தள அறிமுகங்கள்- தொடரும் அப்டேட்டுகள்

புத்தக மதிப்பீடுகள்/ அறிமுகங்கள் சம்பந்தமாக ஒரு காலத்தில் பேசிக்கொண்ட இரு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன-

(அ) நூல் மதிப்பீட்டில் கதைச்சுருக்கம் கொடுக்கலாமா கூடாதா?

(ஆ) புத்தக விமரிசனம் அல்லது அறிமுகத்தில் மேற்கோள்கள் எந்த அளவுக்கு இருக்கலாம்?

அ- கொடுக்கலாம் என்கிறார் போர்ஹெஸ்

wp_ss_20150707_0002

நன்றி – Los Angeles Review of Books 

ஆ) மூன்றில் இரண்டு பங்கு  மேற்கோள்களாக இருக்கலாம், தப்பில்லை என்கிறார் ஜான் அப்டைக்

wp_ss_20150707_0001

நன்றி – Electric Literature

இதெல்லாம் யோசிப்பதற்குரியது என்பதைவிட இப்படிச் செய்பவர்கள் குற்றவுணர்ச்சியால் தூக்கமிழக்க வேண்டியதில்லை என்பதற்காக இங்கு பதிவிடுகிறேன்.

oOo

காலையில் மதுரம் தள அறிமுகம் இங்கு வந்ததல்லவா? அது தொடர்பாக இன்னொன்று.

The Untranslated என்றொரு தளம் இருக்கிறது- ஆம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் முக்கியமான இலக்கிய படைப்புகள் குறித்து ஒரு சிறு அறிமுகம் அங்கு அளிக்கிறார்கள் (உதாரணத்துக்கு, இந்த துருக்கிய நாவல் பற்றி படித்துப் பாருங்கள், தலை கிறுகிறுக்கிறது).

இன்று மதுரம் தளத்தில் மதுசூதனன் சம்பத் மொழிபெயர்த்துள்ள கட்டுரை பார்த்ததும் The Untranslated என்ற தளம்தான் நினைவுக்கு வந்தது என்றால் காரணம் இல்லாமல் இல்லை- தமிழின் முக்கியமான நாவல்களை வரிசைப்படுத்தும் பட்டியல் ஒன்றைச் சிறு குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறார் மதுசூதனன். தமிழிய ஆங்கிலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்றாலும் சிறந்த மொழிபெயர்ப்பாளராக வளர்வார் என்ற நம்பிக்கை எழுகிறது (உதாரணத்துக்கு தலைப்பு – “Tamil Novels – Critic’s Selection” என்பது “Tamil Novels – A Critic’s Choice” என்றிருக்கலாம். அவர் செய்திருப்பதில் அர்த்தம் கெட்டுப் போகவில்லை, வாசக சௌகரியம்தான் கொஞ்சம் குறைகிறது. இதெல்லாம் மிகச் சிறு விஷயங்கள்- ““As a critic, I would venture that I consider these to be the best of modern Tamil novels published till the year 2000,” என்று அட்டகாசமாக மொழிபெயர்க்கக்கூடியவருக்கு இதை எல்லாம் சரி செய்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயமாக இருக்காது. ஆனால், “With one leg on Vedanta and the other on Existentialism, it stands strong on philosophical mooring,” என்றெல்லாம் எழுதும்போது கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்- அதே சமயம், இவரே அடுத்த வாக்கியத்தை மிக அழகாகவும் இயல்பாகவும், ‘The tolling bells that pursue Somu from his childhood introduced the Tamil literary world to the immense possibilities of poetic metaphor in the novel form,” என்று எழுதியிருக்கிறார். ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை வாசித்து திருத்தி எழுதினால் மிகச் சிறப்பான மொழிபெயர்ப்புகள் இவரிடமிருந்து நமக்குக் கிடைக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.)

நண்பருக்கு ஒரு வேண்டுகோள்- The Untranslated, என்ற தளத்தில் உள்ள அளவுக்காவது இந்தக் கட்டுரையில் உள்ள பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு நாவலின் கதைச்சுருக்கத்தையும் அதன் முக்கியத்துவம் குறித்த அறிமுகக்குறிப்பையும் அளிக்க வேண்டும்.

இலக்கியத்தை தேர்ந்தெடுத்து அடுக்கி வைக்கப்பட்ட புத்தக அலமாரியைக் காட்டிலும் தெருவோர தார்ப்பாயில் இறைந்திருக்கும் பழைய புத்தகக்கடையாய் அணுக வேண்டும் என்பது என் எண்ணம்-  உயர்ந்த இலக்கியம் என்பது நமக்குரியது இது என்று  கண்டெடுக்கப்படுவது, பிறரால் அறிமுகப்படுத்தப்படுவதல்ல என்று நினைக்கிறேன். ஆனால் கிளாசிக்ஸ் மற்றும் கானன்கள் இல்லாமல் பேசுவதற்குரிய பொதுவெளி இருக்காது என்ற அளவில் இது போன்ற பட்டியல்களை அனுமதிக்க வேண்டியதுதான், வேறு வழியில்லை.

Advertisements

2 thoughts on “தள அறிமுகங்கள்- தொடரும் அப்டேட்டுகள்

  1. அன்புள்ள நட்பாஸ் – உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. இப்படிப்பட்ட மறுவினைகள் மூலமாகவே கற்றுக்கொள்ளமுடியும். இன்னும் நன்றாகச் செய்ய பார்க்கிறேன்.

    கதைச்சுருக்கமும் நல்ல யோசனையே – கொஞ்சம் கொஞ்சமாக செய்கிறேன்.

    மது

    1. புரிதலுக்கு நன்றிங்க- உண்மையில் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது, தமிழை மனதில் வைத்துக்கொண்டு யோசிப்பதைத் தவிர்த்து, ஒரிஜனல் ஆங்கிலத்தில் எழுதினதாக நினைத்துக்கொண்டு வாசித்துப் பார்த்தால் பெரும்பாலான குறைகளைச் சரி செய்து விடலாம் என்று தோன்றுகிறது, நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s