடப்பட்டு நன்றி சொல்வதை விரும்ப மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

முதலாமவர் பயங்கரமான கேள்விகள் கேட்டு என்னை நிலைகுலையச் செய்தார். நான் எழுதுவதில் எக்கச்சக்க தப்பு கண்டுபிடித்து,  தப்பே இல்லாமல் நம்மால் எழுத முடியாதா என்ற ஆயாசத்தை அளித்தார். அதுகூட பெரிய கஷ்டமில்லை – ஏதோ எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை மாதிரியான சமாச்சாரங்கள் அல்ல அவை. எல்லாம் கருத்துப் பிழைகள். இந்தத் தப்பு இவர் சொல்லித்தான் தெரிகிறதே, நம்மால் சுயமாகக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் நம்பிக்கையின்மையையும் எதிர்கொள்வதுதான் சிரமமாக இருந்தது. ஆனால் போகப் போக, இந்த மாதிரி தவறுகளுக்கு எல்லாம் காரணம் நம் முன்முடிவுகள், assumptions, என்று புலப்பட்டு ஒருவாறு அவற்றை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தபின் கொஞ்சம் பரவாயில்லையாக ஆயிற்று. எழுதுவது எதுவானாலும் அதை மூன்று முறையாவது படித்துப் பார்த்து திருத்தும் வழக்கம் வந்தது  இப்போதெல்லாம் நான் செய்யும் தவறுகளில் பெரும்பாலானவை தவிர்க்க முடியாமல்  செய்யும் தவறுகள்.

இன்னொருவர் cognitive dissonance என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர். இதற்கு விளக்கம் என்று பார்த்தால் பக்கம் பக்கமாகப் போகிறது. ஆனால் சுருக்கமாகச் சொன்னால், பிழைப்புக்காக பிடிக்காத வேலையைச் செய்பவர்கள், உதவாக்கரை கணவனோடு குடும்பம் நடத்துபவர்கள், தவறான தகவல்கள் நிறைந்த போதனைகளைப் பின்பற்றுபவர்கள், களிமண் கால்கள் கொண்ட ஆதர்சங்களைக் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் முரண்கள்தான் cognitive dissonance. வேலையை விட்டுவிடலாம் என்றால் பணத்தேவை, டைவர்ஸ் பண்ணலாம் என்றால் குழந்தைகளுக்கு அப்பா இல்லாமல் போய்விடும்,  இதுவெல்லாம் ஸ்ருதியா என்றால் ஆன்மிக ஆதாரத்தை இழக்க வேண்டியிருக்கும், குறைகளுக்காக நம் ஆதர்சங்களைக் கேள்வி கேட்டால் தனியாக நிற்க வேண்டியிருக்கும் – எனவே, மனம் இந்த மாதிரி முரண்களுக்கு ஏதோ ஒரு தீர்வு கண்டு கொள்கிறது.  இதில் எதுவும் புதுசு இல்லை.

ஆனால் இதற்கான தீர்வுகளில்தான் விஷயம் இருக்கிறது. நாம் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம், நடத்தையை மாற்றிக் கொள்ளலாம், இன்னும் விஷயம் தெரிந்து கொள்ளலாம், அல்லது இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை / எல்லாரும் இப்படிதான் இருக்காங்க / வேற வழியில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்ளலாம். இதில் என்ன பிரச்சினை என்றால் சில சமயம் அநீதி, அநியாயம், அக்கிரமம், அராஜகம் இந்த மாதிரியான அறமற்ற விஷயங்களுக்கு  உடன்பட வேண்டியிருக்கும்.

இந்த இடத்தில் நாம் செய்யக்கூடியது என்ன என்று யோசித்தால், மன அமைதி எக்கேடோ கெட்டு ஒழியட்டும், நாம் குழப்பவாதிகளாக இருந்தாலும் பரவாயில்லை, இந்த cognitive dissonanceன் வலியோடே வாழ்வதுதான் சரி என்று தோன்றுகிறது.  குறைந்தது சரி தவறு, நியாய அநியாயம் குறித்த கேள்விகளாவது உயிரோடு இருக்கின்றனவல்லவா, எப்போதாவது வழி திறக்கும்.

என்னை யாரும் இதுவரை தனிப்பட்ட முறையில் தாக்கியதில்லை. அப்படி யாராவது ஏதாவது சொன்னால், “நான் செய்தது நியாயம் என்று சொல்ல மாட்டேன், என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டேன். காரணம், என்னை முழுசாகப் புரிந்து கொண்டால் இன்னும் மோசமாகத் திட்டுவாய்” என்ற பதிலைக்கூட தயார் பண்ணி வைத்திருக்கிறேன். வாழ்க்கை அந்த மாதிரியான முரண்பாடுகளின் தண்டவாளத்தில்தான் ஓடிக கொண்டிருக்கிறது.

இந்த இருவருக்கும் என் நன்றிகள்.

6 thoughts on “அந்த இரண்டு பேருக்கு நன்றி

    1. ஏன் ஸார், நானெல்லாம் அவ்வளவு வர்த் இல்லையா?

      யாராவது தாக்கினா என்ன சொல்றதுன்னு பதிலெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன், இப்படி சிரிக்கறீங்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s