நினைவில் நின்றவை

நேற்று இரவு எதையோ பார்ப்பதற்காக போனபோது கிடைத்தது-

forbes-quote

இதை எல்லாம் வேண்டாம் என்றோ இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

இந்த நினைப்பில்தான் வாட்சப் பரிமாறல்கள் நடக்கின்றன என்று நினைக்கிறேன்.

oOo

மூன்று கதைகள் இருக்கின்றன. நடந்த கதை ஒன்று, நடக்கக்கூடிய கதை ஒன்று, நடந்திருக்கக்கூடிய கதை ஒன்று, என்று ஜார்ஜ் சாண்டர்ஸ் கூறியதாக ஒரு பேட்டியில் படித்தேன். இதில், என்ன நடந்திருக்கும் என்ற மூன்றாவது விஷயம்தான் புனைவுக்குரிய விஷயம் என்கிறார் அவர் (“I’ve heard this creative writing notion that there are stories about what happened, what could happen, and what should have happened. The third one, of course, is the province of fiction”) – Bomb Magazine.

 

 

Advertisements

10 thoughts on “நினைவில் நின்றவை

  • அருமையா இருக்கு. இத்தனையையும் மீறி என்னத்த யோசிக்க, எந்த பக்கம் திரும்பினாலும் ஏதோ ஒரு திருகல் இருக்கும் போல.

   இதைப் பத்தியெல்லாம் ஒவ்வொன்னா எழுதி வச்சுக்கவே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் போல, அருமையான வரைபடம். ஆச்சரியப்படுத்தும் டிசைன்.

 1. “எந்த பக்கம் திரும்பினாலும் ஏதோ ஒரு திருகல் இருக்கும் போல.”:

  மனத்தில் மையங்கொண்டிருக்கிறவரை இந்த பயஸ்களுள்ளே சுற்றிக்கொண்டிருக்கவேண்டும்,
  தப்பிக்க ஒரே வழி, மனத்தைக்கடத்தல்தான் (Transcend) என்பதாக தோன்றுகிறது… எம்பிக்குதிப்பதா? ஏறிக்கடப்பதா? 🙂

  • மூளை வளர்ச்சி நின்றபின் சார்பு நிலை இல்லாமல் புலனறிவு இல்லை என்று தோன்றுகிறது. ஆலிவர் சாக்ஸ் புத்தகம் ஒன்றில், பிறவி முதல் பார்வையற்ற ஒருவருக்கு மத்திய வயதுக்கப்பால் பார்வை கிடைக்கும்போது அவர் அத்தனை தகவல்களையும் சீரணித்து தொகுத்துக் கொள்ள முடியாமல் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறார் என்று படித்த நினைவு. மனம் என்பதே தொகுப்பு யந்திரமாகி விடுகிறது, நமக்கெல்லாம்.

   ஆனால் மனத்தைக் கடப்பதும் அவ்வளவு சுலபமாக இருக்கும் போல இல்லையே!

   • பல்வேறு சந்தர்ப்பசூழ்நிலைகளுக்கேற்ப தொழிற்படுவதற்கு சார்பு நிலைகள் உதவுகின்றது.ஒரு வசதிக்கு உருவானது இன்னொன்றில் குறுக்கிடுகிறபோது கண்ணை மறைக்கிறது.
    *மூளை தசைகளைபோல உபயோகிக்க வளரும் உபயோகம் குறைந்தால் சுருங்கும்.( மூளையின் தொழிற்பாட்டுப்பரப்பை குறிப்பிடுகிறார்கள்).பார்வையற்றவர்களில் பார்வைபகுதி சுருங்கியும் செவிப்புலன் ,தொடுகை பகுதி விரிந்தும் இருக்கும். பார்வை பெற்றவுடன் சிக்கலாக இருக்கும். ஆனால் தேவைக்கேற்றாற்போல காலப்போக்கில் விரிவடைந்துடும் என்கிறார்கள்.
    *மனதைக்கடத்தல் சுலபம் என்றால் அது சுலபம் ,கடினம் என்றால் அது கடினம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s