வல்கரியர்கள்

வரலாற்றைப் பேசுதல், வாசித்தல் போன்ற விஷயங்கள் அறிவியல்பூர்வமாகவோ, அகவயப்பட்டதாகவோ இருப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு ஒரு முக்கிய காரணம் நம் மனச்சாய்வு என்று சொல்லலாம், ஆனால் அதைவிட முக்கியமான காரணம் நம் நிகழ்கால தேவைகளாக இருக்கின்றன. பெரும்பாலும் தகவல்களுக்கு நெருக்கமாக இருந்து நாம் நம் மனச்சாய்வை மீற முடியும் (அது போல் செய்து நமது நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் நடந்திருக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோம்).

ஆனால், வரலாற்று நிகழ்வுகளின் பொருள் என்ன என்ற கேள்விக்கு விடை காண்பதில், வரலாற்றை அர்த்தப்படுத்திக் கொள்வதில், நம் நிகழ்கால தேவைகள் செலுத்தும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது. உண்மையில், வரலாற்றை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை நமக்கு இல்லை என்றால் நாம் ஏன் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்? ஏதோ நாலு விஷயம் தெரிந்து வைத்துக் கொள்வோம், நாளைக்கு உபயோகப்படும் என்று யாரும் இதிலெல்லாம் ஆர்வம் கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.

அண்மையில், இந்தக் மதிப்பீடு வாசித்தேன் – Hopping in His Matchbox, Neal Ascherson

அதில் இரு பத்திகள்:

முதலாவது இது-

Ullrich has strong feelings about the way Hitler came to power in January 1933, enthroned by a ‘sinister plot’ of stupid elite politicians just at the moment when the Nazis were at last losing strength. It didn’t have to happen. He constantly reminds his readers that Hitler didn’t reach the chancellorship by his own efforts, but was put there by supercilious idiots who assumed they could manage this vulgarian. ‘We engaged him for our ends,’ said the despicable Franz von Papen. A year later, in the Night of the Long Knives, von Papen was grovelling to save his own neck.

அடுத்தது இது-

Part of the answer lies in the ‘working towards the Führer’ idea. The cult of Hitler’s personality set up a fake opposition between leader and party. After Kristallnacht, as after other outrages, many Germans (probably shocked more by the street vandalism than by the suffering of Jews) commented that ‘the Führer surely did not intend this.’ At elections and plebiscites, sulky subjects of the Reich might scribble on posters or voting slips: ‘Yes to Adolf Hitler – but a thousandfold No to the Brown Bigwigs!’ The effect of this false distinction was to maintain loyalty to the regime even through years when the public was coming to regard the Nazi Party apparatus as institutionally corrupt and self-serving.

உலக நிகழ்வுகளை உன்னிப்பாய் கவனித்து வருபவர்களுக்கு முதல் மேற்கோளில் காணப்படும் vulgarian என்ற சொல், மதிப்பீட்டை எழுதியவரும் நம் கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்ற தகவலை அளிக்கும்- அங்கிருந்து, இரண்டாம் மேற்கோள் போன்ற பகுதிகள் அளிக்கும் எச்சரிக்கையைப் புரிந்து கொள்வது பெரிய விஷயமல்ல.

ஒரு புனைவுக்குரிய நுட்பத்தை இந்தக் கட்டுரையில் காணப்படும் அடிக்குரலில் நாம் பார்க்க முடிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s