வில்லியம் ஹெச். காஸ்

நேற்று காலை நண்பரொருவர் போன் செய்து, “என்ன ஸார், ஒரு வாரமா எதுவுமே எழுதலையே?” என்று கேட்டார். “நல்லா காமெடியா இருந்தது, நீங்க எழுதறது”.

நாமும் எவ்வளவோ உருகி உருகித்தான் எழுதுகிறோம், ஏமாந்தால் நாலு பேரை புரட்சிக்குத் தூண்டி போட்டுத் தள்ளவும் நம் சரக்கில் இடம் உண்டு, ஆனால் நெருங்கிப் பழகிய நண்பர்களுக்கு நாம் எழுதுவது காமெடியாக இருக்கிறது. என்ன செய்வது, இதற்காகவெல்லாம் பகைத்துக் கொள்ள முடியாது. நண்பரை இழப்பது என்ற அளவில் நின்றுவிட்டால்கூட சமாளித்துக் கொள்ளலாம், அதனால் ஒரு வாசகர் அல்லவா இல்லாமல் போகிறார்?

சரி, நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க இனி தினம் ஒரு பதிவு செய்யப் போகிறேன்.

oOo

இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம், William H Gass எழுதிய, “A Temple of Texts“. அதில் ஒரு வாக்கியம், புத்தகங்கள் உள்ளதை உள்ளவாறே பார்க்கச் செய்கின்றன என்று சொல்லுமிடத்தில் (ஒவ்வொரு வாக்கியத்தையும் அடிக்கோடிட்டு மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கத் தோன்றுகிறது):

“That is why just one good book, however greatly good, when used to bludgeon every other, turns evil; why we should be omnivorous:…”

வேறோரிடத்தில், புத்தகங்கள் உண்மையின் வெளிச்சத்தில் ஒளிர்வதில்லை, கருத்து மோதல் என்பது மனிதனின் இரண்டாம் இயல்பு என்று சொல்லிக்கொண்டு வரும்போது-

“Moreover, this divisive plurality of opinion is not just between one man and another or one segment of society or political party or sect and another, but between one era and another, one civilization and another, one way of life and- not another, but- all the others“.

(இடாலிக்ஸ் கையாண்டிருப்பதைக் கவனிக்கவும்  – இங்கு அடிக்கோடிட்டு வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது)

இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன், இவரிடம் என்னவோ இருக்கிறது என்று நினைக்க வைக்கிறார்- எல்லா நிறுத்தற்குறிகளையும் பயன்படுத்துவது மட்டும் அதற்கு காரணமல்ல: இப்படி எழுத என்ன விலை கொடுக்கலாம்?

“It may be that in a state of nature, since it is a state of war, the life of man is solitary, poor, nasty, brutish, and short, but in our present state of mediocrity, it is cowardly, shallow, tedious, banal and uselessly drawn out.”

இத்தனையும், “To a Young Friend Charged with Possession of the Classics,” என்ற கட்டுரையில் (“Nothing too much but everything a little bit- this describes the classic diet“).

ஒரு கருத்து, முடிவு, இலக்கு, தீர்மானம் அல்லது பார்வையை நோக்கி நம்மை மடக்கிக் கொண்டுசெல்வது போல் இல்லை இவரது எழுத்து, கட்டுரையைப் படித்து முடித்ததும் என்னதான் சொல்கிறார் இவர் என்று மீண்டும் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. கடைசியில், நீரோட்டத்தில் காலையோ கையையோ அலைந்து கொண்டு அமர்ந்திருக்கும் ஒருத்தருடன் இருக்கும் உணர்வு.

Advertisements

One thought on “வில்லியம் ஹெச். காஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s