ஒரு சிறு குறிப்பு

அண்மையில் இங்கு நடைபெற்றுவரும் சம்பவங்கள் மனதுக்கு வருத்தமளிப்பதாக இருக்கின்றன. எனவே, புத்தம் புதிய காப்பி வாசகர்கள் சார்பில், இப்படியொரு குறிப்பைப் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது.

எழுத்தாளர் திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஆதரவாய் சுதந்திரச் சிந்தனையாளர்கள் சார்பில் நாம் அணிதிரண்டு நிற்க வேண்டிய நேரம், இது.

இனி, குறிப்பு: 

புண்பட்ட உணர்வுகளின் நியாயம் புரிகிறது, அவர்களுக்காக வருந்துகிறோம்; ஆனால், எந்த ஒரு பண்பட்ட சமூகமும் விமரிசனங்களையும் தான் பொய்மை என்றும் அவதூறு என்றும் கருதுவனவற்றையும் கண்டு அஞ்சாது; காயப்பட்ட தன் உணர்வுகளுக்காகப் பிறரைத் தண்டிக்காது, குறிப்பாக, யாரையும் ஊமையாக்காது.

ஏனெனில், கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு நிறுவப்படும் உண்மைகளைவிட, அதனால் தனக்கு சாத்தியப்படக்கூடிய உணர்வு விரிவின் மதிப்பை அது உணர்ந்திருக்கும். ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே,’ என்ற நக்கீரன் தொடங்கி, “நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்” என்ற ஆழ்வார், சிவபெருமானையே தன் காதலுக்குத் தூது அனுப்பிய சிவனடியார், என்று சுதந்திர மனிதனுக்கு ஆதரவானவனாய்க் கண்டு இறைவனையே கொண்டாடி வந்திருக்கும் சமூகம் நாம்- முருகன், “முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்பான்,” என்று போற்றுகிறார் அருணகிரிநாதர்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழுக்குரியவர், நம் மரபுக்குரியவர். அவருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் தமிழ்ச் சமூகம் மீதும் இந்து சமய மரபுகளின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்கள். பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் வருந்தத்தக்கன, கண்டனத்துக்குரியன- அவருக்கும், அவரது கருத்துச் சுதந்திரத்துக்கும் துணை நிற்க நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

One thought on “ஒரு சிறு குறிப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s