சுட்டி காட்டாமல் பேசவும்!!!

நண்பர் சுப்ரம் வீரராகவன். அவர்கள் எழுதியளித்த கட்டுரை-

பள்ளி பருவத்தில் பாடத்தில் வரும் வினாக்களில் சுட்டு வினா வகை என்று ஒன்று உண்டு.

இடம் சுட்டி  பொருள் விளக்குக.

  • மது விலக்கு கொண்டு வருவோம்” – இதைக் கூறாத அரசியல் தலைவர் யார்? அவருடைய கட்சி உறுப்பினர் எண்ணிக்கை தோராயமாக எவ்வளவு?
  • தூங்குக தூங்கி செயற்பால” – வழக்கமாக அவையில் தூங்கி செயல்படும் அரசியல்வாதி யார்?

இந்திய வரைபடத்தில் கீழ்க் கண்டவற்றை சுட்டி காட்டுக.

  1. இந்தியாவின் அமைதிப் பூங்கா
  2. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடிக்கும் இடம்  மற்றும் சுடும் இடம்
  3. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்து பஜ்ஜி சாப்பிடும் முன்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் இடம்
  4. திருவள்ளுவர் சிலை வைப்பதாகச் சொன்ன இடம். வைத்த இடம். இனிமேல் வைக்கப் போகும் இடம்.

oOo

பிள்ளைப் பிராயத்தில் உள்ள குழந்தைகளை நானும் வளர்க்கிறேன் பேர்வழி என்று இந்த பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு பிற பிள்ளைகளைச் சுட்டி காட்டி பேசுவதுதான்.

சமீப காலமாக சுட்டி காட்டி பேசி மாட்டிக் கொள்வது என்கிற தோஷம் (நோய்) வேகமாக பரவி வருகிறது.

எனக்கும் அந்த தோஷம் (நோய்) தொற்றிக் கொண்டதால் சிலவற்றை சுட்டி காட்டுகிறேன்.

  • பிரபல நடிகர் தான் நடப்பது எப்படி என்பதை விளக்க சுட்டி காட்டி பேசி சர்ச்சையில் சிக்கினார். (வடநாட்டு நடிகரின் பெயர் கான் என்று முடியும். தென்னாட்டு நடிகர் பெயர் காவில் ஆரம்பித்து ‘ன்’-ல் முடியும்)
  • சுமார் மூஞ்சி குமாருக்குக் கூட உன் மூஞ்சி பிடிக்காது என்று கூறியதால் கழுத்தறுபட்ட பெண். அதனால் கழுத்தறுபட்ட ஆணின் கழுத்தை அறுத்தது யார் என்று சுட்டி காட்டி சில நாட்களாக நம் கழுத்தறுத்த மீடியாக்கள்

சுட்டி காட்டுவதனால் ஏற்படும் விளைவு என்ன? சுட்டி காட்டுவதால் சுடுகிறது. திருவள்ளுவர் தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்றார். நாவினால் சுட்ட வடு பல விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது.

சில நாட்களுக்கு முன் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் ’சொல்வதை திருந்தச் சொல்” என்கிற தலைப்பில் பேசினேன். “சொல்வதை” என்பதை பிரித்தால் ‘சொல்’ + ‘வதை’ என்றும் பிரித்து பார்த்தால் நாம் மற்றவர்களை சொல்லால் வதை (கொல்வது) செய்கிறோம் என்பது புரியும்.

எனவே இனியும் சொல்லால் வதை செய்யவேண்டாம். சுட்டி காட்டி பேசாமல் இருந்தால் அனைவருக்கும் நல்லதுதானே?

பின்குறிப்பு: அண்ணா சுட்டி காட்டுவது போல் சிலையை வடித்தவர் யார் என எனக்குத் தெரியாது. அரசியல் தலைவர்கள் இவர்தான் எனது அடுத்த வாரிசு என்று சுட்டி காட்டாமல் பேசக் கூடாது. அரசியலில் இல்லாதவர்கள் சுட்டி காட்டி பேசக் கூடாது.

சினிமாத் துறையில் சுட்டி காட்டி பேசியதால் பிரபலமானவர்கள் உண்டு. தொலைகாட்சியில் அது இது எது என்று சுட்டி காட்டி பேசி பிரபலமான சிவகார்த்திகேயனை நான் இங்கே சுட்டி காட்டவில்லை. மக்கள் திலகம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சுட்டி காட்டி நடித்ததால் பிரபலமானார். நடிகர் திலகத்தை சுட்டி காட்டி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறியதால் நடிகர் திலகம் பிரபலமானார்.

பின்குறிப்புக்கு ஒரு பின்குறிப்பு: பின்குறிப்பே இன்னொரு கட்டுரையாக நீண்டுவிடும் என்று என் மனசாட்சி சுட்டி காட்டுவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். சுபம்.

இக்கட்டுரைக்கான சுட்டிகள் (சும்மாதான் சுட்டி காட்டியுள்ளேன் – நேரம் இருந்தால் படித்து பார்க்கவும். இல்லையெனில் இதை சுட்டிக் காட்டி பின்னூட்டம் இட வேண்டாம்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s