பி ஏ கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள் ‘ – முதற்பார்வை

பி ஏ கிருஷ்ணன் எழுதிய மேற்கத்திய ஓவியங்கள் என்ற புத்தகம் ஒரு அன்பர் அருளால் வரப்பெற்றேன். விலை கொஞ்சம் அதிகம்தான், ஆனால் இந்த மாதிரி புத்தகத்தை இதைவிட குறைவான விலைக்கு விற்க முடியும் என்று தொன்றவில்லை. உறுதியான அட்டை, வழுவழுப்பான தாள், பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவரும் வண்ணவண்ண ஓவியங்கள் – புத்தகத்தைப் பரிந்துரைக்க பல காரணங்கள் இருக்கின்றன, பி ஏ கிருஷ்ணனின் ஓவியக் குறிப்புகளைப் பேசாமலே.

புத்தகம் எழுதுவது, அச்சிடுவது, விற்பது இது எல்லாம் தொழில்தானே? எத்தனை பேர் பிழைப்பு இதை நம்பி இருக்கிறது? ஆனால் ஆஸ்ட்ரிச்சுத்தனமாக நம் ஆட்கள் பெருநிறுவனங்களின் உதவியை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். இதே புத்தகத்தை இதை விட இருமடங்கு பெரிய சைஸில் இதே விலைக்கு பதிப்பித்திருக்கலாம் – இரண்டாம் பகுதி வரப்போகிறது என்று சொல்கிறார்கள், அப்போதாவது இதைச் செய்யலாம். எவ்வளவோ நல்ல ஓவியங்கள் இதில் இருக்கின்றன, அதை எல்லாம் கூர்ந்து கவனித்து குறிப்புகள் எழுதியிருக்கிறார் பி ஏ கிருஷ்ணன், ஆனால் கண்ணைக் கிட்டே கொண்டு போய்தான் அந்த அழகை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது – ஒரு பூதக்கண்ணாடியாவது கொடுத்திருக்கலாம்.

ஓவியங்களைப் பற்றி கிருஷ்ணன் எழுதியிருக்கும் நுண்விவரணைகள் விஷயத்தில்தான் இப்படி என்றில்லை, இந்த ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்து அவர் அளிக்கும் பின்கதை விவரங்களை முழுமையாய் விளங்கிக் கொள்ளவும் அலமாரி நிறைய புத்தகங்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். எகிப்திய ஓவியங்களுக்கு மூன்று பக்கம், கிரேக்க ஓவியங்களுக்கு நாலு பக்கம் (தோராயமாகச் சொல்கிறேன்) என்று ஓரே பறவைப் பாய்ச்சலாக இருக்கிறது.

இதை ஒரு குறையாகச் சொல்லக்கூடாது- கலர் கலராகப் படம் போட்ட தடிதடியான நாலு புத்தகங்களைப் பக்கத்தில் ஒரு சேரில் வைத்துக் கொண்டு காபி குடித்துக்கொண்டே கண்களால் மேயும் வாசகர்களுக்காக இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஓவியங்களைப் பொருத்தமட்டில் அருமையான தேர்வு, அறிமுகங்கள் கச்சிதம் – ஆனால் முதல் காப்பியைக் குடித்தும்போதே ரெண்டாம் காப்பி நாக்குக்கு தேவைப்படும் சைஸில் இது இருப்பதுதான் குறை. இன்னும் பெரிய புத்தகமாக, இன்னும் விரிவான விளக்க்கங்களுடன் இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்படுவது அவசியம்.

அதைவிட அவசியம் நான் சும்மா ஒரு வாசகன்தான் விமரிசகன் அல்ல என்ற டிஸ்கிக்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்தத் தன்னடக்கம் இவ்வளவு நல்ல புத்தகத்துக்கு பொருத்தமாக இல்லை. இதன் இன்னொரு வெளிப்பட்டு ஏசுபிரான் என்றெல்லாம் எழுதுவது – ராமபிரான், கிருஷ்ணபிரான் என்று எழுதுவது இது போன்ற ஒரு புத்தகத்தில் எந்த அளவுக்கு பொருந்தாமல் இருக்கும், யோசித்துப் பாருங்கள்.

மேற்கத்திய ஓவியக்கலையின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியமான படைப்புகளுக்கு நல்ல ஒரு அறிமுகமாக இருக்கும் இந்தப் புத்தகத்தில் அச்சிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் படங்கள் பிரமாதம், உரைநடையும் அந்த உயர்வை எட்டியிருக்கலாம். இன்னும் பெரிய சைஸ் புத்தகத்தில்தான் இது சாத்தியப்படும். அதற்காக நாலு கம்பெனிகளிடம் காசு வாங்கினாலும் தப்பில்லை. நாலு பக்கத்தில் எகிப்திய ஓவியங்களை கவர் செய்து ஒரு எழுத்தாளராக பி ஏ கிருஷ்ணன் தனக்கு எதிரான பணியாக இதை மேற்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இந்தப் புத்தகத்தை இதன் அச்சுத் தரத்துக்காக, மேற்கத்திய ஓவியக்கலையின் வளர்ச்சியைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்களுக்காக வாங்கலாம் என்று உற்சாகமாக நம்மால் பரிந்துரைக்க முடிகிற அளவுக்கு குறிப்புகளைப் பரிந்துரைக்க முடியவில்லை.

இது பற்றிய விரிவான விமரிசனம் ஆம்னிபஸ் தளத்தில் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எது ஒன்றையும் ஒரிஜினலாக எழுதியே மாசக்கணக்காக ஆகி விட்டது – உருப்படியாக நாலு பத்தி எழுத முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான் இடைக்கால நடவடிக்கையாக இந்தப் பதிவு. இனி ஒரு ஆம்னிபஸ் பதிவு என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகம்தான், பார்க்கலாம்.

Advertisements

One thought on “பி ஏ கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள் ‘ – முதற்பார்வை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s