சொல்வீக்கம்

Felicity என்ற சொல் மகிழ்ச்சி, பொருத்தம் என்ற இரு பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. Marital felicity என்ற பயன்பாடு இதைச் சரியாக உணர்த்துகிறது. இங்கு பொருத்தமும் நேர்கிறது, மகிழ்ச்சியும் கூடுகிறது. எனவே தாம்பத்திய இன்பம் என்பது சரியாக இருக்குமா என்றால் அவ்வளவு சரியாக இருக்காது. ஒரு காலத்தில் அந்தப் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றாலும் – “Contraception is frequently prescribed as a measure of mental hygiene to allay the haunting fear of pregnancy which often handicaps marital felicity,” என்று ஒருவர் எழுதுகிறார், 1930களில். ஆனால் இப்போது அதற்கு இன்னொரு அர்த்தம் வந்திருக்கிறது.

J. L. Austin என்ற தத்துவவியலாளர் சொல்லே செயல் என்கிற மாதிரி ஒன்று சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது – அதை speech act theory என்று சொல்கிறார்கள். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்று சொல்கிறார்கள், இல்லையா, அங்கு சொல்லே செயலாகிறது. இப்படிப்பட்ட சொற்-செயல்கள் உண்மை பொய்மைக்கு அப்பாற்பட்டவை. உண்மை என்றோ பொய் என்றோ நிரூபிப்பதால் வினையோ விளைவோ மாறிவிடப் போவதில்லை. எனவே Austin, இது போன்ற பயன்பாடுகளை performative utterance என்று சொல்லி, அவை felicitousஆக இருக்கிறதா அல்லது infelicitousஆக இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று சொல்கிறார்.

சொற்செயல்கள் மூவகைப்பட்டவையாக இருக்கலாம் – அது ஒரு அறிவிப்பாக இருக்கலாம் – “உன்னைத் தூக்கில் போடுகிறேன்”,  ஒரு விண்ணப்பமாக இருக்கலாம் – “தயவு செய்து என்னை மன்னித்துக் விடுங்கள்”, அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம் – “இப்படியெல்லாம் செய்தால் உன்னை ஒரு வழி பண்ணி விடுவேன்” (எல்லாம் விக்கிபீடியாவில் இருக்கிறது)

தத்துவவியலாளர் என்பதால் சொற்செயல் எப்போது எப்படி வேலை செய்யும் என்பதற்கு சில கண்டிஷன்கள் போடுகிறார் அவர். அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்போதைக்கு நாம் பார்க்க வேண்டியது சொல்லே செயலாகும் என்பதையும் எப்போது சொல்லே செயலாகிறது என்பதையும்தான்.

அப்டேட் செய்கிறேன்.

oOo

ஜனவரி 8, காலை 6:40

இடைவெளி விழுந்துவிட்டதால் என்ன எழுத நினைத்து இதை ஆரம்பித்தேன் என்பதே மறந்து விட்டது!

ஒரு வசதிக்கு felicity என்பதை முயக்கம் என்று அழைக்கிறேன். தமிழில் திரும்பத் திரும்ப ஃபெலிசிட்டி, ஃபெலிசிட்டி என்று எழுதுவது சரியாகத் தெரியவில்லை.

ஆஸ்டின் முயக்கத்தின் முன்நிபந்தனைகள் என்று சில விஷயங்கள் சொல்கிறார் (இதுவும் விக்கிபீடியா துணை கொண்டே)

ஆணைகளுக்கான முயக்க முன்நிபந்தனைகள்:

சடங்கு போன்ற ஒரு சம்பிரதாய மரபைப் பின்பற்ற வேண்டும். முயக்கச் சொல் வினை அதற்குரிய பொருத்தப்பட்டு கொண்ட சூழலில், தகுதி வாய்ந்த நபரால் இயற்றப்பட வேண்டும் (நீதிபதியேயானாலும் தூக்கு தண்டனை நீதிமன்றத்தில்தான் வழங்கப்படலாம், சாலை முனையில் அல்ல). பிழைகள், குறுக்கீடுகள் இன்றி சொல்வினை இயற்றப்பட வேண்டும் (குழப்பத்துக்கு இடம் தரும், முழுமையாய் இல்லாத ஆணைகள் நிறைவேற்றப்படும்போது உத்தேசித்த விளைவு தவறவிடப்படலாம்).

விண்ணப்பங்களுக்கான முயக்க முன்நிபந்தனைகள்:

விண்ணப்பத்தில் முன்னிடும் செயல், செவிப்பவர் எதிர்காலத்தில் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் (மன்னித்துக் கொள்ளுங்கள், என்று சொன்னால், அதைக் கேட்பவர் எதிர்காலத்தில் மன்னிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்). அவர் விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து உரிய வகையில் செயலாற்றுவார் என்ற நம்பிக்கை சொல்வினைஞருக்கு இருக்க வேண்டும். அவர் விண்ணப்பிக்காமலேயே வேலை நடக்கலாம் என்ற நிலைமை இருக்கக்கூடாது.

எச்சரிக்கைகளுக்கான முயக்க முன்நிபந்தனைகள்: 

எதிர்கால நிகழ்வு குறித்தவையே எச்சரிக்கைகள். எச்சரிக்கப்படும் நிகழ்வு நிறைவுறும் என்ற நம்பிக்கை சொல்வினைஞருக்கு இருக்க வேண்டும், அந்த நிகழ்வு எச்ச்சரிக்கப்படுபவருக்கு ஊறு செய்வதாக இருக்க வேண்டும், எச்சரிக்கப்படும் நிகழ்வு குறித்து எச்சரிக்கப்படுபவர் அறியவில்லை என்ற எண்ணம் எச்சரிப்பவருக்கு இருக்க வேண்டும். எதிர்கால நிகழ்வு தனக்கு எதிர்மறையானது என்பதை எச்சரிப்பவர் உணர்த்த விரும்புகிறார் என்பதை எச்ச்சரிக்கப்படுபவர் புரிந்து கொள்ள வேண்டும்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

என்று வள்ளுவர் சொல்கிறார் அல்லவா, அத்தகைய இயற்றுதலே இங்கு முயக்கம் என்று சொல்லப்படுகிறது. முழுமை பெற்ற முயக்கத்தில் சொல்லும் செயலும் ஒன்று கூடுகின்றன, சொல் எதை முன்னிடுகிறதோ, அதன் இயற்றுதலே செயலாகிறது.

‘வாக்கு கொடுத்து விட்டார்’, ‘சொன்ன சொல் தவற மாட்டார்’, ‘வார்த்தை தவறி விட்டாய்’ போன்ற பிரயோகங்கள் வழக்கமாகவே நாம் சொல்லையும் செயலையும் ஒன்றாக நினைத்து வந்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. கவி என்ற சொல் சமஸ்கிருதத்தில் கூவுதல் என்ற பொருள் கொண்டிருக்கிறது, ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’ என்கிறார் கம்பர். தமிழிலும் மெய்யெழுத்துகளுக்கு இயக்கம் அளிப்பது உயிரெழுத்துகளின் கூடலே, சிவபெருமான் முதற் புலவர் என்று சொல்லப்படுகிறார், ‘”யாரும் அறியார் அகாரம் அவனென்று” என்கிறார் திருமூலர்.

சொல் செயல் இயற்றவல்லது என்றாலும், சொல்-பொருள் முயக்கமே இயக்கும் தன்மை கொண்டது.

(தொடரும்)

Advertisements

2 thoughts on “சொல்வீக்கம்

  1. “நீங்கள் விக்கிபீடியாவில் உள்ளீர்களா…?” என்பதை மட்டும் தெரிவிக்கவும்… என்னால் முடிந்த உதவி செய்கிறேன்…. நன்றி….

    dindiguldhanabalan@yahoo.com
    9944345233

    1. விக்கிபீடியாவைப் பார்த்து எழுதுபவன் ஸார், விக்கிபீடியாவில் எழுதும் அளவு வளரவில்லை 🙂

      தங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s