ஒரு சிறு வாழ்த்து

The words of a dead man
Are modified in the guts of the living.
In Memory of W.B. Yeats,  W.H. Auden.

முதலில் அரங்கசாமி சொன்னார், அப்புறம் அதை ஒரு பெரும் திகைப்புடன் ஸ்ரீதர் நாராயணன் பகிர்ந்து கொண்டார் :

நாலு வரியும் ஒரு ஆச்சரியக்குறியும் இருந்தால் போதும், ஒரு கவிதை பதிவு போடலாம் என்றால் அதற்கே வழியில்லாமல் இருக்கும் நிலை நம் நிலை. அடுத்த பத்தாண்டுகளுக்கு தினமும் ஒரு அத்தியாயம் எழுதப் போகிறேன் என்று அறிவிப்பு செய்ய என்ன ஒரு துணிச்சல் வேண்டும்! 

சொந்தச் சரக்கு ரொம்ப குறைவென்பதால் வாழ்த்துக்கவிக்கு W.H. Audenஐ துணை சேர்த்துக் கொள்கிறேன் – அவரது In Memory of W.B. Yeats கவிதையின் இறுதி அடிகள் இவை –

Earth, receive an honoured guest:
William Yeats is laid to rest.
Let the Irish vessel lie
Emptied of its poetry.

In the nightmare of the dark
All the dogs of Europe bark,
And the living nations wait,
Each sequestered in its hate;

Intellectual disgrace
Stares from every human face,
And the seas of pity lie
Locked and frozen in each eye.

Follow, poet, follow right
To the bottom of the night,
With your unconstraining voice
Still persuade us to rejoice.

With the farming of a verse
Make a vineyard of the curse,
Sing of human unsuccess
In a rapture of distress.

In the deserts of the heart
Let the healing fountains start,
In the prison of his days
Teach the free man how to praise.

கடைசி இரு ஸ்டான்ஸாக்களையும் பாருங்கள் – ஒரு கலைஞனிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அதை அவன் செய்தால் வேறு எதுவும் பொருட்டல்ல.

அதனால்தானோ என்னவோ ஆடன் இந்தக் கவிதையில் தான் முன்னர் எழுதிய மூன்று ஸ்டான்ஸாக்களை பின்னர் நீக்கி விட்டார் –

Time that is intolerant
Of the brave and the innocent,
And indifferent in a week
To a beautiful physique,

Worships language and forgives
Everyone by whom it lives;
Pardons cowardice, conceit,
Lays its honours at their feet.

Time that with this strange excuse
Pardoned Kipling and his views,
And will pardon Paul Claudel,
Pardons him for writing well.

‘மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரை யும்அங்கு வாழவைப்போன்’, என்று  அருணகிரிநாதர் பாடியது நினைவுக்கு வருகிறது. நிற்க.

என்றோ வாழ்ந்த வியாசர் செய்ததை திரும்பச் செய்ய இன்று ஜெயமோகன் மீண்டும் முயற்சிக்கவிருக்கிறார் –

The words of a dead man
Are modified in the guts of the living.

தமிழுக்கு வளம் சேர்த்து, நம் பண்பாட்டின் புண்களை ஆற்றி, இந்த மண்ணின் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சுதந்திரத்தை உணர்த்தி, நிறைந்த மனதுடன் நிகழ்த்தப்பட்ட துதியாக நம் ஒவ்வொரு நாளும் மலர்வதாயின் ஜெயமோகனின் வெண்முரசு ஒலிக்கட்டும் – பத்தாண்டுகள் மட்டுமல்ல, காலம் உள்ளவரை மொழியறிந்த ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஓங்கி ஒலிக்கட்டும்.

– என்ற எளிய வாழ்த்தை புத்தம் புதிய காப்பி வாசகர்கள் சார்பில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்குத் தெரிவித்து வெண்முரசை வாழ்த்தி வரவேற்கிறேன்.

11 thoughts on “ஒரு சிறு வாழ்த்து

 1. வணக்கம்
  பதிவு சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்…..இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்…..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. நன்றி ஸார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு தின வாழ்த்துகள்.

 2. போன வருடம் மாதிரி இந்த வருடம் இருக்குமோ என்னவோ?
  தினம் தினம் ஏதாவது செய்திகள். யாராவது ஒரு பிரகஸ்பதி ஏதோ சொல்லிப் போக, அதற்கான பொங்கல்கள். ஏதாவது வன்கொடுமைகள் அதற்கான பொங்கல்கள்.
  ஆனால் இவ்வருடம் எப்படியிருக்குமோ? ஒருவேளை எதுவும் நடக்காவிட்டால் எதற்காகப் புலம்புவது? எதற்காகப் பொங்குவது?

  என்று கவலையில் இருக்கும் பல்லாயிரம் கோடி மக்களுக்கு ஒரே பதிலாய் இன்னும் பத்துவருடத்திற்கு நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்று சட்டென்று விஷயத்தை உடைத்திருக்கிறாரே, அவரை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  1. :))))

   என்ன செய்வோம்னு சொன்னோம், என்ன செய்ய மாட்டோம்னு சொன்னோமா?

   அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது – வீணா கற்பனையை வளத்துக்கிட்டு அப்புறம் குத்தம் சொல்லாதீங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s