சமகால விவாதங்கள்

(நண்பர் வரசித்தன் வருகையைச் சிறப்பித்து)

முன்னனுமானங்கள், சார்பு நிலைகள்,
அசட்டுப் பிடிவாதங்கள், தற்சார்புப் பிரகடனங்கள்-
தண்ணீர் படக்கூடாத சொகுசு மெத்தைகள்
காற்றில் உலர்த்தப்பட்டு நாற்றம் போனதும்
மடித்து வைக்கப்படுகின்றன, விரித்துப் படுக்க.

Advertisements

6 thoughts on “சமகால விவாதங்கள்

 1. 🙂
  கருத்துப் பந்தாட்டம்
  சுவரில் பட்டால் சிக்ஸர்!
  பயஸ் விளைந்து கிடக்கிறது மனசு

  என்ன சார் வருகை சிறப்பித்தல்?
  ஒரு உந்துதலில் பகிர்ந்து கொண்டேன்(confirmation bias )
  எழுத்து- வாசிப்பு முனைப்பு காவிரி போல கிடக்கிறது மணல் கூட அள்ள முடியவில்லை

  1. யாரோ ஒருத்தர், Wheeler என்பவர் என்று நினைக்கிறேன், சொன்னார்- அறிவு என்பது ஒரு தீவு மாதிரி, எவ்வளவுக்கு எவ்வளவு அதன் பரப்பை அறிகிறோமோ அவ்வளவுக்கு அதன் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன என்று. உண்மையில் நமக்குத் தெரியாதவை எத்தனை என்பதுகூட ஆச்சரியமில்லை, நமக்குத் தெரிந்தது இத்தனை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே, அதுதான் ஆச்சரியம்! 🙂

 2. ஒரு கருத்தை சொன்னவுடன் அது போதாமை அல்லது குறைவுடையதாக தெரியத்தொடங்குகிறது .இதற்கு சொல்லப்படாமல் விடுபட்டவை மனதில் மேலெழுவது காரணமாய் அமைகிறது. கருத்தை படித்தாலும் அதே நிலை.நிறைவு அடைய முடிவதில்லை. எந்தவொரு விஷயத்துக்கும் பல்வேறு கோணங்கள்! அறிவு விசாலமாக கோணங்கள் அதிகமாகிவிடுகின்றன .( சமூகம் கொந்தளிக்கிற ஒரு சம்பவத்துக்கு உளவியல் பார்வை பரிதாப்படவைக்கலாம்).சார்பு நிலை மூலம் இதைக்கடக்கிறோம்(sorry this is business,not personal).ஆனால் அறிவு உள்ளே குறுகுறுக்க வைக்கிறது . ஞானம்தான் wisdom முழுமைப்பார்வையைத்தரும் என்கிறார்கள் …ஏம்ப்பா ஞானம் எங்கேப்பா இருக்கிறாய் ?

 3. கடந்து போனா போனதுதான் . திரும்பி வந்து ” எனக்கு இன்னொரு பெயர் இருக்கு ..பாடஷா ” இப்பிடியெல்லாம் சொல்லவே முடியாது இல்லையா? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s