மாயையின் கைப்பாவைகள் – ஒரு மொழிபெயர்ப்பு

“நேற்றைய ஹிந்து நாளிதழில் தேவதத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரை நினைவுக்கு வருகிறது. எழுத முடிந்தவர்கள் உள்ளத்தைக் காயப்படுத்துவார்கள் என்றால், எழுத்தைக் கொண்டு பேசத் தெரியாதவர்கள் உடலைக் காயப்படுத்துகிறார்கள் என்கிறார். கற்றவர்கள் ஏற்படுத்தும் காயத்தைக் கண்டிக்காமல், கல்லாதவர்கள் ஏற்படுத்தும் காயத்தை மட்டும் கண்டிப்பதை நவ பார்ப்பனீயம் என்றே அவர் அழைக்கிறார். ஒரு சுவாரசியமான கோணம்”

என்று எழுதியிருந்தார் நண்பர் சுரேஷ் – பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2

நண்பர் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர்- நமது நட்பையும் சகித்துக் கொள்வதே அதற்குப் போதுமான சான்றாக இருக்கிறது.  அது தவிர, தனக்கு என்று சில கருத்துகள், நம்பிக்கைகள், கொள்கைகள் இருப்பினும் அவற்றுக்கு மாறானவற்றையும் முரணானவற்றையும், சுவாரசியமான கோணம், என்று சகித்துக் கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர். ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை அவசரப்பட்டு மட்டம் தட்டுவதோ, தட்டிக் கழிப்பதோ, தோற்கடித்து விடுவதோ அவரது வழக்கம் கிடையாது. அவர் சுட்டியுள்ள கட்டுரையைப் படித்துப் பார்த்தேன், ஆம் சுவாரசியமான கோணம்தான்.

அதன் மொழிபெயர்ப்பு இங்கே- இலைகள், மலர்கள், மரங்கள் என்ற தளத்தில் இருக்கிறது, படித்து பாருங்கள், பதிப்பித்த நண்பர் கணேஷ் அவர்களுக்கு நன்றிகள்.

oOo

கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் பதினான்காம் சுலோகத்தைப் பேசும்போது, மாத்திரைகளின் ஸ்பரிசம் குறித்து ஒரு சுவாரசியமான கோணத்தைக் காட்டுவார் சங்கரர்- ஆங்கிலத்தில், “Matra-sparsah, the contacts of the organs with objects; are sita-usna-sukha-duhkha-dah, producers of cold, heat, happiness and sorrow. Matrah means those by which are marked off (measured up) sounds etc., i.e. the organs of hearing etc. The sparsah, contacts, of the organs with sound etc. are matra-sparsah. Or, sparsah means those which are contacted, i.e. objects, viz sound etc. Matra-sparsah, the organs and objects, are the producers of cold, heat, happiness and sorrow,” என்று இருக்கிறது. இன்னும் சில விளக்கங்களுக்குப் பிறகு,  “Since they, the organs, the contacts, etc., agamapayinah, have a beginning and an end, are by nature subject to origination and destruction; therefore, they are anityah, transient. Hence, titiksasva, bear; tan, them — cold, heat, etc., i.e. do not be happy or sorry with regard to them,” என்று முடிப்பார் அவர். 

சுவாரசியமான கோணம்- தேவ்தத் பட்டநாயக் எழுதிய, கொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை, என்ற கட்டுரையை அணுக மேற்கண்ட விஷயம் உதவலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s