இருப்பது என்றால் என்ன?

இதைப் படித்ததும் இயல்பாகவே எழுந்த கேள்வி – புனைவுப் பாத்திரங்களுக்கும் மெய்யியல்பு உண்டா?

நண்பர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

oOo

John Nerst என்பவர் எழுதிய ‘The Big List of Existing Things’ என்ற பதிவில் உள்ள ஒரு சுவாரசியமான பகுதி:

சுலபமான ஒரு விஷயத்துடன் துவங்குகிறேன்: ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு எளிய உதாரணம், நிஜமாகவே இருக்கும் ஒருவர், தெரிந்து கொள்ள வேண்டாம் என்று முயற்சி செய்தாலும்கூட அவர் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்கிற மாதிரி ஒருவர், டொனால்ட் ட்ரம்ப். அவர் இருக்கிறார், இதில் சந்தேகமில்லை.

நெப்போலியன் விஷயம் எப்படி? இருநூறு ஆண்டுகளுக்கு முன் இறந்து போய் விட்டவர். அவர் இருக்கிறாரா? இப்போது இல்லை. டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார் என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறோமோ, அந்த அர்த்தத்தில் இல்லை. ஆனால் அவர் நிஜ மனிதரில்லை என்றோ அவர் இல்லை என்றோ அவர் ஒரு கற்பனை (“இருப்பது” என்பதன் பொது எதிர்ப்பதம்) என்றோ சொல்ல மாட்டோம். ஒரு உதாரணம் எடுத்துக்கொண்டால், ஷெர்லாக் ஹோம்ஸ் போல் அவர் கற்பனை பாத்திரம் அல்ல. நெப்போலியன் இல்லாத ஒரு வகையில் டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார் என்று சொல்வது சரியாக இருப்பது போலவே, ஷெர்லாக் ஹோம்ஸ் இல்லாத ஒரு வகையில் நெப்போலியன் இருக்கிறாரென்று சொல்வதும் சரியாக இருக்கிறது.

ஆனால் ஷெர்லாக் ஹோம்ஸ் இல்லை, அது தெளிவாகவே தெரியும். அவர் ஒரு புனைவுப் பாத்திரம். அப்படியானால் அவர் இல்லை, சரிதானே? அதுதானே அதன் அர்த்தம்?

அவ்வளவு அவசரம் வேண்டாம். “பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டனைக் களமாய்க் கொண்ட துப்பறியும் கதைக்கு இப்போது இருக்கும் பாத்திரம் ஏதாவது சரிப்பட்டு வருமா?” என்று யாராவது கேட்டால், “ஓ, ஷெர்லாக் ஹோம்ஸ் சரிப்பட்டு வருவாரே?” என்று நீங்கள் சொல்ல முடியும்.

புனைவுப் பாத்திரங்களும் இருப்பவர்கள்தான். அதாவது, “இருப்பது” என்பது புனைவுப் பாத்திரங்களுக்குப் பொருந்தக்கூடிய பொருளில், புனையப்பட்டவர்களையும் புனையப்படாதவர்களையும் வேறுபடுத்திப் பேசக்கூடிய பொருளில். ஹோம்ஸ் உண்மையாகவே இருக்கும் புனைவுப் பாத்திரம்- ஆர்ச்சிபால்ட் டண்டர்மன்ச் அப்படியல்ல. அவன் கோபக்காரர், குற்றங்களுக்கு எதிராகப் போராடுபவன், கொஞ்சம் குடிப்பழக்க பிரச்சினை உண்டு, அவனது முன்னாள் மனைவியுடன் சற்றே சிக்கலான உறவில் இருப்பவன்- இப்போதுதான் அப்படி ஒருத்தனை நான் கற்பனை செய்தேன்.

இன்னும் நிறைய சொல்லலாம். டண்டர்மன்ச் நிஜமாகவே கற்பனையில் உருவாக்கப்பட்டவன்தான், எனவே அவன் தூய பொருளில் சாத்தியமாயிருக்கக்கூடிய பாத்திரங்களுக்கு இல்லாத ஒரு வகை இருப்பு கொண்டவன். அவன் முழுமை பெற்ற கற்பனை, ரஸ்ஸலின் தேநீர்க்கோப்பை போல், சீன அறை போல். அவன் ஒரு பாத்திரம் குறித்து உள்ளபடியே இருக்கும் உருவம், ஆனால் இருக்கும் பாத்திரம் அல்ல.

இருப்பினும் இன்னும் தாராளமான பல பொருட்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியும்- ‘சாத்தியமாய் இருக்கக்கூடிய நபர்’ என்பது போலெல்லாம். ஆனால் இந்த விஷயங்களை இன்னும் சிக்கலாக்க வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் சொல்ல வருவது இதுதான் – நாம் சொற்களை முழு அர்த்தத்தில் பயன்படுத்துவதில்லை, கொஞ்சம் பொருள் நீட்சி கொள்கிறோம், படிமப் பொருளில் பயன்படுத்துகிறோம். இதனால் காலப்போக்கில் சொற்கள் பல்பொருள் அடையாளம் கொள்கின்றன. இந்தக் குழப்பத்தைக் களைந்து, ஒட்டுப்போட்டுத் தைக்கப்பட்ட இந்த அர்த்தங்கள் ஏதோ ஒரு உயர்ந்த தளத்தில் நிலவும் முரண்பாடற்ற மெய்ம்மையின் தாழ்தள உருப்பெயர்ச்சி என்று நான் சொல்லப் போவதில்லை. இருப்பது என்றால் என்னதான், ஐயா? அப்படியெல்லாம் இது வேலை செய்வதில்லை.

நன்றி – Everything Studies

18/10/2017 21:45 IST :

The words in italics, “இருப்பது என்றால் என்னதான், ஐயா?” (Google Translate renders it in English as, “What is wrong, sir?” This is as hilarious, and equally pertinent, as everything else the author has noted in his post- ‘Signed Google Translate‘) were added after the author pointed out the error in my translation.  My sincere apologies.

What is wrong, sir?- screenshot (I have suggested an edit to justify my translation. Hope it works)

Capture

One thought on “இருப்பது என்றால் என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.