ஒரு சிறு விளம்பரம்

Capture

என்று துவங்குகிறது நண்பர் நம்பி கிருஷ்ணன் மொழியாக்கம் செய்துள்ள கார்ஸன் கழிமுகம் என்ற கவிதை, இது A. R. Ammons எழுதியுள்ள Corsons inlet என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்.  கவிதைக்குரிய மொழியைக் கையாள்வதில் முழுமையான தேர்ச்சி பெற இன்னும் தொலைதூரம் போக வேண்டியிருக்கிறது என்றாலும் செய்த அளவில் மிக நல்ல முயற்சி என்று சொல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் அந்தக் காலத்து கவிஞர்கள் துவங்கி இன்று வரை நீண்ட கவிதைகளை எழுதி வருகிறார்கள். குறுங்கவிதை என்றால் பரவாயில்லை, ஒரு சித்தரிப்பு, அவதானிப்பு, வியப்பு அல்லது ஒரு உணர்த்தல் இருந்தால் போதும், கவிதை வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம். ஆனால் அதே பாணியில் நீண்ட கவிதைகள் எழுதுவதும் தமிழில் வழக்கமாக இருக்கிறதே தவிர கவிதையைக் கொண்டு தர்க்கிப்பதில்லை. அதாவது கவிதை இரு வேறு உணர்வுகள் அல்லது சிந்தனைகளை விவரித்து அவற்றின் ஈர்ப்பு அல்லது நியாயம் அல்லது பொருத்தம் அல்லது அந்த மாதிரி ஏதோவொன்று என்று தீவிரமாகப் போவதில்லை. ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள் அந்த மாதிரி வருகின்றன.

கவிதையின் ஆரம்ப விவரணைகள், விவரித்தலின் ஊடாக துவக்கத்தில் இருந்ததற்கு மாறான அர்த்தத்துக்குக் கொண்டு செல்கின்றன, அல்லது இன்னும் விரிவான அர்த்தத்தைச் சிந்திக்கின்றன. ஓரளவுக்கு இது போன்ற கவிதைகளை அழகுணர்வும் தத்துவ நாட்டமும் கைகோர்க்கும் கவிதைகள் என்று சொல்லலாம். அதாவது, புற அழகினுள் சென்று அதன் சாரத்தை உணர்வது. பெரும்பாலும் புற விவரணைகளாக இருந்தாலும், என்ன சொல்கிறோம் அதை எப்படிச் சொல்கிறோம் என்பதில் அகவுணர்வுகள் வெளிப்படுகின்றன. இந்த உணர்வுகளின் ஆச்சரியமான வெளிப்பாடு புதிய புரிதல்களுக்கு அழைத்துச் செல்கின்றன. கார்ஸன் கழிமுகம் அப்படிப்பட்ட ஒரு கவிதை.

நண்பர் ஒருவர் பல பகுதிகளாக எழுதிய நீண்ட கவிதை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. எழுதிக் கொண்டிருக்கும்போதே எழுதிய நோக்கத்தைக் கவிழ்ப்பதாகவும், எழுதுபவனை ஆச்ச்சரியப்படுத்துவதாகவும் அதில் இன்னும் சில விஷயங்கள் அமைந்திருந்தால் கவிதை பிரமாதமாக இருந்திருக்கும்.

நகர்வது என்பதே விழாமல் தடுமாறிச் செல்வது என்பதை நாம் குடிகாரர்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை, நடை பழகும் குழந்தையைப் பார்க்கலாம், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சிறுவனைப் பார்க்கலாம். ஒன்று புதிதாய்ப் பிறக்கும்போது அல்லது விரியும்போது நம் மனதில் அது ஒரு நகர்வாய்ப் பதிவாகிறது எனில், நாம் காணும் தடுமாற்றமே நம் மனதை உயிர்ப்புக்கு ஏற்ற நிலைக்குக் கொண்டு சென்று நம்மை  ஆயத்தம் செய்கிறது.

கவிதையைப் பொருத்தவரை முழுமை என்பது குறைகளிலும், உயிர்ப்பு என்பது மரணத்திலும், தேடல் என்பது தவிப்பிலும்தான் வெளிப்படுகிறது- இங்கு அடைதல் தன்னிழப்பாகிற்து, உள்முரண்களே வடிவ அமைதியாகிறது. சொற்களாலான அப்படிப்பட்ட நிகழ்த்துகலையாய் கார்ஸன் கழிமுகம் என்னும் கவிதை  நம்மகத்தே அரங்கேறுகிறது. வார்த்தைகளின் கவித்துவ அழகுக்கு அப்பால் அலைமேவும் சிந்தையின் போக்கும் வரவும்தான் இதன் ஜீவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s