மானுடர்க்கொரு மகத்தான செய்தி

இதில் ஏதோ செய்தி இருப்பது போல் தோன்றுகிறது

மேலதிக தகவல்களுக்கு – A Worm’s Mind In A Lego Body, I Programmer

Advertisements

29 thoughts on “மானுடர்க்கொரு மகத்தான செய்தி

  1. எனக்கும் ஒன்னும் புரியல, ஆனா இங்கே emefge என்ற வார்த்தையைப் படிச்சப்ப, ” The key point is that there was no programming or learning involved to create the behaviors. The connectome of the worm was mapped and implemented as a software system and the behaviors emerge,” ஏதோ ஒரு பெரிய விஷயத்தை ஆரம்பிச்சுட்டாங்க என்று தோணிச்சு.

  2. நல்ல ப(தி/கிர்)வு… மிகவும் முக்கியமான ஆராய்ச்சிங்கறது என்னோட கருத்து. இப்படியே போய் ஒரு வழியா மனித மூளையையும் stimulate பண்ண முடிஞ்சா நம்ம ஆவி, ஆன்மா, மறுபிறவிகளுக்கு முடிவு கிடைச்சிடும். அப்புறமா வர்ற சட்ட / சமூக சிக்கல்களை (கேள்விப்பட்டிருப்பீங்க) லாயர்ஸ் பார்த்துக்கலாம்.

    • நல்ல பதிகிர்வு என்ற அங்கீகாரத்துக்கு நன்றி!

      அடிப்படையில் எந்த ஆணையும் இல்லாமல், பக்கவாட்டு செல் இரண்டில் எலக்ட்ரானிக் சிக்னல் வந்தா இந்த செல் ஆப் ஆகணும் என்கிற மாதிரியான செல் கட்டமைப்பில் இருந்து இப்படியாப்பட்ட விஷயங்கள் நடக்குது. அதாவது, ஒட்டுமொத்த ரோபோவுக்கும்னு எதுவும் சொல்லாமல், செல்லுக்குச் சொன்னது செல்புக்குக் கொண்டு போய் விடற மாதிரியான விஷயம்னு தோணுது.

  3. பேய் இருக்கா இல்லையாவா…..?,
    ஆவிகளோடு பேசமுடியுமா?,பில்லி சூனியம் வேலைசெய்யுமா?நாடி ஜோதிடம் உண்மையா?,கூடுவிட்டுக்கூடு பாய முடியுமா?,மந்திரிக்க முடியுமா? இப்படி பல கேள்விகளுக்கு மை போட்டு விடைதருகிறார் ..ப்ரொபஸர் ….. ஞானம் BPBS.(பச்சிலர் ஒஃப் பில்லி,பச்சிலர் ஒஃப் சூனியம்)தொடர்பு கொள்ளுங்கள் 🙂

    Louis Theroux பிபிசியில் விவரணப்படந்தருபவர்.extreme நம்பிக்கையுள்ளவர்களைச்சந்தித்துப்பேசுகிறார்.அதில் பார்த்தேன் ஒருவர் உடலில் ஏலியன் வந்து பேசுகிறது.
    அவருடைய புத்தகம் ஒன்று: The Call of the Weird: Travels in American Subcultures

    எல்லா மனிதர்களுக்கும் நம்பிக்கைகள் இருக்கின்றன.Belief system உடலின் ஜீன் கட்டமைப்பை மாற்றக்கூடும் என்கிறார் ஒரு உயிரியல் அறிஞர்.இவரைப்போல சிலவிஞ்ஞானிகள் மாற்றுக்கருத்துக்களை வைக்கிறார்கள். குவாண்டம் இயற்பியல் இதற்கு உதவுகிறது.(Ex: particle vs wave,,quantum entanglement ,Quantum pseudo-telepathy etc)The Biology of Belief – Dr. Bruce Lipton –

    நரம்பியல் விஞ்ஞானம் முன்னேறிக்கொண்டிருக்கிறது.ஆனால் consciousness இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை.phenomena என்கிறார்கள் மூளைக்குமப்பால் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.Consciousness என்று ஒரு இதழ் வருகிறது.அதில் கருத்துக்கள் ஆய்வுகளை ஊக்கப்படுத்தி தொகுத்து எழுதுகிறார்கள்.www.quantumbrain.org/ Dr.Huping hu.
    hindu philosophy பின்னணியுடைய குவாண்டம் இயற்பியல் அறிஞர்கள் ஆன்மாவை குவாண்டத்தினூடாக மொழிபெயர்க்க முயல்கிறார்கள்.
    இப்படிப்பல தளங்களினூடாக ஏதோநடந்துகொண்டிருக்கிறது.

    consciousness மூளைகடந்தது என்றால் பேய் இருக்கிறது.பேய் எதனாலானது என்றால்? particle அல்ல

    நம்பிக்கையில் பேய் இருக்கிறது என்றால் இருக்கும்

    • இது ஆழமான கருத்து ஸார், விரிவாக விவாதிக்க வேண்டும். பின்னொரு சமயம் பதிவாகப் பேசலாம், அல்லது அவ்வப்போது துணுக்குப் பதிவுகளாகவோ கவிதைகளாகவோ இதைப் பேசுவோம். எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச இப்போது மனசு மறுக்கிறது 🙂

  4. இருத்தலுணர்வு பற்றிய மூளை/விஞ்ஞான ரீதியான பார்வைகள் சுவாரஸ்யமானவை.அறிவது நல்ல பொழுதுபோக்கு. புதியது அறியத்தவிக்கிற மனசுக்குத்தீனி.அங்கே இருக்கிறதா?இல்லையா?என்ற வினா.விடை தெரியாதபடியால்தான் பேசிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
    இருத்தலுணர்வு உடலுக்கப்பாலானதென்ற ஏற்கனெவே கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையோடுபேசுவதால் விஞ்ஞான ரீதியில் பேசும்போது ”தெரியாதமாதிரி” உணர்வை உருவாக்கிப் பேச வேண்டி ஏற்படுகிறது

    மெய்ஞான ரீதியாகப்போனால் “தெரிஞ்சமாதிரி” பேசவேண்டிவரும்.:)

    எப்படிப்பேசினாலும் ஒரு “மாதிரி” (பாவனை)பேசவேண்டியிருக்கிறவிடயம். உண்மைதான்

    • அண்மையில்தான் இதைப் பார்த்தேன்- http://i762.photobucket.com/albums/xx269/madisonny723/nov2014/AWorldAliveandCommunicating.png

      சில மாதங்களுக்கு முன் வந்த செய்தி, இதையும் படித்துப் பார்க்கலாம் – http://phys.org/news/2014-01-discovery-quantum-vibrations-microtubules-corroborates.html

      இதை எல்லாம் பேசுவதில் என்ன பிரச்சினை என்றால், இன்னும் கொஞ்சம் டீப்பா எக்ஸ்ப்ளேயின் பண்ணு என்று யாராவது கேட்டுக் கொண்டு வந்தால், ஒன்றும் சொல்ல முடிவதில்லை 🙂

      உண்மையில், இதெல்லாம் மர்மம்தான் – வீலர் சொன்னபடி,

      “Paper in white the floor of the room, and rule it off in one-foot squares. Down on
      one’s hands and knees, write in the first square a set of equations conceived as able
      to govern the physics of the universe. Think more overnight. Next day put a better
      set of equations into square two. Invite one’s most respected colleagues to contribute
      to other squares. At the end of these labors, one has worked oneself out into the doorway.
      Stand up, look back on all those equations, some perhaps more hopeful than others,
      raise one’s finger commandingly, and give the order “Fly!” Not one of those equations
      will put on wings, take off, or fly. Yet the universe “flies”.”

      நாம் இருக்கிறோம் என்பதுகூட வியப்பாக இல்லை- எல்லாம் இயந்திரகதியில் நடப்பதாகவும், நான் என்பது ஒரு பிரமை என்பதாகவும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது: கனவில் இருக்கும் நான் ஒரு பிரமை என்பது மாதிரியே இப்போதிருக்கும் நானும் ஒரு பிரமையாக இருக்கலாம் (அண்மையில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த விபத்து. ஒரு மில்லிமீட்டர் பிசகியிருந்தால் வெறும் வீக்கம்தான் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் சொல்கிறார்- ஒரு நாளம் உடைந்து, மூளையில் சவ்வூடுகளில் ரத்தம் பரவி, கணத்தில் மரணம் நிகழ்கிறது என்றால், மனித வாழ்வு யந்திரத்தன்மை கொண்டதுதான் என்று தோன்றுகிறது. ஸ்க்ரூ கழன்று விழும் கடிகாரம் போல், நம் காலமும் முடிவுக்கு வருகிறது. பருண்ம நியதிகள் தவறும்போது, நம் உயிரைத் தூக்கி நிறுத்தும் சக்தி உடலில் இல்லை.

      ஆனால், இந்த உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். எத்தனை விளக்கங்கள் சொன்னாலும், இங்கு மூச்சு புகுந்தது எப்படி?

      ரொம்ப சாதாரணமான விஷயம், இந்தச் சூரியன் பற்றியெரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் அந்த வெளிச்சத்தில்தான் ஒவ்வொரு நாளும், பலகாலமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது, சூரியனின் ஈர்ப்பைத் தாண்ட முடியாமல்தான் கிரகங்கள் எல்லாம் அதைச் சுற்றி வருகின்றன. அப்படியானால் சூரியனை எப்படி நினைத்துப் பார்ப்பது என்றே தெரியவில்லை.

      நான், ஆன்மா, அகம்- எல்லாம் எந்திரத்தன்மை கொண்டதாக இருக்கலாம். ஆனால் என் பிரக்ஞை மட்டும் எப்படி, இவ்வுலகில் இல்லாத ஒன்றாக, எங்கிருந்தோ வந்ததாக இருக்க முடியும்? எனக்கு ஒரு அகம் இருந்தால், தன்னுணர்வு என்று ஒன்றிருந்தால், எப்படி என் ஒவ்வொரு திசுவும் நட்சத்திரத் துகளோ, அதே போல் என் உணர்வும் இந்த அண்டத்தின் உணர்வினின்று வேறுபட்டதாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

      ஆனால், இந்த வீடியோவில் இருப்பது போன்ற டிரெண்ட் தொடர்ந்தால், ஏதோ ஒரு கட்டத்தில், மனிதன் தனக்கென்று என்ற ஒரு தனித்தன்மையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் சாத்தியமே அதிகம் என்று தோன்றுகிறது. குரல், அதில் எழும் சொற்கள், அவற்றின் தனித்தர்க்கம்- இவற்றைத் தவிர்த்து யோசித்தால், மரம் செடி கொடி விலங்குகளைவிட, மனிதன் எந்த விதத்திலும் இயற்கை விதிகளைக் கடந்தவனல்ல என்று தோன்றுகிறது- http://solvanam.com/?p=20904 🙂

  5. ”மனிதன் எந்த விதத்திலும் இயற்கை விதிகளைக் கடந்தவனல்ல”
    தற்போதைய இயற்கை விதிகள் பற்றிய அறிவு முழுமையடையவில்லை .அதனால் கடந்தவனல்லன் என்று சொல்வது தப்பாகாது.
    பிள்ளையார் பிடிக்கக்குரங்காகலாம்.குரங்கு பிடிக்க பிள்ளையாராகலாம்,
    ஏட்டுச்சுரைக்காயில் கறிசெய்து சுவைக்கின்றதாகிவிட்டது மனித சமூகம் என்று
    சொல்வனம் கட்டுரை cobram வைத்து க்ரௌஸ், டென்னட், டாக்கின்ஸ் காலை வாரமுயன்றிருக்கிறது.;)
    நினைவாற்றலில் சேர்த்துவைக்கப்பட்ட கருத்துக்கள் சிந்தனைகள் எழுத்துக்களின் வருகையோடு புற உலகில் சேமித்துவைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.அந்தகருத்துக்களோடு புதிய எண்ணங்கள் என அது அன்றாடம் வேட்டையாடி உண்ட மனிதன் உணவைச்சேமிக்க உற்பத்தி செய்யப்பழகியதைப்போல பரிணாமத்தின் ஒரு கூறுதான்.

    mindfulness என்ற பெயரில் நடக்கின்ற பௌத்த தியான ஆராய்ச்சி முடிவுகள் பல நல்ல முடிவுகளைத்தந்திருக்கின்றன.consciousness பற்றிய பார்வையில் நம்பிக்கையூட்டுகின்றன
    pure observation என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவார். நம்பிக்கைகளைக்கடந்த எதிர்பார்ப்புகளற்ற,விருப்புவெறுப்புகளற்ற ஒரு பார்வை எங்கும் எதிலும் தேவைப்படுகிறது.

    ஆனால் ஒரு நாணயத்தை நாலு முறை சுண்ட தொடர்ந்தும் தலை விழுந்தவுடன் ஐந்தாவதாகவும் தலையே விழும் என்று நம்பிக்கைகொண்டுவிடுகிறது பாழும் மனசு .தலை விழலாம் அல்லது தலையில் விழலாம். எல்லாம் 50:50 என்பதை மறந்தே விடுகிறது

  6. “hindu philosophy பின்னணியுடைய குவாண்டம் இயற்பியல் அறிஞர்கள் ஆன்மாவை குவாண்டத்தினூடாக மொழிபெயர்க்க முயல்கிறார்கள்.” இப்படி நான் குறிப்பிட்டபேச்சுக்களில் ஒன்று.
    Quantum Physics FAILS Richard Dawkins : Hinduism at Oxford Physics Society:

    நான் இவைபற்றி சிலமாதங்களுக்கு முன் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன்.அது psychiatry,psychology,neuroscience தொடர்பாகத்தொடங்கியது.பிறகு வாசிப்பு Economics பக்கம் திரும்பிவிட்டது. 🙂
    compassion training போன்ற நல்ல முயற்சிகளை இங்கும் செய்கிறார்கள்.சிகிச்சை முறைகளுக்குள்ளும் உள்வாங்கிவிட்டார்கள்.இது தவிர Tai Chi போன்ற Dynamic meditation உம் யோகாவோடு உள்வாங்கப்பட்டிருக்கிறது.

    யோகம் சொல்வதை ஒத்ததாக ஜேகே சொல்கிறார் என நினைக்கிறேன். விஞ்ஞானத்தால் மனத்தைக்கடக்கமுடியாது.யோகத்தின் படி விஞ்ஞானம் சொல்லுகிற consciousness உம் உடலுக்குரியதுதானே.(ஆணவம் )

    நன்றி, Bergsonian Reflections on Writing, philosophically நன்றாயிருக்கிறது.
    mechanism of thoughts மேலும் மேலும் தெளிவாகப் புரியப்படுகிறது.
    Thinking, Fast and Slow by Daniel Kahneman படித்தீர்களா?

    என்னவோ இப்போதைக்கு மனசை tune பண்ணிக்கொண்டிருந்து நடப்பு வாழ்க்கையைக்கொண்டு செல்லவேண்டியது காலம் வரும்போது மனசைக்கடக்கலாம். 🙂
    FMRI ஸ்கான் நரம்பியல் விஞ்ஞானத்தை முன்னகர்த்தியிருக்கிறது.
    இது பழசுதான் -மூளையின் நெகிழ்வுத்தன்மை/Activity-dependent plasticity என்பதை உளவியலில் பயன்படுத்துவது .பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது இல்லையா
    Mindset: The New Psychology of Success .
    by Carol Dweck( software:Brainology).

    intelligent VS self discipline : வெற்றிக்கு அடிப்படை டிசிப்ளின் என்கிறார்கள்
    மன உறுதிக்கும் மனோசக்திக்கும் தொடர்பிருக்கிறதை நிரூபிக்கிறார்கள்.mind energy,willpower
    பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிறார்கள்.(instant gratification.Marshmallow experiment)

    இப்படிப்போகிறது உலகம். 🙂

    • நீங்கள் சொன்ன புத்தகம் எதுவும் படித்ததில்லை, படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது., வீடியோ இப்போதுதான் பார்க்கிறேன்.

      நடப்பு வாழ்வில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது, இதெல்லாம் ஒரு சுவாரசியத்துக்காக்கப பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.

      இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும் 🙂

      • JK,Bohm உரையாடல்கள் இரண்டோ மூன்றோ இருக்கின்றன. எந்த வீடியோ என்று சுட்டி தரமுடியுமா?
        எழுத்தென்றால். வேகமாக படிக்க முடியும் தேடியும்பார்க்கலாம். இங்கு அவரின் வேகம்.ஆனால் நன்றாக இருக்கிறது.

        அவரின் புத்தகங்கள் படித்து(கிடைத்த) நீண்டகாலமாகிவிட்டது.ரமணருக்கும் இவருக்கும் ஒற்றுமைகள் இருப்பதாய் தோன்றுகிறது.JK கதவுக்கு இப்புறம் இருப்பவர் .கதவைத்தட்டு திறக்கும்
        என்று சொல்வதில்லை என்று ஓஷோ சொன்னதாக ஞாபகம்.
        ஏதோ அறிந்த வரையில் தேறியது illusion of understanding தான் 🙂

        விழுந்த இடத்தில் தேடாமல்
        விளக்கிருக்கிற இடத்தில்தேடுவதாய் விஞ்ஞானத்தில் தேடவேண்டியது..

        • இவ்விருவருக்கும் இடையிலான உரையாடல்கள், The Ending of Time என்ற நூலில் தொகுகப்பட்டிருக்கின்றன- இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன http://www.jiddu-krishnamurti.net/en/the-ending-of-time/

          http://www.jkrishnamurti.org/krishnamurti-teachings/view-text.php?tid=31&chid=56824&w=&

          அடிப்படையில் மிகக் குறைந்த நம்பிக்கைகளைக் கொண்டு, நடைமுறை உலக கவனம் இழக்காமல், அனுபவ அடிப்படையில் வாழச் சொன்னவர்கள், இவ்விருவரும் குரு-சிஷ்ய உறவைஉன்னதப்படுத்தாதவர்கள்.

          என்னளவுக்கு உங்களுக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

          • நன்றி சார்
            என்னாலியன்றளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன் 🙂
            thoughts ,mind including consciousness are material-matter என்கிறார் . thoughts are from reactions of nerves -matter ஐ கடந்தால் absolute mind -அது energy. universal mind உடன் தொடர்புகொள்கிறது. universal order வந்துவிடுகிறது.இது பரமாத்மா ஜீவாத்மா, பதி பசுவோ என்றால் அந்தப்பேச்சை எழவிடுகிறார் இல்லை. 🙂
            இன்றைய தரவுகளை வைத்துக்கொண்டு இல்லை/இருக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் ஒரு சின்ன கண்டுபிடிப்பே எல்லாவற்றையும் மாற்றக்கூடும்.-Black swan theory

            • ஆமாம் ஸார், நானும் இப்படிதான் புரிந்து கொண்டிருக்கிறேன்- ஆனால் universal mind என்ற வஸ்துவை முன்வைக்கிறாரா என்பது மட்டும் சந்தேகமாக இருக்கிறது!

              • K: We must be very careful also not to fall into the trap of thinking that the universal mind is always there.

                DB: How would you put it then?

                K: Man has said that God is always there; Brahman, or the highest principle, is always present, and all you have to do is to cleanse yourself, and arrive at that. This is also a very dangerous statement, because then you might say, there is the eternal in me.

                DB: But I think that is projecting.

                K: Of course!

                DB: There is a logical difficulty in saying it is always there because `always’ implies time, and we are trying to discuss something that has nothing to do with time. So we can’t place it as being here, there, now or again!

                K: We have come to the point that there is this universal mind, and the human mind can be of that when there is freedom.

                இத்தோடு நிறுத்திக்கொள்வோம். பேசினவரை திருப்தி நன்றிசார்.ஆச்சிரமம் அமைக்கும் போது என்னை மானேஜராகச்சேர்த்துக்கொள்ளுங்கள். நட்பாஸானந்தா என்ற பெயர் நன்றாயிருக்கும் 🙂

                • அதெப்படிங்க நிறுத்திக்க முடியும்? 🙂

                  அடிப்படையில் Consciousness is its content என்று சொல்லும் ஒருவர், content அத்தனையையும் சுத்திகரிக்கச் சொல்றார், அதாவது negate செஞ்சு, ஒண்ணுமில்லாம பண்ணச் சொல்றார். அப்படிச் செய்யும்போது, நாம consciousness இல்லாம போயிடறோமா, ஏதோ ஒரு பிரக்ஞை இருக்கவே செய்கிறது. இதோட content என்ன? content இல்லாமைதான் இந்த consciousness- அது எப்படி வருது, என்னவா இருக்குது என்ற கேள்விகளுக்கு இடமில்லை. தெரியாது என்று நிறுத்திக்க வேண்டியதுதான், universal mind என்று அடையாளம் கொடுத்தால் அதற்கு universality என்று ஒரு content இருப்பதாக நாம் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது, ஏதோ ஒண்ணு எல்லாருக்கும் பொதுவா இருக்கு, ஆனா அதுக்கு என்ன பேர் சொல்ல, என்ன பெயரிட்டு அழைக்க, என்று கேட்டால், அதைப் பற்றி பேசவே பேசாதே, நினைச்சே பாக்காதே, சும்மா இரு என்பது ஓரளவு அவரோட பார்வைக்கு இணக்கமா இருக்கும்னு நினைக்கறேன்.

                  என்னைப் பொருத்தவரை, அவர் சொல்றதை எப்படி புரிஞ்சுக்கணும் என்று யோசித்தால் இப்படி தோன்றுகிறது: கற்பூரம்னு இருந்தா பத்த வச்சதும் பத்திக்கணும். ஒவ்வொரு தடவை எடுத்துப் படிக்கும்போதும்,அல்லது யோசிக்கும்போதும் பத்திக்குமா பத்திக்க நான் என்ன செய்யணும் என்ன புரிஞ்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டு போவதைவிட, பத்திக்கிட்டா கற்பூரம் பத்தாட்டி பத்தலை என்ன நடக்குது பாப்பம் என்று ப்ரெஷ்ஷா போறது சரியா இருக்கும், காரணம், நம்மை நாம் அறிந்து கொள்வது, நம் உறவுகளின் தன்மையை அறிந்து கொள்வதில்தான் என்று சொல்கிறார். universal mindஆக உன்னை அறிந்து கொள் என்றெல்லாம் எதுவும் சொல்வதில்லை – அப்பால நடப்பது நடக்கும் நடக்காம போகும், இப்ப ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

                  universal mind இல்லைன்னு சொல்லலை, இருக்குன்னு நினைக்காம இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் :))

                  பிகு- நான் ஆசிரமம் ஆரம்பிச்சா அடுத்த வருஷம் ஜெயிலில் அல்லது பெயிலில் என்னைப் பார்க்கலாம் 🙂

                  • நீங்கள் சொல்வதேதான் !.அதைத்தான் அவர் இப்படிச்சொல்கிறார்.
                    K: We must be very careful also not to fall into the trap of thinking that the universal mind is always there.

                    காரணம் தியானம் செய்ய ஒரு குறிக்கோளோட உட்காரவேண்டியிருக்கும்.பிறகு அதில் மனம் இறங்கி விளையாடும்.அது மட்டுமா universal mind பற்றிஒரு idea தோன்றும்.பிறகு இன்னொருவர் தனக்குத்தோன்றிய இன்னொரு ideaவோடு வருவார்.இரண்டையும் அறிந்த ஒருவர் கலந்து புதுசாய் ஒன்றை உருவாக்குவார்.இப்படி ஐடியாக்களை பகிர்ந்து கொள்ள மொழி தேவைப்படும்.புது சொற்கள் உருவாகும்.விவாதங்கள் நடக்கும். idea மீது idea வைத்து ஒரு உலகமே உருவாகும்.ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு ரகம்,சிலர் வழிபடத்தொடங்குவார்கள்; இவர்கள் இன்னொரு ரகம். எல்லோரும் மனம் என்ற குண்டுச்சட்டியில் குதிரையோட்டிகொண்டிருப்பார்கள்
                    .
                    வாய்மொழிச்சமுகத்தில் பரிமாறப்பட்டவை ஓரிரண்டு ஐடியாக்கள் தான்.
                    அதனால் பெரிய குழப்பமில்லை.எழுத்து வந்த பிறகு ஐடியாக்கள் பல்கிப்பெருகத்தொடங்கின..பெருங்குழப்பமாகிவிட்டது.எல்லாம் வார்த்தை விளையாட்டாகிவிட்டது.(cobram மெய்ஞானத்துக்கு நன்றாகப்பொருந்துகிறதோ)

                    இந்தக்கதை அறிந்த கதைதான்.
                    குரு தூங்கும்போது அவரது காலை அமுக்கிவிட்டுக்கொண்டிருந்த இரு சீடர்களுக்கிடையில் மோதல் வந்துவிட்டது.இடக்காலை அமுக்கிகொண்டிருந்தவன் தன் செயல் பெரியது என்றான்.வலக்காலை அமுக்கியவன் தன்னது பெரியதென்றான். இடம் வலம் என்று ஆரம்பித்து உன்கால் நாத்தக்கால்,உன்கால் பீக்கால் என்று சண்டையாகி உன்காலை வெட்டுவேன்,உன்காலைச்சுடுவேன் என்று அவர்கள் நெருப்பையும் கத்தியையும் எடுத்துவரப்போக கால்களின் சொந்தக்காரரான குருவுக்கு விழிப்பு வந்துவிட்டது .அவர் மரத்திலேறிவிட்டார்.
                    எங்கள் மனம் சீடர்களின் மனம்போலத்தான்.உண்மையை மறந்துவிட்டிருக்கிறது.(”வெட்டுக்கொத்துசுடு”தளத்தில் இல்லாமல் அறிவிஜீவித்தளத்தில் இருந்திருந்தால் புத்தகம் போட்டிருப்பார்கள் -”வலது கால் வழிபாடு”,”இடக்கால் இழிவு” இப்படி)

                    ஜேகே இந்த idea மாளிகையின் அடிப்படைக்கல்லை -கடவுளை -உருவுகிறார்,சீட்டுக்கட்டு மாளிகை குலைந்தால் தான் பாதை தெளிவாகும்.பாதையின் முடிவு தேவையில்லை என்கிறார்.

                    ஆனால் இதைப்பற்றி பேசுவது, idea நிறைந்த உலகில் தேவைதான். புரிந்து கொண்ட பின்னர் தேவையில்லை.அப்புறம் …அவரவர் வழி.
                    பேசத்தேவையில்லை என்பது இதற்கு மேலும் புரிய ஒன்றுமில்லை என்பதோடு மேலே சொன்ன சீடர்களின் நிலையாகிவிடக்கூடாதென்பதுவும் தான். 🙂

                    அது சரி “பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஐயோ பத்திக்கிச்சு ” என்ற பாடல் வரிகளின் உண்மை அர்த்தம் புரிந்தது 🙂
                    பிகு: ஐயோ வுக்கு முன்னால் பத்திக்கிச்சு எத்தனை முறைவருமென்பதில் ஐயம் இருக்கிறது.கவிஞர் கோவிச்சுக்கபோறாரே ஐயோ!

                    • 🙂 நாமே கவிஞர்கள், பதில் சாபம் குடுத்துட மாட்டோமா!

                      (நல்ல வேளை குருவுக்கு மரம் ஏறத் தெரிஞ்சுதோ, தப்பிச்சாரோ!)

    • டாக்கின்ஸ்க்கு சாம் ஹாரிஸ் பரவாயில்லை என்று நினைக்கிறேன், ஆனால் அவரையும் கடுமையாக விமரிசிப்பவர்கள் இருக்கின்றனர்- எனக்கு அவர் ஓகே என்றுதான் தோன்றுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s