கவனம்

வேறு ஒரு காரணத்தால் இந்த கட்டுரை நினைவுக்கு வந்தது.  பிலிப்பைன்ஸ் தேர்தலில் டூடர்டே வெற்றி பெற்றபோது எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். இதன் முதல் பத்தி, “In a short essay unassumingly titled, “The Right Use of School Studies with a View to the Love of God,” Simone Weil pointed to a link between evil and the repugnance for the exercise of our faculty of attention: “There is something in our soul which has a far more violent repugnance for true attention than the flesh has for bodily fatigue. This something is much more closely connected with evil than is the flesh. That is why every time we really concentrate our attention, we destroy the evil in ourselves,”” என்று துவங்குகிறது. அதன்பின் கட்டுரையை எழுதியவர் வெய்ல் எந்த அர்த்தத்தில் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை விசாரிக்கிறார். சிறிய கட்டுரைதான், படிப்பது அவ்வளவு கடினமல்ல- ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான், காரணம் இது ஏதோ மிஸ்டிக்கலான ஒரு உண்மையைச் சொல்வது போல் இருக்கிறது. படித்துப் பாருங்கள், சுவாரசியமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தால் வேறொரு விடை கிடைத்திருக்கும். நன்மையோ, தீமையோ, மனிதர்களுக்கு இரு பொறுப்புகள் இருக்கின்றன- கவனப்படுத்துதல், கவனம் செலுத்துதல். நாம் கவனம் செலுத்தவும் வேண்டும், கவனப்படுத்தவும் வேண்டும். ஆனால் எதை? இதைதான் மேற்கண்ட கட்டுரையாளர் கேட்கத் தவறி விட்டார்.

எதில் கவனம் செலுத்த வேண்டுமோ, எதை கவனப்படுத்த வேண்டுமோ, அதில் கவனம் நிலைத்திருக்க வேண்டும். ஈவில் என்று பெரிய எழுத்துக்களில் அழைக்கப்படும் சாத்தானிய சக்தியை மனித முயற்சிகளால் வெல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தீமை என்ற ஒன்று மானுட எல்லைகளுக்குள் நிகழ்வது என்றால்,  தொடர்ந்த, நிலையான, எச்சரிக்கையான, பாரபட்சமற்ற, ஆனால், முக்கியத்துவங்களை உணர்ந்த, பொறுப்புள்ள, கவனப்படுத்துதலும் கவனம் செலுத்துதலும் அதை தவிர்ப்பதில் பெருமளவு வெற்றி பெறும்.  எது கவனத்துக்குரியது என்ற கேள்வி இல்லாமல் கவனத்தைப் பேசுவது நம்மை ரொம்ப தூரம் கொண்டு செல்லாது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.