ஒரு சிறு உரையாடல்

இன்று காலை நண்பர் ஒருவருடன் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும்போது (நேருக்கு நேர் நின்று இலக்கியம் பேசும் ஏராளமான நண்பர்களில் ஒரு நண்பர் என்று நினைத்து ஏமாந்துவிட வேண்டாம், இவர் ஒருவரேதான் நண்பர்), யாருக்கும் நீண்ட கதை கட்டுரை கவிதைகள் எழுதவோ படிக்கவோ பொறுமையில்லாமல் எல்லாரும் பேஸ்புக் டிவிட்டர் என்று போய்விட்டதைப் பற்றி பேச்சு வந்தது;

அப்போது நண்பர், “தனிமையிலே இனிமை காண முடியுமா” என்று பாடி முடித்தபின், எந்த ஒரு எழுத்தாளனுக்கும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் இருப்பது போலவே தான் எழுதியதை நாலு பேர் வாசிக்க வேண்டும் என்ற அவசிய தேவை இருப்பதையும் சுட்டிக் காட்டினார்- அதன்பின், “பேஸ்புக்கில் ஒன்று எழுதினால் உடனே லைக் விழுகிறது, ஒரு போட்டோ கமெண்ட், ரெண்டு வசவு, மூணு உச்சி முகர்தல் என்று எந்த ஒரு பெரும்படைப்புக்கும் உரிய பயண சாத்தியங்களை இரண்டு மணி நேரத்திலேயே ஈடேற்றிக் கொள்ள முடிகிறது,” என்றார்.

“அந்த immediacy, அதான் ஸார்,” என்று அர்த்தப்பூர்வமாக ஒரு வார்த்தை சொல்லி அவரை ஊக்குவித்தேன்.

“ஆனா பாருங்க, அதில்லை இலக்கியம்,” என்றார் அவர்.

“ஆமாம் ஸார், நாம பேஸ்புக்கில் எழுதறது எல்லாம் இலக்கியம்ன்ற கணக்கில் வராது, இல்லீங்களா?” என்றேன்.

“அப்படிச் சொல்லலை. நீங்க சொல்ற உடனடி சிரம பரிகாரத்தை இலக்கியம்னு சொல்ல முடியாது, இப்ப ஆதவன் என்ன சொல்றார்ன்னா…”

ஆதவன் என்ன சொல்லியிருந்தாலும், அதில் நண்பர் தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள் அர்த்தப்பூர்வமாக இருக்கும் என்பதால் காதைத் தீட்டிக்கொண்டு, “என்ன ஸார் சொல்றார்?” என்றேன்.

    ‘கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகணங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.’

என்ற  மேற்கோளை அட்சரம் பிசகாமல் மேற்கோளிட்டு, “எவ்வளவு அழகா, வார்த்தைகளால் ஆன கூடாரம்னு சொல்றார் பாருங்க, literature has  an once-removed relationship with experience என்பதுதான் அதன் அழகு. ரத்தமும் வியர்வையும் அப்படியே காட்றது இல்லை, அது ஒரு கான்ஷியஸ்னஸ்க்கு உள்ளே போய் வெளியே வருது பாருங்க, அதான் இலக்கியம்,” என்றார் அவர்.

“அதாவது, ஒரு விலகல் இருக்கணும்னு சொல்றீங்க, இல்லையா?” என்றேன்.

நண்பர் மொபைலில் சார்ஜ் போய்விட்டதால் கட்டாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

2 thoughts on “ஒரு சிறு உரையாடல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s