நகைப்புக்குரிய குழப்பம்

மாயக்கூத்தன்

புது வீட்டுல ஒரு பிரச்சனை. தண்ணி ரொம்ப நாளா ஒரு வாடையோட வந்துக்கிட்டேயிருந்தது. ஒரு பாத்ரூம்ல மட்டும் இப்படி நடந்தது. பில்டர், மெயிண்டெயின் பண்றவங்க யாருகிட்ட சொல்லியும் பிரச்சனை தீர்க்க முடியலை. அவங்களுக்கும் என்னனு புரியலை. மத்தவங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லாததால ரொம்ப சீரியஸா யாரும் எடுத்துக்கல.

இப்போ ரெண்டு நாள் முன்னாடி தான் என் மரமண்டைக்கு ஒரு விஷயம் உரைச்சது. நான் செக் பண்ணிப் பார்த்தப்போ ப்ளம்பர் தண்ணிய மாத்திக் கொடுத்திருக்கார்- STPலேர்ந்து வர்ற தண்ணீல பல் தேய்ச்சு, குளிச்சு எல்லாம் செஞ்சுக்கிட்டிருந்திருக்கோம். சூப்பர்வைசருக்கு கால் பண்ணிச் சொன்னவுடனே, அவருக்கு சீரியஸ்நெஸ் புரிஞ்சு உடனே ரெண்டு பேர அனுப்பி, லைனை மாத்திக் கொடுத்திட்டார்.

இப்போ காலைல அவரப் பார்க்கறேன். எனக்கு கொஞ்சம் கோவம்; நல்ல வேளை குழந்தைகள் உட்பட, அம்மா அப்பான்னு ஒருத்தருக்கும் எந்த உடல் உபாதையும் மறுசுழற்சி செஞ்ச தண்ணீர்லேர்ந்து வரலை. என்னய்யா இப்படிப் பண்ணிட்டியேன்னு கேட்கறேன்; எவ்ளோ நாளா நானும் சொல்லிக்கிட்டிருக்கேன்னு கேட்கறேன். முதல்ல, இப்போ சரியாயிடுச்சுல்லன்னு கேட்டார். நான் சொன்னேன், ‘உன் நல்ல நேரமோ என் நல்ல நேரமோ யாருக்கும் எதுவும் ஆகல’. அந்த சூப்பர்வைசர், மன்னிச்சுக்குங்க சார், பிரச்சனை எனக்கும் புரிஞ்சது ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டோம்னு சொல்றார். நானும் சரி விடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இங்க, எல்லோரும் சின்ன சின்ன பிரச்சனைக்குக்கூட கண்டபடி திட்டுவாங்க. ரொம்ப கடுமையா பேசுவாங்க. எனக்கென்னவோ கடுமையா பேச வரலை. ரெண்டு மூணு தடவை அலைஞ்சப்போக்கூட எனக்கு வேலை நடந்தா போதும்னுதான் நினைப்பு. இப்போகூட, நல்ல வேளை ஒருத்தருக்கும் எதுவும் நடக்கலை, பிரச்சனை சரியாயிடுச்சுன்னுதான் நிம்மதி.

ஒரு வருஷம் முன்னாடி, எங்க அலுவலகத்துல ஒரு மென்பொருள் வாங்கணும். அமெரிக்க நிறுவனம்; பெங்களூர்ல ஒரு ஏஜெண்ட்; சென்னைல அமெரிக்க நிறுவனத்தோட ரீஜினல் கிளை. பெங்களூர் ஏஜெண்டுக்கு எந்த தகவலையும் ஒழுங்கா தரத் தெரியலை. நான்பொறுமை இழந்து, நேரா சென்னை ரீஜினல் மேனேஜரோட பேசினேன் (முன்னாடியே ரெண்டு மூணு தடவை பேசியிருக்கேன்). அவர்கிட்ட, உங்க ஏஜெண்ட் சரியில்லை; நீங்க அவர்கிட்ட பேசி, வேண்டிய தகவல்களைச் சீக்கிரம் தரச் சொல்லுங்கன்னு சொன்னேன். அவர் உடனே, தம்பி, நீங்க ரொம்ப சாஃப்டா இருக்கீங்க. நீங்க கஸ்டமர், லாபம் அவனுக்கு. திட்டற திட்டுல அவன் உங்ககிட்ட வரணும். இப்படியிருக்காதீங்கன்னு சொல்றார்.

எனக்கு யாராவது யாரோ ஒருத்தரைத் திட்டறதைப் பார்த்தாலே வருத்தமாயிருக்கும். நான் எங்கே இன்னொருத்தரைத் திட்டறது?

ஆனா இப்போ எனக்கு என்ன பிரச்சனைன்னா, நான் கோவப்பட வேண்டிய இடத்துல ரொம்ப பொறுமையாப் போறேனோ? இது மெச்சூரிட்டியா, இல்ல பயமா? அதுதான் போகுது, நம்ம பெருந்தன்மை யாருக்கும் வராதுன்னு பெருமைப்படவும் முடியல- ஏன்னா பாருங்க, எங்கப்பா, அம்மான்னா பொறுமையே இல்ல. சின்ன விஷயத்துக்கெல்லாம் கண்டபடி கோவப்படறேன்.

Advertisements

18 thoughts on “நகைப்புக்குரிய குழப்பம்

  1. ஸார், எந்தப் பேரை சுருக்கினாலும் இந்தப் பேரைச் சுருக்க வேண்டாமே- நான் என்றாலும் பரவாயில்லை, இவனுக்கு எழுதிக் கொடுத்து கெட்ட வார்த்தையில் திட்டு வேற வாங்கணுமா என்று நண்பர் கோபித்துக் கொள்ளப் போகிறார் 🙂

   1. பெயரைச்சுருக்கியதற்கு மாயக்கூத்தன் மன்னிக்கணும்.(இலக்கியப்புகழ் பரவ பெயர் சுருங்குவது இலக்கியப்பரப்பில அவதானிக்கக்கூடியதாயிருக்கிறது. குபரா,திஜாரா,லாசாரா,கிரா, …இப்படி)

 1. திட்டுவது ஒரு கலை சார். அம்மாக்களுக்கும் ஆட்டோக்காரர்களுக்கும் மட்டும் எப்படியோ கைவந்துவிடுகிறது. கன்டென்ட்டே இல்லாமல் ஆங்காங்கே மானே தேனே போல கெட்டவார்த்தைகள் தெளித்து, spontaneous ஆக திட்டுவது மிகச் சிலரால்தான் முடியும். எனக்கும் கொஞ்சங்கூட திட்ட வராது…

  1. “கன்டென்ட்டே இல்லாமல் ஆங்காங்கே மானே தேனே போல கெட்டவார்த்தைகள் தெளித்து, spontaneous ஆக திட்டுவது மிகச் சிலரால்தான் முடியும். ” ஆட்டோக்காரர் சரி, அம்மாவுமா?!

 2. திட்டுவது ஒரு கலை? .என் நண்பன் சுப்பு (அவன் ஒரு இஞ்சினியர் இப்போது) வீட்டுக்கு வருவான். படலையில் நின்றுதான் பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கொண்டிருக்கிறபோது முன்வீட்டுக்காரர் குடிவெறியில் கத்துவதைக்கேட்டு “இந்த மனுஷன் தான் தூஷணத்தை இலக்கணத்தோடு பேசுகிறான்” என்று சொல்லிச்சிரிப்பான். 🙂

   1. மேலே பின்னூட்டத்தை நீக்கவேண்டும்.எப்படி நீக்குவது/ நீக்கிவிடுவீர்களா நன்றி(நண்பர் கோபங்கொண்டு திட்டமுன்னர்)

      1. அன்பர இணையத்திலும் இருக்காரா? அப்படின்னா இப்ப அவர் தீவிர இலக்கியவாதின்னு சொல்லுங்க- எதுக்கு வம்பு, போஸ்ட்டையே டெலிட் பண்ணிடறேன் 🙂

 3. 🙂 அம்மா திட்டும்போது கெட்டவார்த்தைக்குப் பதில் அழுகை / கத்தல் ஆங்காங்கே இருக்கும்…

  //தூஷணத்தை இலக்கணத்தோடு//
  குடிகாரர் தமிழ் வாத்தியாரா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s