தலைவன் தன் தோழிக்கு உரைத்தது

நான்கு திசையும் நோக்கும் சிங்கங்கள் சாலை முனை
ஆலயக் கூரையில் அமர்ந்திருக்கும் ஊர்ப்பெண்ணே
தொட்டது தொண்ணூறுக்கும் சபித்துப்பின் மனமாறும்
உத்தமியே தும்மல் இருமல் கண்ணீர் எனத் தொடரும்
தலைநகரப் புகைச்சாலை குழி வேய்ந்த பயணத்தின்
கோடைத் தூசும் மழைநாள் சாக்கடை நீருமாய்
வாய்த்ததென்ன வாழ்வென வருந்திடினும்
கழுத்தை அறுத்தாலும் காட்டிக் கொடுக்க மாட்டாது
உலையில் சோறாக்கி டிபன் போடும் உன்போல்
நல்லோர் மௌனத்தின் மாட்டே என் வாழ்வு-
நான் உயரும் போதெல்லாம் என் சிகையில்
அழுந்தும் உன் பாதம், சிறக்கப் புலம்பி
பேதலித்துத் தட்டழியும் பிச்சைக்கார நெஞ்சு.

7 thoughts on “தலைவன் தன் தோழிக்கு உரைத்தது

  1. இன்னுமா? என்பதில் 50 shades 0f meanings இருக்கிறது.:)

    சமாதிநிலையிலிருந்து மீளூகிறபோது சிஷ்யப்பிள்ளைகள் இட்லி சட்னியும் படிக்க பதிவும் தருவார்கள்.நான் சொல்ல பின்னூட்டமிடுவது எனது பூர்விகபந்தத்தொடர்பு மானேஜர் பிரகலானந்தா.

  2. Butcher’s crossing நாவலில் வருவது போல நான் காலச்சிறையிலிருந்து மீண்டு வர இதுவரை துரத்திக்கொண்டிருந்த கனவுலகம் (பதிவுலகம்) அற்றுப்போய்விடும் போல இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s