வுட்டின் சேகரம்

இப்போதெல்லாம் இணையதளங்களில் தொடர்ந்து எழுதுபவர்களும் இல்லை, வாசிப்பவர்களும் இல்லை. ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் ஏதோ ஒன்று போல் நம் கவனம் சமூக ஊடகங்களால் அலைக்கழித்து, கொண்டு செல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் நான் தொடர்ந்து ஆர்வத்துடன் வாசித்து வந்த தளங்களுள் ஒன்று Wood’s Lot.  அழகிய புகைப்படங்கள், பெரும்பாலும் புரியாத கவிதைகள், கடுமையான மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் சில பத்திகள், புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் சுட்டிகள் என்று தினம் அங்கு பகிரப்படும், பார்க்கவே பிரமிக்க வைக்கும் தளம். வெகு நாட்களாக அதைப் பார்க்கவே இல்லையே, என்ன ஆயிற்று என்று இன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வலைதளத்தை நடத்தி வந்த Mark Wood புற்றுநோயால் காலமாகி விட்டார் என்று தகவலை அவரது சகோதரர் அங்கு பதிவு செய்திருக்கிறார். வருத்தமான செய்தி.

ஒரு புத்தகம் அல்லது ஓவியம் அல்லது ஒரு இசைத்தட்டு என்றால் அது எப்போதும் நம்மோடிருக்கும். ஆனால் இணையம் அல்லது டிஜிடல் விஷயங்கள் தொடர்பு அறுபட்ட கணமே இல்லாது போகின்றன. அந்த இழப்பு பின்னொரு நாள் உறுதி செய்யப்படுகிறது என்பதைத் தவிர மரணச் செய்திகளில் பெரிய அளவில் எந்த தாக்கமும் இருப்பதில்லை. அடுத்த அழைப்பு, பகிர்வு, தகவல் நம்மைக் கொண்டு செல்கிறது.

நம் மனம் விரிவடையும் என்று இணையத்துக்கு வருகிறோம், ஆனால் இளைப்பாறும் அவகாசமற்ற இந்த உலகில் ஆழமற்ற, மேம்போக்கான மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். Wood’s Lot தளத்தில் அத்தனை விஷயங்களும் இப்போதும் இருக்கின்றன (எப்போது வேண்டுமானாலும் இல்லாது போகும்)- ஆனால் நான் இனி அதில் எதை, எப்போது பார்க்கப் போகிறேன்?

இணையத்தில் நாம் முதலில் நம்மை இழக்கிறோம், அதன் பின்னர் ஒவ்வொரு இழப்பையும் உறுதி செய்து கொள்கிறோம்.

தாமதம் எனினும், மறைந்த Mark Wood அவர்களை நேசத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்- ‘the fitful tracing of a portal’ என்ற அவரது ப்ளாக் ஹெட்டர் இப்போது கனமான பொருள் கொள்கிறது,  அவரது உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s