தாக்கம், பாதிப்பு, சொல்பேச்சு

சென்ற பதிவின் தொடர்ச்சி – வில்லியம் ஹெச். காஸ்

நாம் ஒருத்தரை மதித்து வாசிக்கிறோம் என்றால் பெரும்பாலும் அவர் எழுதுவதோடு முரண்படுவதில்லை- பூமி தட்டையாக இருக்கிறது, ஆமையின் முதுகில் மிதந்து கொண்டிருக்கிறது என்று ஏதாவது அதிர்ச்சியாக எழுதினால் தவிர பிற சமயங்களில் ஆமாம் போட்டுக்கொண்டே படிக்கிறோம். காஸ் எழுதும் முறை சற்றே வழுக்கி விழச் செய்வதாக இருக்கிறது. முதலில் ஒரு விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்கிறார், அப்புறம் நான்கு பத்திகள் போனபின் பார்த்தால் அதற்கு எதிர்க்கருத்தை எடுத்து வைத்து அதை ரத்து செய்து விடுகிறார். அடுத்தடுத்து இதைச் செய்கிறார்.

Influence, என்று ஒரு கட்டுரை. சாமுவேல் ஜான்சன் தன் அகராதியில் அச்சொல்லுக்கு என்னவெல்லாம் பொருள் தந்திருக்கிறார் என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதன் தாத்பர்யத்தை ஆராய்கிறார். வழக்கம் போலவே பளபளக்கும் வரிகள், ஆனால் சாரம், படிப்பினை, நீதி என்றெல்லாம் எதையும் சுருக்கிச் சொல்ல முடியவில்லை.

இரு சாம்பிள் மேற்கோள்கள் (போகிற போக்கில் இது Brain Pickings மாதிரி ஆகி விடும் போலிருக்கிறது)

oOo

நண்பர் ஒருவர் பித்து நிலைகளுக்கு எதிராக கத்தி எடுத்திருக்கிறார். அவர் இதைப் படித்தால் மகிழ்வார் என்று நகலெடுக்கிறேன்.

If you enjoy the opinions you possess, if they give you a glow, be suspicious. They may be possessing you. An opinion should be treated like a guest who is likely to stay too late and drink all the whiskey.

Plato treated poetic inspiration as a case of such irrational infection: The gods bypass sober skill to make the pen prophetic so that the resulting poem, recited by a rhapsode similarly tranced, becomes an incitement to the mob. Or an unconscious wish, sneaky as an odor, enters the author’s awareness disguised as its opposite, and arranges the stage for a coup d’éclat. Thus the magnetic coil is closed: muse to poet, poet to page, page to performer, and performer to audience, whose applause pleases the muse, encourages the poet, and grants his forbidden desire: to rule.

ஏதோ தமிழ்ச்சூழல் மட்டும் மோசமாக இருக்கிறது என்றும் கீழ்மைகளில் நமக்கு மட்டும் ஒரு தனிக்குணம் இருக்கிறது என்றும் நினைப்பது நம் இயல்பு நிலை – தமிழுக்கு வெளியேயும் இருக்கிறது உலகம், என்பதை அறியாத ஒரு குமிழ்வாழ்வின் பாதகம் இது.

அமெரிக்க இலக்கியச் சூழல் பற்றி காஸ் என்ன சொல்கிறார் பாருங்கள்-

Writers and scholars do not have role models, nor do they heed pipers; they have mentors. A mentor is a teacher who becomes a mentor by exceeding his authority and meddling with the student’s life. Writing students want mentors because their instructors are believed to have friends (that is to say, influence) in important publishing firms or are intimate with editors of important magazines. So they do their best to write as will please these persons; to flatter them by appearing to be under their wide benevolent wing (such students are said to be “teachable”); moreover, they seek out counsel from their wiser, more accomplished elders, not only on the course of careers but also on matters of the heart and the problems of life, payment for which sometimes includes the offer of sexual favors.

அமெரிக்காவே இப்படியென்றால், ஐரோப்பாவில் நிலைமை இன்னும் மோசமாம். அது இன்னும் ஃபியூடலியச் சமூகமாகவே இருக்கிறது, அதன் சமூக அடுக்குகள் இன்னும் குலையவில்லை என்கிறார் காஸ். நம்மைவிட மோசமாக இருப்பார்கள் போல.

 

Advertisements

3 thoughts on “தாக்கம், பாதிப்பு, சொல்பேச்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s