ஆகாயச் சுனாமி

நண்பர் சுப்ரம் வீரராகவன். அவர்கள் எழுதியளித்த கவிதை-

செய்யவல்ல செய்ய கெட்ட கதை இது
செய்யத்தக்க செய்யாமையாலும் கெட்ட கதை இது
மையமாய் வேடிக்கை பார்த்து கை பிசைந்து
கை கொடுக்கத் தவறிய வேடிக்கை மானிடரின்
பையிலிருப்பதை விட நெஞ்சிலிருப்பதை வருத்தமுடன்
கண்ணுற்ற கதை இது

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
மானிடரிங்கே சமனப்படுத்திய கணக்கின் தீர்வில்
பூஜ்ஜிய விடை மறுத்து எண்ணிலி கிடைக்க ஏங்கும் அறிவிலி கூட்டம்

அரசு செய்யவில்லையாம் ஏதும்
முரசு அறிந்து அறிவிக்கிறார் எவரும்
உரம் நெஞ்சிலின்றி
ஈர நிலத்தை ஈரமின்றி விற்ற ஈனர் கூட்டம் செய்தது இப்பிழை
அறம் செய்ய விரும்பியவரும்
புறமுதுகு காட்டி ஓடியவரும்
மறந்து போன இயற்கை நேசம்
திறந்திடுவீர் கண்ணை (பாலங்களின் கீழே)

வந்தது உண்டு ஒரு சுனாமி முன்பு
தந்ததை மறந்ததால் வந்தது ஆகாய சுனாமி இன்று
நொந்து போவதாலும் நோவதால் தூற்றுவதாலும் பயனென்?

கற்பிக்க மீண்டும் மீண்டும் இயற்கை சீற்றம் அடைய
உற்பாதங்களை உணர்ந்து தெளியாமல் மழைச் சேற்றில்
தற்குறியாய் உழலும் எருமை கூட்டம் நாம்.

ஏதும் செய்யவேண்டாம் இயற்கையிடம் இடர்
போதும் ஐயா போதும் தாங்காது மீண்டும் ஒரு பேரிடர்
சேதுவை மேடுறுத்தி வீதி அமைத்து பிளாட் விற்று
பாதகம் செய்யும் மானிடர்களை
மோதி உமிழ்ந்திடுவோம் பாரினிலே.

கோவை. சுப்ரம் வீரராகவன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s