2016

டிவிட்டரில் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன்- அதில் உள்ளவர்கள் அத்தனை பேருமே இலக்கியம் சம்பந்தமாக ஆங்கிலத்தில் டிவிட்டுபவர்கள், நிறைய தகவல்கள், கட்டுரைகளைத் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பவர்கள். ஒரு சிலர் சுற்றுச் சூழல் பற்றியும் டிவிட்டுவார்கள்.

டிவிட்டரில் என் பதிவோடையைப் பார்க்கிறேனோ இல்லையோ, தினமும் ஒரு முறையாவது இந்தப் பட்டியலைப் பார்த்து விடுவதுண்டு. பெரும்பாலும் எங்காவது காத்திருக்கும்போது மொபைலில்தான் இதைச் செய்வது. அப்புறம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் டிவிட்களை பேவரைட் செய்து கொள்வேன்- அந்த மாதிரி இப்போது 3500+ டிவிட்கள் சேர்ந்து விட்டன.

இதில் என்ன விஷயம் என்றால் இவர்கள் யாருமே அமெரிக்க அரசியல் பற்றியோ பிரிட்டிஷ் அரசியல் பற்றியோ ரொம்ப பேசுபவர்கள் அல்ல. அவர்கள் அரசியல் என்ன, என்ன நினைக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமல்தான் 2016ஆம் ஆண்டு துவங்கியது, ஆனால் ஆண்டு முடியும்போது இவர்களுடைய அரசியல் அலறல்களால் என் பதிவோடை கண்ணீர் ஓடையானது.

உதாரணத்துக்கு @scottEsposito என்பவர் பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் பற்றி நிறைய எழுதுபவர். எனக்கு தெரிந்து அரசியல், சமூகம் என்று எதுவும் பேசியதில்லை. ஆனால் இப்போது அவர் தன் ப்ரோபைலின் உச்சியில் நட்டு வைத்திருக்கும் ட்வீட்டு இது –

@matt_jakubowski என்பவரும் இப்படிதான் இருந்தார். மொழிபெயர்ப்பு விஷயங்கள் பற்றி நல்ல நல்ல தகவல்கள் தந்து கொண்டிருந்தவர், நான் இதை எழுதும் கணத்தில் செய்திருக்கும் டிவிட்டுகள்-

(ரீட்வீட்)

ஒரு மிக நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார் @GeorgeProchnik, நல்ல ஆள்தான் என்று நம்பி இவரைப் பின்தொடர்ந்து பட்டியலில் சேர்த்தேன். இப்போது இவர் நட்டு வைத்திருக்கும் டிவீட்டு:

மே மாத கடைசியாக இது ரெண்டையும் டிவீட் செய்து விட்டு காணாமல் போய்விட்டார்:

@hillmg1 சீன, அரபு மொழி இலக்கியங்களைப் பற்றி பேசுகிறார் என்று ஒரு ஆர்வத்தில் பின்தொடர்ந்தேன். இவர் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் இவரது கடைசி ஐந்து டிவீட்களில் இதுவும் ஒன்று:

எதிர்கவிதை எழுதுகிறார் என்று இவரைப் பின்தொடர்ந்தேன் – @antipoetry. இப்போது பார்த்தால், இவர் நட்டு வைத்திருக்கும் டிவீட்டு:

இவரது கடைசி ஐந்து டிவீட்களில் மூன்று இவை –

 

@Ted_Underwood கணினிகளை லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கச் செய்து இலக்கிய வரலாறு எழுதுபவர். சுவாரசியமான ஆளாக இருக்கிறார் இல்லையா? அப்படிதான் நானும் நினைத்தேன். ஆனால் இவர் கடைசியாக செய்திருக்கும் டிவிட்டுகள்:

2016ஆம் ஆண்டுக்கு இவர் அங்கீகரித்து அளிக்கும் பிரியா விடை:

இலக்கியம் பேசுவார்கள் என்று பார்த்தால் இவர்கள் எல்லாரும் அரசியலைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே, ஏன் என்று யோசித்தேன். ஒன்று தோன்றுகிறது- இலக்கியஆர்வம் உள்ளவர்கள் பலரும் அன்றாட வாழ்க்கையின் அசுவாரசியம் தாள முடியாமல்தான் இன்னும் கொஞ்சம் இருக்கட்டும் என்று புனைவுக்குள்ளும் கவிதைக்குள்ளும் செல்கிறார்கள். எனவேதான், யதார்த்தமே ஒரு கொடுங்கனவு ஆகி விடும் போலிருக்கும்போது இவர்கள் முதலில் விழித்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

முத்தாய்ப்பாய் இதைப் பாருங்கள், இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்-

“Chaos: Making a New Science is a debut non-fiction book by James Gleick that initially introduced the principles and early development of the chaos theory to the public. It was a finalist for the National Book Award and the Pulitzer Prize in 1987, and was shortlisted for the Science Book Prize in 1989,”

என்று விக்கிப்பீடியா இவரைப் பற்றி சொல்கிறது – @JamesGleick. இப்பேற்பட்ட ஆள் அரசியல் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமா வேண்டாமா? (இப்போது காலப்பயணம் பற்றி வேறு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்)-

இவரது அண்மைய ஐந்து டிவீட்டுகள்:

Chaos பற்றி புத்தகம் எழுதியவர் நிலையே எப்படி இருக்கிறது பாருங்கள்.

இவர்களை எல்லாம் படித்து ராடிகலைஸ் ஆகிவிட்ட நான் ஒரு படி மேலே போய் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக டிவீட்டுகளை மொழிபெயர்த்தேன்! – Chris Arnade. அது போதாதென்று நண்பர் அரவிந்த் கருணாகரனிடம் கிரிஸ் அர்னாட் டிவிட்டுகள் மற்றும் கட்டுரைகளைப் படிக்கச் சொல்லி அவற்றைப் பற்றி ஒரு மதிப்பீடு எழுதி வாங்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் போஸ்ட் செய்தேன்.

ரொம்ப முக்கியம்.

இதை இப்போது ஏன் எழுதுகிறேன் என்றால், இன்று காலை, நண்பர் ஒருவருக்கு, “ஐயா எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் விட்டுப் போய்விட்டது, இப்போதெல்லாம் அரசியல் பற்றிதான் கவலைப்படுகிறேன்,” என்று மெயில் எழுதினேன். தினமும் ஒரு முழு புத்தகம் படிப்பவர், ஆங்கிலத்திலும் தமிழிலும் வருஷம் முழுவதும் பதிவுகள் எழுதக்கூடியவர், அவர் அளித்த பதில் என்ன பாருங்கள்:

“வேலைக்கு சேர்ந்து இலக்கியம் வாசிக்கத் துவங்கியபின் இந்த வருடம்தான் மிகக் குறைவாக புனைவு படித்தேன், இல்லை என்றே சொல்லலாம். The Sellout, Vegetarian போன்ற நாவல்கள் இரண்டு வருஷம் முன்பு வந்திருந்தால் கண்டிப்பாக வாங்கியிருப்பேன். அதுவும் போக இந்த ரெண்டு வருஷமா எல்லா தரப்பிலும் (left, right, center, liberal blah blah) பரஸ்பர அவநம்பிக்கை, ghetto மனப்பான்மை ரொம்ப அதிகரிக்கிறது என்ற உணர்வு. அதுவும் அ-புனைவுகள் பக்கம் செலுத்தியது.”

எப்படி இருந்த ஆள் இப்படி ஆயிட்டார் என்று நினைக்கும்படி இப்படி அவர் தனது மெயிலை முடித்திருந்தார்:

“காந்தியின் சில எழுத்துக்களை மீள்வாசிப்பு செய்தும் , நேரு, படேல், அம்பேத்கர் குறித்து படித்தும் இதைக் கடக்க முயற்சி செய்தேன். மன எழுச்சியை தந்த தருணங்கள் இவற்றைப் படித்தவை. குறிப்பாக ‘The nights have never been so dark… yet I will carry on’ என்றவிதமாக தன் இறுதி காலத்தில் காந்தி கூறியது.”

இலக்கிய வாசகனுக்கு இப்படியும் ஒரு நிலை வர வேண்டுமா?

odi-poidu

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.