பதிவரின் பெருஞ்சுமை

“உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா?” என்ற இந்தப் பதிவை இப்போது நான் எழுதுவதானால், மாத்யூ ஆர்னால்டு “We cannot kindle when we will/ The fire which in the heart resides,” என்று எழுதியது ஒரு பெரும்பிழை; அமேசான் கிண்டில் மின்னூல் வாசிப்புக் கருவி அவர் காலத்தில் இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார், என்று துவங்கியிருப்பேன். தினமும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் கணினிமுன் உட்கார்ந்து கொண்டிருந்தவன் கடந்த ஒரு வாரமாக அரைமணி நேரத்துக்கு மேல் இணைய வாசிப்புக்கு ஒதுக்க முடியாதவனாக இருக்கிறேன். ஆம், வாசிப்பெனும் பெருந்தீ இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது!

இருந்தாலும்கூட, மாத்யூ ஆர்னால்டு தன் கவிதையின் துவக்கத்தில் தப்பு செய்தாலும் அப்புறம் சரியாகத்தான் எழுதியிருக்கிறார் – “But tasks in hours of insight will’d/ Can be through hours of gloom fulfill’d,” என்று மனதைத் தேற்றிக்கொண்டு,

“With aching hands and bleeding feet
We dig and heap, lay stone on stone;”

என்பதை அன்னார் நமக்காகதான் எழுதியிருக்கிறார் என்று வியந்தவாறே பதிவருக்குரிய கடமையுணர்வோடு இப்பதிவை புத்தம் புதிய காப்பி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர் வெ. கணேஷ் அவர்களின் வலியுறுத்தல் இல்லாமல் பதிவு சாத்தியப்பட்டிருக்காது. நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Advertisements

17 thoughts on “பதிவரின் பெருஞ்சுமை

  1. கத்தி பாட்டு எப்படி இருக்கு, ஐ ரகுமான் என்று பற்றியெரியும் பிரச்சினைகளை எழுதுவார்ன்னு பாத்தா இப்படி எய்ட்டி ப்ளஸ் கூட பேசிக்கிட்டு இருக்காரே, தம்பி கருத்தாயிட்டாப்ல? 🙂

 1. என்ன சார், நான் இல்லாமலே என்னைப் பத்தி பேச்சு நடக்குது??? ‘ஐ’ கேட்டதுல வாழ்க்கை வெறுத்துப் போச்சு, அதான்…

  (என்னடா பதிவு போட்டு ஒரு வாரத்துக்குள்ள 60 pageviews வந்திருக்கே, அதுக்குள்ளேயே தாத்தா பிரபல பதிவர் ஆயிட்டாரோன்னு பயந்துபோய் பதறியடிச்சு துப்பறிஞ்சா varasiththan சார் இங்க விளம்பரம் பண்ணியிருக்கார்…)

  1. அப்ப அறுபதும் எமதா? 🙂

   நல்லா செஞ்சிருக்கிங்க. என்னதான் மத்தவங்க சொன்னாங்க, நான் டைப்தான் செஞ்சேன் என்று தன்னடக்கத்தோட நீங்க சொன்னாலும், இதை ஸ்தல புராணத்தில் ஆரம்பிச்சது அருமையான விஷயம். வாக்கிய அமைப்பு, சொற்தேர்வு எல்லாம் பிரமாதமா வந்திருக்கு.

   நீங்க இங்கெல்லாம் எழுத மாட்டேன்னு சொன்னப்போவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இப்ப உறுதியாயிடுச்சு- உங்க தளமே வேற 🙂

   வாழ்த்துகள்.

   1. ஐயையோ… நான் சொந்தமா எழுதினது அவரோட about me விளக்கமும் கீழே ரெண்டு கமென்ட்டும் தான். பதிவை எழுதினது முழுக்க அவர்தாங்க. இடையில மூணு நாலு வாக்கியம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணினேன். ஆளு தமிழ், இங்க்லீஷ் ரெண்டுலேயும் புலி. அந்தக் காலத்துலேயே தமிழ் மீடியம் படிச்சு 10வது முடிச்சிட்டு, திரும்பவும் இங்கிலீஷ் மீடியம் ஒண்ணாம் வகுப்புல இருந்து 10th வரைக்கும் செஞ்சிருக்கார். முதல் பதிவு கொஞ்சம் கட்டுரை பீல்-ல வந்திருக்கு. ஒரு பத்து பதிவு எழுதி பிக்கப் ஆனதும், அனுபவங்களை டீடைலா விபரிச்சு எழுதிப் பார்க்கச் சொல்லலாம்னு இருக்கேன்.

    நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கறேன். இப்போ வெட்டியா இருக்கறதானால விமர்சனங்கள் கூட ரெண்டு மூணு பக்கம் நீளுது. ப்ளஸ்ல, fbல போட்டா எல்லாரும் பயந்துபோய் வாசிக்காம +1 , reshare பண்ணிட்டு ஓடிடறாங்க. 🙂 அதுதான் ப்ளாக் பத்தி யோசிக்கறேன். ப்ளாக் ஆரம்பிக்கறதுன்னா தொடர்ந்து எழுதணுமே? அனுபவங்கள் அதிகம் இல்லாம என்னத்த எழுதறது?

    1. அனுபவங்கள் கற்பனையைக் குறுக்குபவை, அதெல்லாம் வேலைக்காகாது. ஒரு எழுத்தாளன் அனுபவங்களைச் சுமந்து கொண்டு அலையக்கூடாது. இன்னிக்கு சோஷல் மீடியாவே அவுட்ரேஜ் கல்ச்சரா இருக்கு, வந்தது போனது, நடந்தது நடக்காதது, நியாயம் அநியாயம் எல்லாம் யோசிச்சுக்கிட்டு இருக்க முடியுமா?

     சொல்லப்போனா உங்களுக்கு அனுபவம் இல்லாட்டிதான் நிறைய விஷயங்களுக்கு கோபப்பட முடியும், நிறைய பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல முடியும். தயவு செய்து அனுபவங்களுக்கு ஆசைப்படாதீங்க, விஷயம் தெரியாம பேசினா இன்னும் நல்லது 🙂

     இது உங்களைப் போன்ற வளரும் எழுத்தாளருக்குச் சொல்வது; வளர்ந்த எழுத்தாளருக்கு அனுபவம்தான் முதலீடு – தாத்தா அவர் லைன்ல போகட்டும், அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் 🙂

     1. //விஷயம் தெரியாம பேசினா இன்னும் நல்லது//
      🙂 என்ன ஒரு தத்துவம்!! fb status ங்கறது குறைப்பிரசவக் குழந்தை. ரெண்டு வரில எழுதும்போது கண்டபடி ஏதாவது சொல்லலாம். எல்லாரும், ஏன் எழுதினவனேகூட பத்து நிமிஷத்துல அதை மறந்திடுவான். மெனக்கட்டு பதிவு எழுதினா அப்படிச் செய்ய முடியாதில்லையா?

      //தாத்தா அவர் லைன்ல போகட்டும்// ஓகே 🙂

      1. ப்ளாக் படிக்க எல்லாம் இப்ப ஆள் இல்லை, பாத்து செய்ங்க

       தமிழின் தலையாயச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏன் ப்ளாக் பண்ணாம பேஸ்புக்ல எழுதிக்கிட்டு இருக்காங்க? யோசிச்சுப் பாருங்க ஸார்

       tumblrல வேணா ஏதாவது முயற்சி பண்ணுங்க, டைம் வேஸ்ட் ஆகாம பொழுது போவும் 🙂

       1. //ப்ளாக் படிக்க எல்லாம் இப்ப ஆள் இல்லை, பாத்து செய்ங்க//

        கவனிச்சேனே.. சரியா நான் வர்ற சமயம் பார்த்து எல்லாரும் “ஓடுங்க.. ஓடுங்க.. அது நம்மள நோக்கித்தான் வருது”ன்னு ஓடிட்டாங்க. மணிகண்டன் சார் மட்டும் மனந்தளராம தினமும் நாலு பக்கம் எழுதிட்டிருக்கார்.

        டம்ளர்ல தமிழ் என்ன நிலைமைல இருக்கு?

        1. அதிலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பேயோன் மட்டும்தான் சூப்பரா ஏதோ எழுதிக்கிட்டு இருக்கார், நீங்க வந்தா அவருக்கு வெயிட்டான ஒரு போட்டி வந்த மாதிரி இருக்கும்!

       2. இதைப்படிக்க 2025 இல் இருக்கப்போகிற நான் எனக்குச்சொன்னது ஞாபாத்துக்கு வருகிறது. 🙂
        “பேஸ்புக்க்ல எல்லாம் இப்ப ஆள் இல்ல பாத்துச்செய்”

        1. அவ்வளவு நாள் இருக்குமா? இணையத்தில் எல்லாம் மாறிக்கொண்டேதான் இருக்கும் என்று தோன்றுகிறது. பத்தாண்டுகள் என்பது நூற்றாண்டு போலிருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s