கஷ்கொட்டை மர ஞானோதயம்

அப்பா அல்லது அம்மா. அவர்களைப் பார்த்துக் கொள்வது அண்ணன். அவர்களில் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை, ஏதோ ஒரு தீவிரமான கண்டிஷன். என்ன மாதிரி ட்ரீட்மென்ட் எடுப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவசரத்துக்குச் செய்தேன் என்று அண்ணன் அதில் ஒரு ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விடுகிறான். ஆனால் நம் அனுபவத்தில் அந்த மாதிரியான சிகிச்சை மருத்துவர் கை வைக்காமல் இருப்பதை விட மோசமானது. இப்போது என்ன சொல்ல முடியும்? “இது ரொம்ப ரிஸ்க் ஆச்சே, என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்…” என்று சொல்லலாம். மற்றபடி, நாம் எந்த விஷயம் நடக்கக்கூடாது என்று பயப்படுகிறோமோ, அந்த விஷயம் நிச்சயம் நடக்கப் போகிறது என்று வாக்குவாதம் செய்து நிறுவுவதில் சந்தோஷம் இருக்குமா? நம் அச்சங்கள் மெய்ப்பிக்கப்படுவதை நாமே விரும்ப மாட்டோம்.

இதையே இன்னும் கொஞ்சம் விலக்கி வைத்துப் பார்க்கலாம். பெரியப்பா அல்லது அத்தை. இதே மாதிரி பிரச்சினை, இதே மாதிரி முடிவு. அப்போது இன்னும் கொஞ்சம் கோபப்படுவோம். “அவன் யார் பேச்சையும் கேக்க மாட்டான், தனக்கு தோணினதைச் செய்யறவன். பாவம் …” என்று ஆத்திரத்தில் திட்டுவோமே தவிர, அப்போதும்கூட அவர் நிலைமை ரொம்ப மோசமாகிவிடப் போகிறது என்று சொல்லிவிட்டு நாம் நினைத்தது நடப்பதை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டோம். ஒரு துயர முடிவு காத்திருக்கிறது என்று நாம் பயப்பட்டால், அதில் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்றால், காரியம் ஆனபின் வாக்குவாதம் செய்ய ஒன்றுமில்லை. நாம் நினைக்கிற மாதிரி நடந்து விடக்கூடாது என்று பிரார்த்தனை செய்யலாம், அவ்வளவுதான்.

பருவநிலை மாற்றம் என்றாலும் சரி, நடப்பு அரசியல் விவகாரங்கள் என்றாலும் சரி, விஷயம் ஒரு எல்லையைத் தாண்டிப் போனபின் ஒன்றும் பேசுவதற்கில்லை. “எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு,” என்று சொல்பவர்கள் இயல்பு நிலையில் இருக்கிறார்கள். நம் அச்சங்கள் நம்மை வேற லெவலுக்கு வீழ்த்தி விட்டன- “அறியாமை ஒரு பாபம்,” என்றுணர்த்தும் நரகம் வேறோர் உலகம். அழிவின் பெருந்துயர் யாருக்கு என்ன நடக்கிறது என்பதல்ல, நாம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் அதர்மச் செயல்கள்தான். அது தவிர்க்க முடியாத வகையில் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதில் துவங்குகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.