2015- இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இலக்கியம் என்று வந்தபின் சில சமயம் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் நாம் உறுதியாய் இருப்பது புத்தம் புதிய காப்பி வாசகர்கள் அறிந்ததே. அதே போக்கு இந்த ஆண்டும் தொடரும்.

தினமும் ஒரு பதிவு இடுகையிட்டு தமிழ் கூறும் நல்லுலகை உய்விக்க வழியில்லை- நம் கற்பனையாற்றல் ஆமையோட்டைக் காட்டிலும் வரண்டு கிடக்கிறது. ஆனால், முன் சொன்னது போல், இலக்கியம் என்று வந்தபின் சில சமயம் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் நாம் உறுதியாய் இருப்பதால், இந்த ஆண்டும் வழக்கம் போலவே நம் இலக்கியத் திருப்பணிகள் தொடரும்- வாசக அன்பர்கள் அவ்வப்போது செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பி, கைமாற்றாய் ஒரு சிறு தொகை போன்ற சங்கதிகளைக் கொடுத்தால் தமிழன்னைக்கு ஓரேயடியாய் எழுத்தில் ஓர் ஆலயம் அமைக்கும் எங்கள் முயற்சிகளைத் தொடர ஊக்குவிப்பதாய் இருக்கும், சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து ஏழரைச் சனி வேறு பிடித்துக் கொண்டு விட்டது.

வாசகர்களுக்குச் சோதனைக் காலம்தான், இருந்தாலும் பரவாயில்லை, நண்பர் வரசித்தன் அவர்கள் நாலு பக்க அளவிலாவது சின்னதாய் ஒரு காவியத்தை புத்தம் புதிய காப்பி வாசகர்கள் கண்ணில் காட்டப் போகிறார், இந்த ஆண்டு எந்த நாளும் இது நடக்கலாம், எனவே வருகிற டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் ஒரு நடை இந்தப் பக்கம் வரும்போது அப்படியே எட்டிப் பார்த்துவிட்டுப் போங்கள்- ஹிட் எண்ணிக்கை தினப்படி இரட்டை இலக்கத்தைத் தொட மறுக்கிறது. திண்டுக்கல் தனபாலன் அவர்களை அழைத்து ஒரு சிறப்பு பதிவு எழுத வைத்து சதம் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்; அஞா அவர்கள் களத்தில் குதித்தால் நம்மை எல்லாம் காலி பண்ணிவிடுவார், நல்ல வேளை அவர் வரலாற்றைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கிறார், அவரை டிஸ்டர்ப் செய்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

விசுவாசம் மிகுந்த புத்தம் புதிய காப்பி வாசகர்களுக்கும் பிற புத்திசாலி நண்பர்களுக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வாருங்கள், இந்த ஆண்டை நம் எழுத்தால் சிறப்பிப்போம்!

Advertisements

6 thoughts on “2015- இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    1. ஒன்னும் சொல்லிக்கறப்ல இல்லை ஸார்… டாக்டர் வேற எழுதறார், அவர் எழுதும் தளத்துக்கு ஒரு மரியாதை கீப் அப் பண்ணுவோம்னு நினைச்சேன், கேட்டுட்டிங்க, இதோ போஸ்ட் பண்றேன், என்ஜாய்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s