சொல்லாதன சொல்லுதல்

நான் சில காலம் சொல்வனம் பதிப்பாசிரியர் குழுவில் இருந்தேன். அதன்பின் இப்போது contributing editor என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது படிக்க முடியாத கட்டுரைகள் எழுதுவது போதாதென்று பரவாயில்லையாய் எழுதுபவர்களை அணுகி எடிட் செய்கிற பாவனையில், முடிந்த அளவு படிக்க முடியாத மாதிரி எழுதி வாங்கி அனுப்புகிறேன். அப்படிச் சென்ற சில கட்டுரைகள், கதைகளை சொல்வனம் நிராகரிக்கவும் செய்திருக்கிறார்கள் .

நிற்க. சென்ற இவ்வாண்டு அப்படி எடிட் செய்து அனுப்பிய கட்டுரைகளில் மறக்க முடியாத ஒன்று இது: “வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை“. பொதுவாக நண்பர் வெ. சுரேஷ் சொல்வனம் தளத்துக்கு நேரடியாக எழுதுவதில்லை. அவர் எழுதி எனக்கு அனுப்புவார், நான் சொல்வனம் அனுப்புவேன். பதிப்பிப்பது குறித்த முடிவுகளைக்கூட நான் சொல்லித்தான் அவர் தெரிந்து கொள்வாரே தவிர, சொல்வனம் நேரடியாக அவருடன் தொடர்பு கொண்டது கிடையாது. அவரது கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டபோது, ஒரு முறைகூட, ‘நான் நேரா அவர்களிடம் பேசுகிறேன்,’ என்று சொன்னதில்லை. ‘அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஸார்,’ என்று நான் சொல்லும்போது, என்ன காரணம் என்று கேட்டுவிட்டு, ‘சரி, அது அவங்க முடிவு, வேற எங்கேயாவது பார்ப்போம்’ என்று சொல்வார்.

ஆனால் மிக ஆச்சரியமாக, பன்னிரு படைக்களம் பற்றி வெ. சுரேஷ் எழுதிய விமரிசனம் சொல்வனம் பதிப்பாசிரிய குழுவினரால் பெரிய அளவில் எந்த எடிட்டும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைவிட பெரிய ஆச்சரியம், வாசகர் ஒருவர் தொடர்ந்து பின்னூட்டங்கள் அளித்ததுதான். எப்போதும் நிலை தடுமாறாமல் பெயருக்கேற்ற வகையில் அன்பே உருவாக பதில் அளித்துக்கொண்டிருந்தவர் இறுதி பின்னூட்டத்தில், “நீங்கள் குறிப்பிட்டது போல ”எதோ ஒரு விஷயத்தால் காயப்பட்டு அந்தக் காயத்தை விமர்சனமாக எழுதுபவர்களும் இருக்கலாம், ஆனால் அது அப்படி எழுதுபவர்வருக்கு எந்த ஒரு இலக்கியம் தரும் அறிவார்ந்த முன்னேற்றத்தையும் தராது, அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என்பதே தங்களைப்போலவே எனது கருத்தும்,” என்று எழுதியது எந்த ஏமாற்றத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய ஆச்சரியம்- அப்படி எதுவும் நான் சொல்லியிருக்கவில்லை.

காணாதது கண்டது போன்ற வியப்புணர்வுடன்தான் விமரிசனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலாவது ஒரு இலக்கிய தர்மம் இருக்கிறது. சொல்லப்படாத அர்த்தங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற இடத்திலிருந்து சொல்லப்படாத சொற்களையே மேற்கோள் காட்டலாம் என்ற இடத்துக்கு வாசக அன்பர் சென்றது புதிதாக இருந்தது.

இந்த மேற்கோளை எடுத்தாள்வது மிகைதான்- கோவையை ஏழையின் மான்செஸ்டர் என்று சொல்வது போல் என்பதுகூட பொருந்தாது, பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், என்று சொல்லலாமா?-

“In an ever-changing, incomprehensible world the masses had reached the point where they would, at the same time, believe everything and nothing, think that everything was possible and that nothing was true. … Mass propaganda discovered that its audience was ready at all times to believe the worst, no matter how absurd, and did not particularly object to being deceived because it held every statement to be a lie anyhow. The totalitarian mass leaders based their propaganda on the correct psychological assumption that, under such conditions, one could make people believe the most fantastic statements one day, and trust that if the next day they were given irrefutable proof of their falsehood, they would take refuge in cynicism; instead of deserting the leaders who had lied to them, they would protest that they had known all along that the statement was a lie and would admire the leaders for their superior tactical cleverness.”
Hannah Arendt, The Origins of Totalitarianism

Advertisements