நினைவில் நிற்பவை

(நண்பர் ஒருவர், திருநின்றவூரில் வசிப்பவர், பார்க்கும்போதெல்லாம், “லேட்டஸ்டா எதுவும் எழுதினீங்களா?” என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார். அவரை தண்டிக்கும்விதமாக இதை எழுதினேன் என்று வைத்துக் கொள்ளலாம்)

நினைவில் நிற்பவை

உய் உய்யென்று கத்திக் கொண்டு போன ஆம்புலன்ஸ் ஒன்று ஞானத்தின் கனவுகளைக் கலைத்து இரவு இரண்டு மணிக்கே எழுப்பி விட்டுப் போயிருந்தது. தூக்கம் கலையாத மயக்க நிலையில் அதன் ஓலம் தேய்ந்து மறையும்வரை கேட்டுக் கொண்டிருந்தவனால் அதற்குப்பின் தூங்க முடியவில்லை. இந்த நாள் இனிய நாள், என்று நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தவனை ஏதேதோ நினைவுகள் ஆக்கிரமித்து, இலக்கியம் சார்ந்த எண்ணங்கள் துளிர்த்தெழுந்ததும் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை.

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், ஆஸ்திரேலியாவில் வசிப்பவர், “என்ன ஸார், இப்படி எழுதறாங்களே, ஸார்,” என்ற குறிப்புடன் நியூ யார்க்கர் கட்டுரை ஒன்றின் சுட்டி அனுப்பியிருந்தார். She Said She Said என்ற பீட்டில்ஸ் பாடல் ஒன்றைப் பற்றிய கட்டுரை அது–   “I was the species of moody adolescent who drove people away from me when that was the last thing I wanted, so I spent a lot of time alone,” என்ற முதல் வாக்கியத்தைப் படித்ததுமே ஞானத்தின் இதயத்தில் உத்திரணியளவு வெறுமை கண்டதும், “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,” என்பதற்கு இணையான ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய சஹிருதய அங்கலாய்ப்பை இனங்கண்டு கொண்டவன், “நியூ யார்க்கர்ல்லாம் படிக்கக் கூடாது, ஸார்” என்று பதில் அனுப்பிவிட்டு குற்றவாளியொருவனை தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதற்குரிய கவனத்துடன் கட்டுரையை நிதானமாக வாசித்து முடித்தான்.

புத்தக முன்னட்டை பின்னட்டை போல், “I had private enthusiasms. I liked to be in the woods by myself, I liked to sleep, I liked to swim underwater, and I liked to sit in my room and listen to music, usually repetitively, while looking at the record’s cover,” என்று தொடர்ந்த அந்தக் கட்டுரை, “The border between our memories and the past, and not even the very faraway past, is the territory where we begin groping for facts and meaning. Certain things return naturally, aggressively, even. Others prefer the shadows or even the darkness. It is no observation of my own that the past is the territory of lies. The person I was is lost and can’t be recovered. I can only re-create him, a gloomy adolescent, alone in his room, holding a record cover, listening to the mystery,” என்று முடிந்திருந்தது. இவ்விரண்டுக்கும் இடையில் ஒரு தலைமுறையின் கலாசார வரலாற்றை அதற்கேயுரிய உணர்வுகளுடன் பதிவு செய்திருந்தார் கட்டுரையாசிரியர் Alec Wilkinson.

It is no observation of my own that the past is the territory of lies. The person I was is lost and can’t be recovered,” என்ற இரு வாக்கியங்களையும் அவற்றை இணைக்கும் மர்மம் குறித்த வியப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்ட ஞானம், கட்டுரையின் துவக்கம் மற்றும் முடிவில் இருந்த வாக்கியங்களை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் சேமித்து வைத்துக் கொண்டு, முழு கட்டுரையையும் பிடிஎப் கோப்பு வடிவில் தரவிறக்கினான்- Good articles என்ற போல்டரில் காத்துக் கொண்டிருந்த வேறு பல கட்டுரைகளுடன் அதுவும் சேர்ந்து கொண்டது.

அவனது வேறொரு நண்பர், கோவையில் வசிப்பவர், தன் அன்றாட வாசிப்பில் எதிர்படும் அர்த்தம் பொதிந்த வாக்கியங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர். ஒரு முறை ஞானத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘இந்த கோட்டபிள் கோட்ஸ் மாதிரி எழுதறது, அதுக்கெல்லாம் ஒரு தனி அழகு இருக்கில்ல?” என்று கேட்டார். ஞானம் உடனே சிலிர்த்தெழுந்து, ‘மெமரபிள் செண்டன்ஸ்லாம் இல்லாம ஏது ஸார் இலக்கியம்? அதானே இலக்கியம்?” என்று பதில் வினா எழுப்பினான். இலக்கியமோ இல்லையோ, தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது அழகான பூக்களைப் பார்த்தால் போட்டோ எடுத்து வைத்துக் கொள்பவர்களைப் போல் சின்ன வயதிலேயே அழகு அல்லது அர்த்தம் நிறைந்த வாக்கியங்களை ஒரு நாட்குறிப்பில் நகல் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் ஞானத்துக்கு இருந்தது.

பாஸ்வெல் எழுதிய லைப் ஆப் ஜான்சனில் சாமுவேல் ஜான்சன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கல்வெட்டில்தான் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், அப்படியொரு ஆணித்தரமான தன்மை அவற்றுக்குண்டு; ஆர். எல். ஸ்டீவன்சனின் காதல் கதைகளில்கூட பொன்மொழிகள் பத்திக்கு நாலு கிடைக்கும்; ஜான் ஸ்டீன்பெக்கின் ட்ராவல்ஸ் வித் சார்லி அதன் அசத்தலான வாக்கியங்களால் நிலக்கரிச் சுரங்கத்தில் வைரங்கள் கண்டது போன்ற ஒரு ஆச்சரியம் அளித்தது; பணக்கார குடும்பத்தில் பிறந்து எல்லாவற்றிலும் ஜெயித்துக் கொண்டே இருந்து ஐ.நா. சபையின் மிக உயர்ந்த பதவி வரை சென்ற Dag Hammerskjoldன் நாட்குறிப்புகள், Markings, மிகவும் ஆழமான கருத்துகள் கொண்டது- அவர் தன் பொன்மொழிகளை மட்டுமே பதிவு செய்திருந்தார் என்றும் சொல்லலாம்-, ஆனால் எதிர்பாராமல் அம்மாவிடம் அடி வாங்கி வீறிட்டு அழும் கைக்குழந்தையின் சமாதானப்படுத்த முடியாத ரணம் அவரது ஒவ்வொரு வாக்கியத்திலும் வெளிப்பட்டது, அத்தனை துயரம்; தோரோவின் வால்டன் பற்றிச் சொல்லவே வேண்டாம் – எளிய ஒற்றைச் சொல்லை மும்முறை எழுதி சாமியார் முதல் கோடிங் செய்பவன் வரை அத்தனை பேருக்கும் உரிய மகாவாக்கியம் அருள வல்லவர்.

அண்மைக்கால வாசிப்பில் Evan Osnos எழுதிய சிறிய ஒரு கட்டுரையை அதன் அற்புதமான துவக்க இரு வாக்கியங்களுக்காகவே பலமுறை வாசித்திருந்தான் ஞானம். “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity,” என்று துவங்கும் டிக்கன்ஸின் வாக்கியத்துக்கும் “It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife”, என்ற ஜேன் ஆஸ்டன் வாக்கியத்துக்கும் இணையான அழகும் அர்த்தமும் அதில் அவன் கண்டான்- “What is the precise moment, in the life of a country, when tyranny takes hold? It rarely happens in an instant; it arrives like twilight, and, at first, the eyes adjust.”

சிறு வயதில் தன் சித்தப்பா வீட்டு வாசலில் இருந்த சாலையில் நாளெல்லாம் ஞானம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததுண்டு; இன்னும் ஒரு பால், இன்னும் ஒன்று என்று விளையாட்டை நிறுத்த மனமில்லாமல் ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் சாலையோரம் இருந்த செடிகளுக்கிடையே கவிந்த இருளில் பந்தைத் தொலைத்துவிட்டு, எக்கணம் மாலை இரவானது என்பதே தெரியாமல் வீடு திரும்புவார்கள். அதை நினைவுபடுத்தும் ‘It rarely happens in an instant; it arrives like twilight, and, at first, the eyes adjust,’ என்ற வாக்கியம் டிக்கன்ஸ், மற்றும் ஜேன் ஆஸ்டன் வாக்கியங்களைப் போலவே முழு அர்த்தம் அறிந்தவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒன்று என்று நினைத்தான்.

When someone says something, don’t ask yourself if it is true. Ask what it might be true of,” என்று மைக்கேல் லூயிஸ் The Undoing Projectல் எழுதியிருப்பதாய் ஒரு மேற்கோளில் கண்ட ஞானம் அந்தப் புத்தகத்தை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று தேடி, அதற்கு அடுத்த வாக்கியத்தில் அடைந்த நிறைவை இன்னதென்று சொல்ல முடியாது – “That was his intellectual instinct, his natural first step to the mental hoop: to take whatever someone had just said to him and try not to tear it down but to make sense of it.” இதெல்லாம் ஒரு வரம்.

ஆனால் ஞானத்தால் இது போன்ற பொன்மொழிகளை கைபேசியில் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த பார்வர்ட் தொல்லை பொறுக்காமல் அவன் வாட்சப்பை ம்யூட் செய்திருந்தான்- எதையும் படிக்காமலேயே படித்ததாய் மார்க் செய்து கடந்து செல்வது அவன் வழக்கம். ஒரு முறை நீண்ட நாட்களுக்குப்பின் போன் செய்த அவனது நண்பன், ஆலந்தூரில் இருப்பவன், “வேலை போச்சு, பெண்டாட்டி பிள்ளை யாரும் என்னை மதிக்கறது இல்லை,’ என்று சொன்னபோதுதான் அவன் அனுப்பிய வாட்சப் பொன்மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளர்த்தம் இருப்பதைப் பார்த்து, “அடப்பாவம், ஆதரவாய் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்,” என்று வருந்தி, “அவ்வளவு பெரிய பிரச்சினைக்கு ஒரு பொன்மொழியைப் பாராட்டி என்ன பதில் சொல்லிவிட முடியும்,” என்று தேற்றிக் கொண்டான். உண்மையில் பொன்மொழிகள் அவரவர் அளவில் எவ்வளவு அர்த்தம் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றைக் கொண்டு யாருக்கும் எந்த உண்மையையும் சொல்லிவிட முடியாது, எந்த உணர்வையும் பகிர்ந்து கொள்ள முடியாது.

Getting that boiled-down paragraph or two is terribly hard, but I have to tell you that my experience is that if you get it, the whole next seven years is easier. When you have it, it’s so comforting, because you’re typing away, and you can look over—it’s usually stuck on the wall right there, but I don’t want you to see it, actually. I put it away. I don’t like anyone to see my notes. But you can look over there and say, You’re doing this whole thing on civil rights—let’s take Master of the Senate—the whole history of the civil rights movement. Is this fitting in with those three paragraphs? How is it fitting in? What you just wrote is good, but it’s not fitting in. So you have to throw it away or find a way to make it fit in. So it’s very comforting to have that,” என்று ஒரு பாரிஸ் ரிவ்யூ நேர்முகத்தில் சொல்கிறார் ராபர்ட் காரோ. வரலாற்று பேராசிரியர் என்றெல்லாம் எதுவுமாக இல்லாத ராபர்ட் காரோவின் வாழ்க்கைச் சரித்திரங்கள் எல்லா துறைகளிலும் பாடப் புத்தகமாய் பரிந்துரைக்கப்படுகின்றன என்று அவனுக்கு ஒரு நண்பர், அமெரிக்காவில் படிப்பவர், சொல்லியிருந்தார். மிகத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து எழுதுபவர் என்பதால் ராபர்ட் காரோ ஒரு புத்தகத்தை எழுத எட்டு வருஷம் பத்து வருஷமெல்லாம் எடுத்துக் கொள்வாராம் ஆனால் அவருக்கே அத்தனை ஆராய்ச்சிக்குப் பின் அவர் எழுதும் புத்தகம் என்ன என்பதன் சித்திரத்தை மனதில் நிறுத்த ஓரிரு பத்திகள்தான் தேவைப்படுகின்றன- “Getting that boiled-down paragraph or two is terribly hard, but I have to tell you that my experience is that if you get it, the whole next seven years is easier“.

அந்த இரு பத்திகள் ஏழு வருஷத்துக்கு அவரைச் செலுத்துகின்றன என்றால் அவரைப் பொறுத்தவரை அவரது நினைவில் நிற்பது அந்த இரு பத்திகளாகதான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான் ஞானம்- ராபர்ட் காரோ தன் முதல் புத்தகத்தை எழுத ஏழு வருடம் எடுத்துக் கொண்டபோது, “இந்தப் புத்தகத்தை யார் படிப்பார்கள், எதற்கு இத்தனை கஷ்டப்படுகிறாய்?” என்றுதான் எல்லாரும் சொன்னார்களாம். ஆனால் அந்தப் புத்தகத்தை எழுத அவர் முழு நேரம் ஒதுக்க உதவியாய், காரோவின் மனைவி அவருக்கே தெரியாமல் தன் வீட்டை விற்று ஒரு வருஷம் வெட்டியாய் உட்கார்த்தி வைத்து காரோவுக்கு சோறு போட்டதைத்தான் ஞானத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பெண்கள் எந்த நம்பிக்கையில் தங்கள் கணவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்?

ஒரு முறை ஞானம் வேலை முடிந்து சிறிது தாமதமாய் கிளம்ப வேண்டியிருந்தது. அவன் அலுவலகத்தின் இரு கட்டிடங்களுக்கு இடையே நீண்டிருந்த பாலத்தில் நடக்கும்போது ஒரு புறா உற்சாகமேயில்லாமல் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் வருவதைப் பார்த்து அது பதட்டப்பட்டதாய்த் தெரியவில்லை. குனிந்து கையை நீட்டினால் தொட்டு விடலாம் என்ற நினைப்பில் அவன் நெருங்கியதும் அது விருட்டென்று மூன்று அடி பறந்து சென்று இரண்டு அடி உயர கண்ணாடித் தடுப்பில் படாரென்று முட்டிச் சரிந்து சொத்தென்று கீழே விழுந்தது. அத்தனை நேரம் அந்தப் புறா ஏன் தண்ணியடித்தது போல் கிறக்கமாய் இருந்தது என்பதைப் புரிந்து கொண்ட ஞானத்தால், நாம் பாட்டுக்கு நம் வழியில் போயிருக்கலாம், தேவையில்லாமல் அது மீண்டும் முட்டிக் கொள்ள காரணமாகி விட்டோம் என்று வருத்தப்படத்தான் முடிந்தது.

Advertisements

2 thoughts on “நினைவில் நிற்பவை

  1. உண்மையில் பொன்மொழிகள் அவரவர்அளவில் எவ்வளவு அர்த்தம் நிறைந்ததாக இருந்தாலும் இவற்றைக் கொண்டு யாருக்கும் எந்த உண்மை யையும் சொல்லி விட முடியாது. எந்த உண்மையையும் உணர வைக்கவும் முடி யாது. இது தா ன் பொன் மொழி க ளின் இடம்.அதுவும் இலக்கியத்தில். Well Said.A
    Markings. அது தனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s