வேற வாய்

..

நேற்று டிவிட்டரில் நண்பர் @SafeTweets இதைப் பகிர்ந்திருந்தார் –

சில நாட்களாகவே மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தைச் சொல்ல இந்தப் படம் உதவியாக இருக்கிறது. காரண காரியங்களை விளக்க வேண்டிய அவசியமில்லாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எடுத்துக் காட்டுகிறது இது – பிறருக்கு அறிவுறுத்த மட்டுமல்ல, எனக்கு அறிவுறுத்தவும் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

என்பதன் அடுத்த கட்டமாக, அண்மைய பதிவுகளில் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களைக் காட்டமாகச் சாடியதில் நான் சில தப்பாட்டங்கள் ஆடியது குறித்து வருத்தம் தெரிவித்து அதற்காக அவரிடம் நிபந்தனைகளற்ற மன்னிப்பு கோருகிறேன்.

இனி உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமா என்று அடுத்த வேலையைப் பார்ப்போம்.

புகைப்பட உதவி – Life Pro Tips