ஒரு சிறு வாழ்த்துரை

நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஸ்கார் விருது’ கொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி படித்தேன். மிக மகிழ்ச்சியான விஷயம்.

சுனில் கிருஷ்ணன் பொது புள்ளியைக் கண்டடைந்து உரையாடுபவர், பொறுமை மிக்கவர். இதைச் சொல்ல வேண்டுமா என்றால், ஆமாம். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் சிலிர்த்துக் கொண்டு அதற்கு தார்மீக நியாயம், அறச் சீற்றம் என்றெல்லாம் முத்திரை குத்தி நட்பை முறித்துக் கொள்ளும் சூழலில் இந்த இரு குணங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன, அதுவும் இளைஞர்களுக்கு. அவ்வகையில் அவர் ஒரு முன்மாதிரி.

இரண்டாவதாக, சுனில் கிருஷ்ணன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். பதாகை இதழில் வந்த ‘புதிய குரல்கள்‘ தொடரின் நேர்முகங்கள் மற்றும் நூல் வாசிப்பு அத்தனையும் அவரது பங்களிப்பு மட்டுமே. எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லாமல் தன்னார்வம் கொண்டு மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வந்தார். “உங்களிடம் ஒரு நேர்முகம் வேண்டும்,” என்று கேட்கும் ஒவ்வொரு சமயமும் “இப்போது வேண்டாம்,” என்று மறுத்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு யுவ புரஸ்கார் அளிக்கும் அடையாளம் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரவும் அங்கீகாரம் பெறவும்  சிறிதளவேனும் உதவும் என்று நம்புகிறேன். இதுவும் சாதாரண விஷயமில்லை. காந்தியானாலும் சரி, தன் கதையானாலும் சரி, அதில் எல்லாம் எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே முனைப்பை பிறர் எழுத்தை முன்னிலைப்படுத்துவதிலும் காட்டி வந்திருக்கிறார். அந்த வகையில், இவ்வாண்டு, யுவ புரஸ்கார், சரியான நபரிடமே சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணன் நீண்ட பயணத்தின் துவக்கத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது இப்போதே கிடைத்திருப்பது பெரும்பேறு. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பல உயர்ந்த விருதுகளுக்கும் தகுதி கொண்டவர்தான் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் உண்டு. அவை தொய்வின்றி தொடர என் பிரார்த்தனைகள்.

oOo

23.6.2018 8:20 AM:

இதில் சில சொற்கள் நியாயமான காரணங்களுக்காகவும் உயர்ந்த லட்சியங்களுக்காகவும் மனசாட்சியின் குரலுக்காகவும் நட்புக்களை இழந்த சில நண்பர்களைக் கொச்சைப்படுத்துகிறது என்பதை இன்று காலை மீண்டும் படித்துப் பார்க்கும்போது தெரிகிறது. அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்.

என் போன்றவர்களை மனதில் வைத்துதான்  ‘எழுதலின் எழுதாமை நன்று’ என்று முன்னோர் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு சிறு வாழ்த்துரை” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. I find the site very interesting and the discussions are useful. I am 56 years old. Really I feel ignorant of not knowing the things happening in the world. Earning money is the primary task of my life so far. Once a man is financially settled then only he can spare time to see the surrounding. I am really amused whether the younger generation is interested in these type of discussions.

    1. சுவாரசியமா இருக்குன்னு சொன்னதே பெரிய விஷயம், இதுக்கு மேல வேற என்ன சொல்லணும், நன்றி.

      ஒரு நண்பர் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார், “நேரில் பேசும்போது நம்மோடு பேசுபவர் எத்தனை படித்திருக்கிறார், என்ன படித்திருக்கிறார் என்பதை பத்து நிமிஷத்தில் கண்டுபிடிச்சிடலாம், ஆனா இணையத்தில் ஒண்ணுமே படிக்காதவங்களைக்கூட ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருப்போம்,” என்று. அது உண்மைதான், இங்கே பேசும் விஷயம் பற்றி விபரம் தெரிந்தவர்களைவிட தெரியாதவர்கள்தான் அதிகம், அங்க இங்க கேள்விப்பட்டதை வச்சு ஒரு ஐடியாவுக்கு வந்து அதையே வெவ்வேறு வகையில் சொல்லிக்கிட்டு இருக்கோம், அதை எல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டாம். அதே போல் வயதும், உண்மையில் உங்களைவிட நான் வயது முதிர்ந்தவனாக இருக்கும் சாத்தியமும் உண்டு.

      பணம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை, பணம் சம்பாதிப்பதை முதன்மை கடமையாக வைத்திருப்பது மிக நல்ல விஷயம், வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.