நிகழ்தகவு

நிகழக்கூடிய
சாத்தியங்களின்
சரடுகள்
அதிவேகநெடுஞ்சாலைகளில்
சர்ப்பங்களாய்
நெளிகின்றன.
சாலை கடந்தவை
ஓரங்களில்
பளபளக்கின்றன.

கடக்கமுடியாதவை இறைந்துகிடக்கின்ற
காலத்தின் மீதுதான்
என் வண்டி அதிவேகமாய்
பயணிக்கிறது.
கடந்துகொண்டிருப்பவைகள்
சில உழக்கப்படுகின்றன,
தவிர்க்கமுடிவதில்லை.

நிகழவேண்டியிருக்கிறது
சாத்தியம்!

4 thoughts on “நிகழ்தகவு

    1. இங்கு வழக்கொழிந்தது போல் தெரிகிறது.

      சில சாத்தியங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் நிகழ்தகவு சாத்தியங்கள் உள்ளவரை நம்பிக்கைக்கும் இடமுண்டு,. நன்றி

  1. உழக்குவது விவசாயப்பகுதிகளில் பாவனையில் இருக்கக்கூடும்
    எங்களூரில் சாதாரணமாய்ப் பேச்சில் வரும்.:”வீடு கழுவிவிட்டுக்கிடக்குது.ஊத்தைக்காலோடு போய் உழக்காமல் காலைக்கழுவி சாக்கிலை துடைச்சுப்போட்டுப்போ”

    இதையும் பாருங்கள்:http://www.yarl.com/forum3/index.php?/topic/14893-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s