வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக

சூல்கொண்ட கண்கொண்ட கலக்கம் மண்கொள்ள
துழவும் கைகள் காற்றைத் தழுவும் உயிரழி உழைவில்
துயர்கொள்ளும் பெண்ணே, எம் அழிவின் நீதி கேள்:
மலரென்றால் அதற்கோர் மென்மை உண்டு,
முள்ளென்றால் அதற்கோர் கூர்மை உண்டு,
மனமென்றால் அறமென்றோர் உணர்வுண்டு,
அறிவொன்றே அறியுமாம் வக்கிரம்.

4 thoughts on “வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக

  1. அறிவு ஒன்றே அறியும் வக்கிரம் – அருமை. ஒன்றை அறிவதால்தான் அறிய முற்படுவதால்தான் அநர்த்தம் விளைகின்றது. எதையும் அறியவில்லை என்றால் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’தானே. குழந்தைகள் போல் ஆனால் அன்றி விண்ணரசு கிட்டாது என்றார் ஏசு. கிருஷ்ணாவதாரத்தின் பொருளும் இதுதான்.

  2. நன்றி சார்.

    உளவியலிலும் risk of vulnerability- முக்கியமானது.( assessment of risk எல்லாத்துறைகளிலும் முக்கியமானதே). உங்கள் கவிதையைப்படித்தவுடன் vulnerability என்பதை வஞ்சிக்கப்படக்கூடிய நிலை/அபாயம் என்று மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது.

    மனிதனின் அறிவு சகமனிதர்கள் உட்பட சூழ இருக்கிற எல்லாவற்றையும் வஞ்சிக்கப்படக்கூடிய நிலைக்கு மாற்றிவிட்டது.

    ’அறிவொன்றே அறியுமாம் வக்கிரம்” -வஞ்சிக்கப்படும்நிலையிலிருந்து வெளிவர காத்துக்கொள்ள, இந்த அறிவு சார் வக்கிர உலகை புரிய, அறிவொன்றே உதவும் என்றும் கொள்ளலாம்போலத்தோன்றுகிறது. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s