புத்தாண்டு வாழ்த்துகள், 2017

மாறிக்கொண்டே இருப்பதன் மாறாத, ஆனால் நகரும் மையத்தைக் காண முயற்சிப்பதே கற்பனை – கற்பனை, அரசியல், சமூக யதார்த்தம் இதிலிருந்து எல்லாம் தப்பும் முயற்சி அல்ல. அதை ஊடுருவிப் பார்க்கும் முயற்சி. யதார்த்த அனுபவத்தை பொருள் கொள்ளும் கருவிகளை இலக்கியம் மேலும் மேலும் நுண்மைப்படுத்த வேண்டுமே தவிர, இலக்கியத்தைக் கொண்டு மட்டுமே இலக்கியத்தை மதிப்பிட்டால், சுய வசியம்தான் நிகழும்.

சமய நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லாத உலகம் இது என்றாலும், அதனால் நம் ஆன்மீக தேவைகள் அவசியமில்லாமல் போய் விடவில்லை- நவீன உலகில் நாம் நம் சுதந்திரத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் விரும்பி இழந்து கொண்டிருக்கிறோம். நம்மைக் கடந்து சென்று அடையக்கூடிய அனுபவம், transcendence, அதை அடைய நமக்கு இருக்கும் தேவையைப் பலரும் பல வகைகளில், சில சமயம் நமக்கு எதிராகவே, பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எப்போதும் இலக்கியமே ஆன்மீக அனுபவத்தை அளித்திருக்கிறது – திருப்பாவை, திருவாசகம் இன்றும் நம்மை நெகிழச் செய்கின்றன; ஆழ்வார் பாசுரங்களில் சங்கப் பாடல்களின் நேர்த் தொடர்ச்சியை காண முடிகிறது. ஆன்மீகம் அரசியல் ஆகும்போது, மாயங்கள் இல்லாத உலகில் மயக்கங்கள் நிறையும். அங்கு இலக்கியம், தன் புனைவாற்றலைக் கொண்டு உண்மையை உணர்த்த வேண்டும், அதன் மாயம் மயக்கத்தைக் கலைத்து மெய்யுணர்வுகளை எழுப்ப வேண்டும்.

மெய்ம்மையே புனைவின் ஆதாரம். உண்மைக்கு எதிரானதோ, அதற்கான தேவையற்றதோ அல்ல கற்பனை. திரிக்கப்பட்ட உண்மையல்ல- காலம், அகவுணர்வுகள், புறச்சூழல்கள் இவற்றில் பிரதிபலிக்கப்பட்ட உண்மையே இலக்கியம்.

உண்மையின் எதிரிகள் இலக்கியத்தின் எதிரிகள், ஆனால் இலக்கியத்துக்கோ அதன் இயக்கத்துக்கோ எதிரிகள் கிடையாது: யாரும் அதன் எதிர்நிலையில் இருக்க முடியாது என்பதால்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Advertisements

4 thoughts on “புத்தாண்டு வாழ்த்துகள், 2017

 1. நன்றி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார் ! (still January) 🙂

  இலக்கியம்/கலை- ஆன்மீக அனுபவம் : இப்படிச்சொல்லியிருக்கிறார் ரமணர்!

  Q: Through poetry, music, japa, bhajans [devotional songs], the sight of beautiful landscapes, reading the lines of spiritual verses, etc., one experiences sometimes a true sense of the all-pervading unity. Is that feeling of deep blissful quiet in which the personal self has no place the same as the entering into the Heart of which Bhagavan speaks? Will undertaking these activities lead to a deeper samadhi and so ultimately to a full vision of the real?

  A: There is happiness when agreeable things are presented to the mind. It is the happiness inherent in the Self, and there is no other happiness. And it is not alien and afar. You are diving into the Self on those occasions which you consider pleasurable and that diving results in self-existent bliss. But the association of ideas is responsible for foisting that bliss on other things or occurrences while, in fact, that bliss is within you. On these occasions you are plunging into the Self, though unconsciously. If you do so consciously, with the conviction that comes of the experience that you are identical with the happiness which is truly the Self, the one reality, you call it realisation. I want you to dive consciously into the Self, that is the Heart.

  Godman, David; Be As You Are: The Teachings of Sri Ramana Maharshi

  1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்- எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

   ஏதோ ஓரிடத்தில் நால்வர் பற்றி பேச்சு வரும்போது, பாடிப் பெற்றார்கள் என்று யாரோ சொல்ல, இல்லை, பெற்றதைப் பாடினார்கள் என்று ரமணர் பதில் சொல்வதாகப் படித்த நினைவு. பொதுவாகச் சொன்னால் எழுதுவது, படிப்பது, பாடுவது, ஆடுவது இதெல்லாம் சாதகர்களுக்கு தேவையில்லை என்றுதான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

   நீங்கள் சுட்டியுள்ள மேற்கோளில்கூட, சந்தோஷமாக இருக்கும்போது, மனம் அடங்குகிறது, அப்போது உள்ளிருந்து கிடைக்கும் ஆனந்தம் வெளியே இருக்கும், சந்தோஷப்படுத்தும் வஸ்துவால் கிடைத்தது என்று நினைத்துக் கொள்ளப்படுகிறது, எனவே புற விஷயங்களில் மனதைச் சிதற விடாமல் எங்கிருந்து ஆனந்தம் வருகிறதோ அந்த இடத்துக்கு நேரடியாகப் போ என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அதைச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.