ஒரு சிறு வாழ்த்து

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறுகதை ஒன்று சுசித்ரா ராமச்சந்திரன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச போட்டியொன்றில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. பரிசு பெற்ற சிறுகதை, பெரியம்மாவின் சொற்கள். பரிசளித்த தளம், Asymptote. சிறுகதையின் ஆங்கில வடிவம், Periyamma’s Words.

ஜெயமோகன் மற்றும் சுசித்ரா ராமச்சந்திரன் இருவருக்கும் வாழ்த்துகள்.

சர்வதேச பரிசு என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், அதைவிட இந்தச் சிறுகதையைப் பரிசுக்கு தேர்ந்தெடுத்த டேவிட் பெல்லோஸ் முக்கியமான ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அவர் அண்மையில் எழுதியிருந்த Is That a Fish in Your Ears அதிகம் பேசப்பட்ட நூல். Georges Perec, Ismail Kadare, Georges Simenon முதலான முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் அவர். எந்தவொரு பரிசை விடவும் தக்க நபரால் அங்கீகரிக்கப்படுவது மனதுக்கு நிறைவளிப்பது. சுசித்ரா ராமச்சந்திரனுக்கு வாழ்த்துகள்.

டேவிட் பெல்லோஸ் அளித்திருக்கும் குறிப்பு இக்கதையின் சிறப்பைச் சுருக்கமாக, ஆனால் திருத்தமாக எடுத்துரைக்கிறது :

“There were several contenders for second place, but I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.”

ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்.

இந்தப் பரிசு இன்னும் பல தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவும் அவை உலக அளவில் கவனிக்கப்படவும் ஒரு சிறிய அளவிலாவது காரணமாகும் என்று நினைக்கிறேன். அதே போல், ஆங்கில மொழியில் தேர்ச்சி கொண்ட இன்னும் பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றவும் இது ஊக்கம் அளிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.