மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

நாம் அனைவரும் ஒரு விஷயத்தை ரசித்து மகிழும்போது அது குறித்த தாபங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன்- First come Hubris, then comes Nemesis என்று சொல்வார்களே, அந்த மாதிரி (Hubris என்பதன் வேர்ச்சொற்பொருள் “originally “presumption toward the gods;”” என்று etymonline.com தளத்தில் போட்டிருக்கிறான் என்று சொன்னால், அந்த அளவுக்கு இல்லை என்றாலும் நம் லெவலுக்குத் தகுந்த ஹூப்ரிஸ் சேர்த்துக் கொள்கிறோம் என்று நான் சொல்வது விளங்கும்).

உதாரணத்துக்கு ஒன்று. இன்று காலை என் மகன் திடீரென்று என்னிடம் வந்து, “அப்பா, மசாஷி கிஷிமோடோ எப்படி அப்படியெல்லாம் வரையறார்?” என்று கேட்டான். “தெரியலடா”, என்று பொறுப்பாக பதில் சொன்னேன்.

“அப்படின்னா, என்னை டிராயிங் கிளாஸில் சேத்து விடறியா?” என்று அடுத்த கேள்வி வந்தது.

“டேய், அவனை மாதிரி வரையணும்னா லைப் புல்லா பிராக்டிஸ் பண்ணனும்டா”

“த்ரீ மன்த் கோர்ஸ் சேத்து விடுப்பா, அப்புறம் நான் வீட்லயே பிராக்டிஸ் பண்ணிக்கறேன்,” என்றான் மகன். எனக்கு செலவு மிச்சம் செய்கிறான்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் தினேஷ், அபிஷேக் மாதிரி வரைய வேண்டும் என்று ஆசை வந்தால் நியாயம், ஆனால் மசாஷி கிஷிமோடோ மாதிரி வரைய வேண்டும் என்றுதான் நமக்கெல்லாம் ஆசை வரும். வாழ்நாள் முழுக்க வருத்திக் கொள்வதற்கான யத்தனம் இது என்பதால், “முதலில் நீ ஹோம் வர்க் பினிஷ் பண்ணு,” என்று முளையிலேயே கிள்ளினேன்.

ஆனால் பிறருக்குத்தான் அப்படிச் சொல்கிறோமே தவிர, நம்மையே நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடிவதில்லை. போன வாரத்துக்கும் முந்தைய வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சும்மா இருக்க முடியாமல் சுகா எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, முதல் வேலையாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பு தயார் செய்தேன்.

Translator’s Note:

There is a gourmet lurking inside every glutton, forgotten and often irredeemable. But not so with Suka. Amidst the glamour and noise of filming a movie, Suka characteristically homes in on a key moment, an encounter with a persona and a quality which forms the substratum of creative enterprise. A keen ear could discern birdsong not far off from the busiest of roads in Chennai. Suka possesses such an ear and gives expression to it with the lightest of touches. No translation could hope to do justice to his writing, least of all mine. This is merely an attempt to capture at least a part of its charm, though almost all its humour is lost.

ஆங்கிலத்தில் இப்படியெல்லாம் எழுதிப் படித்தால் எனக்கே ஒரு மாதிரி கிறக்கமாக இருக்கிறது, இதற்காகவே நாலு பேரை இழுத்துப் போட்டு மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது. சரி, இன்று சுகா சிக்கினார், என்று மொழிபெயர்த்து நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன்.

“சிரிப்பே வரலையே?” என்றார் அவர்.

“அவர் அதுக்கும் மேல ஸார்,” என்றேன்.

“அது கெடக்கட்டும், ஆனா சிரிப்பு வராமல் என்ன ஸார் சுகா?” என்று கோபமாகக் கேட்டார். சரி, இவர் நமக்குச் சரிப்பட்டு வர மாட்டார் என்று இன்னொருவருக்கு அனுப்பினேன்.

“கட்டுரை பர்ஸ்ட் கிளாஸ்” என்றார் அவர்.

“அப்படியா, அவ்வளவு நல்லா இருக்கா?”

“அட்டகாசம் ஸார், ஆனா சுகா எழுதினதுன்னு சொல்லிடாதீங்க”

“ஏன், ஸார்?”

“இந்த மாதிரில்லாம் மை சம்மர் வெகேஷன்னு ஹாலிடே ஹோம்வர்க் எழுதலாம், டென் அவுட் ஆப் டென் கிடைக்கும்”

நான் எதுவும் சொல்வதற்கு முன்பே அவர் குட்நைட் சொல்லிவிட்டார்.

என்ன செய்வது?

நன்றாக ஆங்கிலம் எழுதத் தெரிந்த புத்தம் புதிய காப்பி நண்பர்கள்தான் உதவ வேண்டும். மொழிபெயர்ப்பாளர் குறிப்பு மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

2 thoughts on “மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s